ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
10-06-2024 முதல் 14-06-2024
2.பருவம்
1
3.அலகு
1
4.பாடத்தலைப்பு
தமிழ்த்தேன் – கவிதைப்பேழை
5.உட்பாடத்தலைப்பு
இன்பத்தமிழ்
6.பக்கஎண்
2 - 4
7.கற்றல் விளைவுகள்
T-612 பல வடிவங்களில் எழுதப்பட்ட இலக்கியப் பாடப்பகுதிகளை உரிய ஒலிப்புமுறை , குரல் ஏற்ற இறக்கம் ஆகியவற்றோடு ஒப்புதல்.
8.கற்றல் நோக்கங்கள்
செய்யுளின் பொருளைச் சொந்த நடையில் எடுத்து உரைக்கும் திறன் பெறுதல்.
9.நுண்திறன்கள்
தமிழின் பெருமைகள்
குறித்து அறிதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2024/06/1-1.html
https://tamilthugal.blogspot.com/2019/08/blog-post_21.html
https://tamilthugal.blogspot.com/2021/06/6th-tamil-worksheet-with-pdf-inbatamil.html
https://tamilthugal.blogspot.com/2021/06/1-1-6th-tamil-kuruvina-vidai-inbatamil.html
https://tamilthugal.blogspot.com/2022/06/1-1-6th-tamil-mindmap-term-1-unit-1.html
https://tamilthugal.blogspot.com/2019/08/6.html
https://tamilthugal.blogspot.com/2019/02/bharathidasan.html
https://tamilthugal.blogspot.com/2018/05/blog-post_51.html
11.ஆயத்தப்படுத்துதல்
மாணவர்கள்
அறிந்த தமிழின் சிறப்பைக் கூறும் பாடலைக் கூறச் செய்தல்.
12.அறிமுகம்
பாரதிதாசன் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
தமிழ் அமுது போல
இனிமையானது, உயிருக்கு இணையானது, நிலவு போன்றது, நீர் போன்றது, மணமானது, ஊர்
போன்றது. பால் போன்றது, புலவர்க்கு வேல் போன்றது. வானம், தேன், தோள், வாள் போன்றது
தமிழ் என்பதை மாணவர்களுக்கு விளக்குதல்.
தமிழின் பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.
மாணவர்களைத் தமிழின் பெருமைகளைக் கூறச் செய்தல். பாரதிதாசன் பற்றிய குறிப்புகளை மாணவர்களுக்குக் கூறுதல். மாணவர்களைப் பாரதிதாசனாக, தன்னை எண்ணி பேசச் செய்தல்.
மனவரைபடம் மூலம்
பாடப்பொருளை விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல்.
தங்கள் ஐயங்களைப் போக்குதல். பிற உயிர்களை நேசிக்கும் பண்பைப் பெறுதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
இன்பத்தமிழ் பாடலை இசையுடன் மாணவர்களைப் பாடச் செய்தல்.
தமிழின்
சிறப்புகளை அறிந்து வரல்.
15.மதிப்பீடு
LOT – புரட்சிக்கவி என
அழைக்கப்படுபவர் யார்?
MOT
– பொருள் கூறுக.
விளைவு, அசதி, சமூகம்.
கவிஞர் தமிழை ஏன் வேலுடன் ஒப்பிடுகிறார்?
HOT – நீங்கள் தமிழை எதனோடு ஒப்பிடுவீர்கள்?
தமிழுக்கு நீ சூட்ட விரும்பும் பெயர்களை
எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.
17.தொடர்பணி
தமிழின் பெருமைகளைத் தொகுத்தல்.
தமிழ் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.