ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
வகுப்பு – 7
பாடம் – தமிழ்
பருவம் 1
இயல் 1
தலைப்பு – சொலவடைகள்
1.கற்றல் விளைவு
சொலவடைகளில் பொதிந்துள்ள சமூக உண்மைகளைக் கண்டறியும் திறன் பெறுதல்.
2.உணர்தல்
பேச்சுமொழியின்
அழகியலையும் பண்பாட்டுக் கூறுகளையும் கொண்டிருக்கும் பொருட்செறிவுமிக்கச்
சொலவடைகளை உணர்தல்.
3.முன்னறிவு
அறிந்த சொலவடைகளை மாணவர்களைக் கூறச் செய்தல்.
பொம்மலாட்டம்
குறித்து மாணவர்களைக் கூறச் செய்தல்.
4.விதைநெல்
சொலவடைகளைக் கொண்ட பொம்மலாட்ட வடிவிலான ஆளுக்கு ஒரு வேலை என்ற கதைப்பகுதி.
5.விதைத்தல்
பள்ளி செல்ல
மறுத்த பையன் விளையாட வர்றியா? என எறும்பு, தேனீ, மாடு,
ஆமை, முயல், குட்டிச்சுவரு என அனைவரிடமும் வினவி அனைவரும் தங்களுக்கு வேலை
இருப்பதாகக் கூற குட்டிச்சுவரு இடிஞ்சு விழ பூச்சி, எறும்பு, வண்டு கடிக்க
மீண்டும் பள்ளி செல்கிறேன் எனக் கூறிய பையனின் கதையை மாணவர்களுக்கு விளக்குதல்.
அணை உடைஞ்சு போன வெள்ளம் அழுதாலும்
வராது, வெளச்சலுக்கும் வெள்ளாட்டுக்கும் சென்மப்பகை, எறும்பு ஊரக் கல்லும் தேயும்,
உழைக்கிற மாடுதான் ஊருக்குள்ள விலை போகும், அடைமழை விட்டாலும் செடிமழை விடாது,
நினைச்சதாம் கழுதை எடுத்ததாம் ஓட்டம், ஆயிரம் கலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி
போதும், அதிர அடிச்சா உதிர விளையும், அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே சொர்க்கம்,
அமாவாசை இருட்டில் பெருச்சாளிக்குப் போன இடமெல்லாம் வழிதான் போன்ற சொலவடைகளை மாணவர்கள்
மனதில் விதைத்தல்.
7.கருத்துத்தூவானம்
நாம் பயன்படுத்தும் சொலவடைகளை எழுதச் செய்தல்.
சொலவடைகளுடன்
கூடிய பொம்மலாட்டக் கதையைக் கூறி, வாசித்துப் பழகுதல்.
8.விளைச்சல்
பொம்மலாட்டக் காட்சிகளைச் சிறுகதையாக எழுதுக.
சொலவடைகள்
தோன்ற என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்?
9.சங்கிலிப்பிணைப்பு
பொம்மலாட்டக் கதைகளைக் கேட்டல்.
உங்கள்
பகுதியில் வழங்கி வரும் சொலவடைகளைத் தொகுத்தல்.
உனக்குப்
பிடித்த சொலவடையைத் தொடரில் அமைத்து எழுதுக.