ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
வகுப்பு – 6
பாடம் – தமிழ்
பருவம் 1
இயல் 1
தலைப்பு – வளர்தமிழ்
1.கற்றல் விளைவு
தமிழ்மொழியின் தனிச்சிறப்புகளைப் பட்டியலிடும் திறன் பெறுதல்.
2.உணர்தல்
உலகச் செம்மொழிகளுள் ஒன்றாக விளங்கும் தமிழ் மொழியின் சிறப்புகளை உணர்தல்.
3.முன்னறிவு
பூவின் பருவ நிலைகள் குறித்து மாணவர்களைக் கூறச் செய்தல்.
மாணவர்கள்
அறிந்த தமிழ் எண்களை எழுதச் செய்தல்.
4.விதைநெல்
மூத்தமொழி – எளியமொழி – சீர்மை மொழி – வளமை மொழி – வளர்மொழி – புதுமை மொழி –
அறிவியல் தொழில்நுட்ப மொழி – தமிழ் எண்கள்.
5.விதைத்தல்
மொழிகள்,
செம்மொழிகள், பாரதியார் பாடல்வரி, தொல்காப்பியம், வலஞ்சுழி எழுத்துகள், அல்திணை,
பாகுஅல்காய், இலக்கிய, இலக்கண வளம், ஒரு சொல் பல பொருள், முத்தமிழ், கணினித் தமிழ்
புதிய கலைச்சொற்கள்- இவற்றை மாணவர்களுக்கு விளக்குதல்.
தமிழின்
பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.
7.கருத்துத்தூவானம்
இணையத் தமிழ் குறித்த செய்திகளை
எழுதி வரச் செய்தல்.
கவிஞர் அறிவுமதி அவர்கள் எழுதிய
பிறந்தநாள் வாழ்த்துப் பாடலைக் கொண்டு
பிறந்தநாள் வாழ்த்து கூறும் பழக்கத்தை
ஏற்படுத்துதல்.
8.விளைச்சல்
தமிழ் மூத்தமொழி எனப்படுவது எதனால்?
தமிழ்மொழியின் சிறப்பு குறித்து ஐந்து
வரிகளில் எழுதுக.
தமிழ் இனிய மொழி என்பதற்கான
காரணம் தருக.
மா
என்னும் சொல்லின் பொருள் ......................
தமிழ்மொழி வளர்மொழி என்பதை
உணர்கிறீர்களா? காரணம் தருக.
9.சங்கிலிப்பிணைப்பு
மாணவர்களின் வயதைத் தமிழ் எண்களில்
எழுதி வரச் செய்தல்.