ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
வகுப்பு – 7
பாடம் – தமிழ்
பருவம் 1
இயல் 1
தலைப்பு – பேச்சுமொழியும் எழுத்துமொழியும்
1.கற்றல் விளைவு
பேச்சு மொழி, எழுத்து மொழியின் நுட்பங்களை அறியும் திறன் பெறுதல்.
2.உணர்தல்
தமிழ்மொழியின் பேச்சுமொழி, எழுத்துமொழி என இரண்டு கூறுகளையும் அவற்றிற்கு
இடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை உணர்தல்.
3.முன்னறிவு
எழுத்துமொழியின் பேச்சு வடிவங்களை மாணவர்களைக் கூறச் செய்தல்.
பேச்சுமொழியின் எழுத்து
வடிவங்களை மாணவர்களைக் கூறச் செய்தல்.
4.விதைநெல்
மொழியின் வடிவங்கள் – பேச்சுமொழி – பேச்சுமொழியில் பொருள் வேறுபாடு –
வட்டாரமொழி – கிளை மொழி – எழுத்துமொழி – பேச்சுமொழியும் எழுத்துமொழியும்.
5.விதைத்தல்
மொழியின்
முதல்நிலை, இரண்டாம் நிலை, பேச்சுமொழியில் உள்ள பொருள் வேறுபாடு, அழுத்தம்
கொடுத்தல், வட்டார வழக்குச் சொற்கள், கிளை மொழிகள், உலக வழக்கு, இலக்கிய வழக்கு,
இரட்டை வழக்கு மொழி என்பதை மாணவர்களுக்கு விளக்குதல்.
தமிழ்
இரட்டை வழக்கு மொழி என்பதை மாணவர்கள் மனதில் விதைத்தல்.
7.கருத்துத்தூவானம்
நாம் பயன்படுத்தும் பேச்சு வழக்குச்
சொற்களை எழுத்து வழக்கில் எழுதச் செய்தல்.
குரல்
ஏற்றத்தாழ்வுடன் பேசிப் பழகுதல்.
8.விளைச்சல்
பேச்சு மொழி என்றால் என்ன?
கிளை
மொழிகள் எவ்வாறு உருவாகின்றன?
பேச்சுமொழி, எழுத்துமொழி -
வேறுபாடுகளை எழுதுக.
ஒலியின்
வரிவடிவம் ............... ஆகும்.
இலக்கியங்கள் இன்னும் அழியாமல் வாழ
என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்?
9.சங்கிலிப்பிணைப்பு
சிறந்த பேச்சாளர்களின் மேடைப்
பேச்சுகளைக் கேட்டல்.
வட்டார
வழக்குச் சொற்களைத் தொகுத்தல்.