எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
வகுப்பு – 8
பாடம் – தமிழ்
இயல் 1
தலைப்பு – தமிழ்மொழி மரபு
1.கற்றல் விளைவு
தமிழ்மொழியின் மரபுகளை அறிந்து பயன்படுத்தும் திறன் பெறுதல்.
2.உணர்தல்
பழங்காலம் முதலே பின்பற்றப்பட்டு வரும் மரபு அறிதல். செய்யுளுக்கும்
மரபுக்கும் உள்ள தொடர்பைப் பற்றித் தொல்காப்பியம் வழி உணர்தல்.
3.முன்னறிவு
ஐம்பூதங்கள் குறித்து மாணவர்களைக் கூறச் செய்தல்.
இருதிணை,
ஐம்பால் குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கேட்டல்.
4.விதைநெல்
தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியம் என்னும் நூலில் பொருளதிகாரத்தின்
மரபியலில் 91, 92, 93 நூற்பாக்கள்.
5.விதைத்தல்
நிலம், நீர், தீ, காற்று, வானம் ஆகிய ஐம்பூதங்களால் இவ்வுலகில் தோன்றிய பொருள்கள்
குறித்து மாணவர்களுக்கு விளக்குதல். இருதிணை, ஐம்பால் குறித்து விளக்குதல்.
மரபு மாறினால்
பொருள் மாறிவிடும் என்பதை மாணவர்கள் மனதில் விதைத்தல்.
6.கருத்துப்புனைவு
7.கருத்துத்தூவானம்
பறவைகள், விலங்குகளின் ஒலிமரபுகளை அறிந்து வரல். அளபெடை குறித்து அறிமுகம்
செய்தல்.
8.விளைச்சல்
உலகம் எவற்றால் ஆனது?
செய்யுளில்
மரபுகளை ஏன் மாற்றக்கூடாது?
தொல்காப்பியம்
குறித்து விளக்குக.
பொருள்
கூறுக.
விசும்பு,
மரபு, திரிதல், தழாஅல்.
நம்
முன்னோர் மரபுகளைப் பின்பற்றியதன் காரணம் என்னவாக இருக்கும் என நீங்கள்
கருதுகிறீர்கள்?
9.சங்கிலிப்பிணைப்பு
விலங்குகளின் இளமைப் பெயர்களை அறிதல்.
தொல்காப்பியம்
குறித்து அறிதல்.