எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
வகுப்பு – 8
பாடம் – தமிழ்
இயல் 1
தலைப்பு – தமிழ் வரிவடிவ வளர்ச்சி
1.கற்றல் விளைவு
தமிழ் எழுத்துகளின் வளர்ச்சி நிலைகளை அறியும் திறன் பெறுதல்.
2.உணர்தல்
தமிழ் எழுத்துகளின் வரிவடிவங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உணர்தல்.
3.முன்னறிவு
எழுத்துகளின் தோற்றம் குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச் செய்தல்.
பெரியாரைப்
பற்றி மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச் செய்தல்.
4.விதைநெல்
எழுத்துகளின்
தோற்றம் – தமிழ் எழுத்துகள் – வரிவடிவ வளர்ச்சி – புள்ளிகளும் எழுத்துகளும் – உருவ
மாற்றம் – எழுத்துச் சீர்திருத்தத்தின் தேவை – எழுத்துச் சீர்திருத்தம் –
வீரமாமுனிவரின் எழுத்துச் சீர்திருத்தம் – பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம்.
5.விதைத்தல்
ஓவிய எழுத்து, ஒலி
எழுத்து நிலை, அச்சுக்கலை, வட்டெழுத்து, தமிழெழுத்து, கண்ணெழுத்து, துணைக்கால்,
இணைக்கொம்பு, புதிய வரிவடிவம் ஆகியவை குறித்து மாணவர்களுக்கு விளக்குதல்.
தந்தை பெரியாரின் எழுத்துச்
சீர்திருத்தம் குறித்தும், கணினிப் பயன்பாட்டிற்கு ஏற்ற மொழி தமிழ் என்பது
குறித்தும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.
7.கருத்துத்தூவானம்
தமிழ்மொழியின் பழைய வரிவடிவச்
சொற்களை எழுதிவரச் செய்தல்.
கல்வெட்டுச்
செய்திகளை அறிந்து வரல்.
8.விளைச்சல்
ஓவிய எழுத்து என்றால் என்ன?
எழுத்துச் சீர்திருத்தத்தின் தேவை குறித்து
எழுதுக.
எழுத்துகளின்
தோற்றம் குறித்து எழுதுக.
தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில்
ஈடுபட்டவர் .........................
தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு நாம் செய்ய
வேண்டிய பணி என்ன?
9.சங்கிலிப்பிணைப்பு
பெரியார் பற்றிய குறிப்புகளை அறிதல்.
தமிழின் கல்வெட்டு எழுத்துகளைத்
தொகுத்தல்.