எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
வகுப்பு – 8
பாடம் – தமிழ்
இயல் 1
தலைப்பு – சொற்பூங்கா
1.கற்றல் விளைவு
ஓரெழுத்து ஒரு மொழியை அடிப்படையாகக் கொண்டு சொல்லாட்சித் திறனை வளர்க்கும்
திறன் பெறுதல்.
2.உணர்தல்
தமிழிலுள்ள ஓரெழுத்து ஒரு மொழிகள் பற்றியும் அவற்றிலிருந்து தோன்றி வளரும்
புதிய சொற்கள் பற்றியும் உணர்தல்.
3.முன்னறிவு
ஓரெழுத்து ஒரு மொழி குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச் செய்தல்.
குறில்
நெடில் எழுத்துகளை மாணவர்கள் கூறச் செய்தல்.
4.விதைநெல்
செந்தமிழ் அந்தணர்
இரா.இளங்குமரனார் எழுதிய தமிழின் தனிப்பெருஞ் சிறப்புகள் என்னும் நூலிலிருந்து
தொகுக்கப்பட்ட செய்திகள்.
5.விதைத்தல்
தேய்மானம் –
உயிரோட்டத்தமிழ் – சொல் – நெல் – தொல்காப்பியர் – நெட்டெழுத்து ஏழு – நன்னூலார் –
42 – யா, மா, ஈ – ஏ, ஏவலன், ஏகலை – எய்ப்பன்றி – எயினர் – எயினியர் ஆகியவை
குறித்து மாணவர்களுக்கு விளக்குதல்.
மொழிப்பற்றை மீட்டெடுத்தல் குறித்தும், மொழிப்பற்றை
வளர்ப்பது குறித்தும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.
7.கருத்துத்தூவானம்
ஓரெழுத்து ஒரு மொழிகளையும் அவற்றின் பொருளையும் எழுதிவரச் செய்தல்.
இளங்குமரனார்
குறித்த செய்திகளை அறிந்து வரல்.
8.விளைச்சல்
தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிகளின் பெருக்கம் குறித்து இளங்குமரனார் கூறும்
செய்திகளைத் தொகுத்து எழுதுக.
தமிழ்
மொழியின் வளர்ச்சிக்கு நாம் செய்ய வேண்டிய பணி என்ன?
9.சங்கிலிப்பிணைப்பு
ஓரெழுத்து ஒரு மொழிகள் இடம்பெறும் தொடர்கள் எழுதுதல்.