ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
வகுப்பு – 6
பாடம் – தமிழ்
பருவம் 1
இயல் 1
தலைப்பு – கனவு பலித்தது
1.கற்றல் விளைவு
தன்னம்பிக்கையுடன் தனக்கான இலக்குகளை உருவாக்கும் திறன் பெறுதல்.
2.உணர்தல்
தமிழில் இயல், இசை, நாடகம் மட்டுமல்ல அறிவியலும் உண்டு. அறிவியல் செய்திகளை
நம் முன்னோர்கள், இலக்கியங்கள் வாயிலாக உணர்தல்.
3.முன்னறிவு
கடிதம் குறித்து மாணவர்களைக் கூறச் செய்தல்.
மாணவர்கள்
அறிந்த அறிவியல் செய்திகளை எழுதச் செய்தல்.
4.விதைநெல்
தமிழ் வழியில்
கற்று அறிவியல் அறிஞர் – தமிழில் பயின்ற அறிவியல் அறிஞர்கள் – தமிழ்
இலக்கியங்களில் அறிவியல் செய்திகள் – இவை உள்ளடங்கிய கடிதக் கருத்துகள்.
5.விதைத்தல்
ஐம்பூதங்கள்,
ஆறறிவு குறித்து தொல்காப்பியர் கூறுபவை – ஔவையார் பாடலின் கருத்து –
பதிற்றுப்பத்து, நற்றிணையில் உள்ள மருத்துவச் செய்திகள் – கலீலியோவின் கருத்து
கபிலரின் திருவள்ளுவமாலை - இவற்றை மாணவர்களுக்கு விளக்குதல்.
தமிழின்
பெருமைகளையும் தமிழரின் அறிவியல் அறிவையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.
7.கருத்துத்தூவானம்
தன்னம்பிக்கை தரும் செய்திகளையும் கதைகளையும் மாணவர்களுக்குக் கூறுதல்.
உங்களின்
எதிர்காலக் கனவையும் அதற்கான காரணத்தையும் கூறுக என மாணவர்களிடம் கேட்டல்.
8.விளைச்சல்
கனவு பலித்தது என்ற தலைப்பு இக்கதைக்கு எவ்வாறு பொருந்துகிறது என்பதனை
விளக்குக.
இன்சுவையின்
எண்ணம் நிறைவேறக் காரணங்களாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?
9.சங்கிலிப்பிணைப்பு
மாணவர்களின் எதிர்காலக் கனவு குறித்து ஒரு கடிதம் எழுதி வரச் செய்தல்.
தமிழில்
பயின்ற சாதனையாளர்கள் குறித்த தகவல்களைத் தொகுத்தல்.