ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
10-06-2024 முதல் 14-06-2024
2.பருவம்
1
3.அலகு
1
4.பாடத்தலைப்பு
அமுதத் தமிழ் – கவிதைப்பேழை
5.உட்பாடத்தலைப்பு
எங்கள் தமிழ்
6.பக்கஎண்
2 - 4
7.கற்றல் விளைவுகள்
T-713 பல்வேறு கதைகள் / பாடல்களைப் படித்துப் பல்வேறு வகையான
முறைகளையும் நடைகளையும் (வருணனை, உணர்வு சார்ந்தவை, இயற்கை வருணனை போன்றவை) இனங்காணல்.
8.கற்றல் நோக்கங்கள்
செய்யுளைப்படித்து
மையக்கருத்தை எடுத்து உரைக்கும் திறன் பெறுதல்.
9.நுண்திறன்கள்
மென்மையும்
இனிமையும் வளமையும் உடையது தமிழ்மொழி. வாழ்வுக்குத் தேவையான அன்பையும் அறத்தையும் கூறுவது
தமிழ் என்பதை உணர்தல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2024/06/1-1_5.html
https://tamilthugal.blogspot.com/2021/06/7-7th-tamil-worksheer-with-pdf-engal.html
https://tamilthugal.blogspot.com/2019/06/7-mp3.html
https://tamilthugal.blogspot.com/2021/06/1-1-7th-tamil-engalthamizh-term-1.html
https://tamilthugal.blogspot.com/2019/08/7.html
https://tamilthugal.blogspot.com/2022/06/1-1-7th-tamil-mindmap-term-1-unit-1.html
https://tamilthugal.blogspot.com/2019/08/7-mp3.html
https://tamilthugal.blogspot.com/2019/07/7-qr-code-video.html
https://tamilthugal.blogspot.com/2018/05/blog-post_51.html
11.ஆயத்தப்படுத்துதல்
தமிழ்மொழியின் சிறப்புகளை
மாணவர்களைக் கூறச் செய்தல்.
தமிழின் சிறப்பைக் கூறும் பாடலைக் கூறச்
செய்தல்.
12.அறிமுகம்
தமிழின் பெருமையைக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
தமிழ் அருள் நெறிகள் நிரம்பிய அறிவைத் தரும், தமிழர் பொருளுக்காக புகழ்வதில்லை, போற்றாதாரை இகழ்வது இல்லை. கொல்லாமையைக் குறிக்கோளாகவும் பொய்யாமையைக் கொள்கையாகவும் கொண்டு இன்புற்று வாழ உதவும்.
அன்பையும் அறத்தையும் தூண்டி அச்சம் போக்கும் தேன் போன்ற
மொழி தமிழ் என்பதை மாணவர்களுக்கு விளக்குதல்.
தமிழின் பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.
தமிழ் குறித்த தன் பார்வையை மாணவர்கள் கூறுதல்.
மனவரைபடம் மூலம்
பாடப்பொருளை விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
எங்கள் தமிழ் பாடலை
இசையுடன் மாணவர்களைப் பாடச் செய்தல்.
தமிழின் சிறப்புகளை அறிந்து வரல்.
15.மதிப்பீடு
LOT – நெறி என்னும் சொல்லின் பொருள் யாது?
காந்தியக்
கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?
MOT
– தமிழ்மொழியைக் கற்றவர்களின் இயல்புகளை எழுதுக.
பொருள் கூறுக.
குறி, விரதம், பொழிகிற.
HOT – கவிஞர் தமிழை ஏன் தேனுடன் ஒப்பிடுகிறார் ?
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.
17.தொடர்பணி
நாமக்கல் கவிஞர் பற்றிய குறிப்புகளை அறிதல்.
தமிழின் பெருமைகளைத் தொகுத்தல்.