எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
10-06-2024 முதல் 14-06-2024
2.பாடம்
தமிழ்
3.அலகு
1
4.பாடத்தலைப்பு
தமிழ் இன்பம் - கவிதைப்பேழை
5.உட்பாடத்தலைப்பு
தமிழ்மொழி வாழ்த்து
6.பக்கஎண்
2 - 4
7.கற்றல் விளைவுகள்
T-816 மொழி பற்றிய நுட்பங்களை அறிந்து அவற்றைத் தம் மொழியில் எழுதும்போது பயன்படுத்துதல் (சொற்களை மாற்றுவதன் மூலம் பாடலின் சந்தத்தில் ஏற்படும் ஓசை நயத்தைப் புரிந்துகொள்ளுதல்)
8.கற்றல் நோக்கங்கள்
செய்யுளைப்படித்து
அதன் நயங்களைப் போற்றும் திறன் பெறுதல்.
9.நுண்திறன்கள்
மக்களின்
பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையது மொழி. தமிழர்கள் தம் தாய்மொழியாகிய தமிழை
உயிராகக் கருதிப் போற்றி வந்ததை உணர்தல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2024/06/1.html
https://tamilthugal.blogspot.com/2021/06/8-8th-tamil-worksheet-with-pdf.html
https://tamilthugal.blogspot.com/2020/06/8-tamil-mozhi-vazhthu-8th-memo.html
https://tamilthugal.blogspot.com/2021/04/tamil-moli-valthu-8th-tamil-kuruvina.html
https://tamilthugal.blogspot.com/2022/06/1-8th-tamil-mindmap-unit-1-tamilmoli.html
https://tamilthugal.blogspot.com/2020/06/tamil-mozhi-vaazhthu-8th-memory-song.html
https://tamilthugal.blogspot.com/2019/06/8-mp3.html
https://tamilthugal.blogspot.com/2018/12/bharathiyar.html
https://tamilthugal.blogspot.com/2022/03/mahakavi-barathiyar-tamil-kaviyaranka.html
11.ஆயத்தப்படுத்துதல்
தமிழ்மொழியின்
பெருமைகளை மாணவர்களைக் கூறச் செய்தல்.
தமிழின் சிறப்பைக் கூறும் கவிதையைக்
கூறச் செய்தல்.
12.அறிமுகம்
பாரதியார் கவிதைகளை அறிமுகப்படுத்துதல்.
பாரதியை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
தமிழ்மொழி
வளமானது, புகழ்கொண்டது, அறியாமை இருளை நீக்குவது, உலகம் முழுவதையும் சிறப்படையச்
செய்வது, துன்பங்கள் நீக்கி ஒளிரச் செய்வது, மேன்மேலும் வளரும் தமிழ்மொழி வாழ்க
என்று பாரதி பாடுவதை மாணவர்களுக்கு விளக்குதல்.
தமிழின் பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல். பாரதியாக தன்னை நினைத்து மாணவர்களைப் பேசச் செய்தல்.
மனவரைபடம் மூலம்
பாடப்பொருளை விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
தமிழ்மொழி
வாழ்த்துப் பாடலை இசையுடன் மாணவர்களைப் பாடச் செய்தல்.
தமிழின் சிறப்புகளை அறிந்து வரல்.
15.மதிப்பீடு
LOT – தமிழ் எவற்றை அறிந்து வளர்கிறது?
பாரதியார்
நடத்திய இதழ்கள் எவை?
MOT
– பொருள் கூறுக.
வைப்பு, இசை, சூழ்கலி.
பாரதியார் தமிழை வண்மொழி என்று அழைக்கக் காரணம் என்ன ?
HOT
– உனக்குப் பிடித்த தமிழின் சிறப்பைக் கூறு.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.
17.தொடர்பணி
தமிழின் சிறப்புகளைத் தொகுத்தல்.
பாரதியார் குறித்து இணையம் மூலம் அறிதல்.