கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, August 30, 2023

+1 காலாண்டுத்தேர்வு கால அட்டவணை 2023 QUARTERLY EXAM TIME TABLE 11TH

காலாண்டுத்தேர்வு கால அட்டவணை 12 ஆம் வகுப்பு 2023 QUARTERLY EXAM TIME TABLE 12TH

வகுப்பு 10, 11, 12 காலாண்டுத் தேர்வு பாடத்திட்டம் 10th +1, +2 quarterly exam syllabus all subjects

கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா கவிதை 2 Kalaignar Karunanithi Nootrandu Vizha Kavithai 2

கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா கவிதை 1 Kalaignar Karunanithi Nootrandu Vizha Kavithai 1

கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா கவிதை 2

 kalaignar karunanidhi kavithai 

கலைஞர் நூற்றாண்டு விழா கவிதை 2

 

போர்ப்பறை ஒலிக்கும் புலிகள் கூட்டத்தே

ஆர்ப்பரிக்கும் சூரியனே!

பார்ப்பனியக் கூட்டத்தின் சனாதனத்தை

வேரோடு பெயர்த்த வித்தகனே!

சூர்ப்பனகையை அரக்கி என்ற சுய லாபக் கூட்டத்தின்

முகத்திரை கிழித்த இராவணனே!

வேர்ப்புழுவாய்த் தமிழ்நாட்டின் வளர்ச்சிதனை

விழுங்குகின்ற மூடநம்பிக்கை எரித்தவனே!

ஈரோட்டுப் பெரியாரின் தேரோட்டியானவனே!

பார் போற்றும் அண்ணாவின் படைத்தளபதி நீதானே?

யார் மட்டும் நீ காட்டும் பேரன்பால் ஒரு கூட்டம்உன்

பேர் போற்றும் தம்பி யராய்க் கூடுதய்யா

கடலில் தூக்கி எறிந்தாலும் நீ கட்டுமரம்

காவிரி மருத்துவமனையில் போட்ட போதும் நீ காட்டுமரம்

உடலில் ஓடுங் குருதியெல்லாம் தமிழ் வாசம்

உலகத்திலேயே உன் பேனா மட்டும் தான் தமிழ் பேசும்!

மூவேந்தர் போற்றி வளர்த்த முத்தமிழை

மூவுலகம் போற்றச் செம்மொழி ஆக்கியவனே!

தார்வேந்தர் தன்னடிமை வழக்கமெல்லாம்

கண்மூடிப் போகும் வண்ணம் செய்தவனே!

பாவேந்தர் புனைந்திட்ட கவிதைக் கருவை

நாவேந்தி மேடையில் நர்த்தனம் ஆடியவனே!

பூவேந்தும் உன் புன்சிரிப்பால் தமிழ்நாட்டை

ஐம் முறை ஆண்டவனே!

ஓயா உழைப்பால் உறங்குகிறாயோ-உன்

அண்ணனின் மொழி கேட்டுக் கிறங்குகிறாயோ?

தாயாய்த் தமிழை வளர்த்த தமிழினத் தலைவா

உன்னை ஓயாப் புகழ் கொண்டு எந்நாளும் பாடிடும் எந்நா

கவிஞர் கல்லூரணி முத்து முருகன்

9443323199

கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா கவிதை 1

 kalaignar kavithai 1

கலைஞர் நூற்றாண்டு விழா கவிதை 1

 

தஞ்சை வளநாடு தந்த தனிச்சொத்து

அஞ்சுகத்தாய் வயிற்றுதித்த அருவித்து

வெஞ்சமர் களங்கண்ட வீர வேங்கை

நெஞ்சமெலாம் நிறைத்திருப்பார் தமிழணங்கை

கொஞ்சுமொழி பேசிடுமே காதற்கவிதை

வஞ்சகரைக் கருவறுக்கும் வீரக்கவிதை

தஞ்சமென வந்தோரின் தானைத் தலைவர்

அஞ்சிடாத சிங்கமாம் அவர்தான் கலைஞர்

சுயமரியாதைச் சுடர் விட்ட உதயசூரியன்

பயமறியாது பகை முடிப்பதிலோ காரியன்

நயமான வசனங்களை நாளுந் தந்தவன்

நியாயமான சிந்தனைகளின் நல் வித்தவன்

ஈரோட்டுப் பெரியாரின் இனமான வீரன்

ஏரோட்டும் பாமரனுக் கென்றுமிவன் தோழன்

பார் போற்றும் பேரறிஞர் அண்ணாவின் தம்பி

ஊர் போற்றச் செந்தமிழை உலவவிட்ட தும்பி

வாழ்வழிக்க வந்த வடக்கை அடக்கிய பேனா

வீழ்ந்திடாத வீரம் தான் கருணாநிதி என்பேனா

ஆழ்ந்த கருத்துக்காய்ப் பராசக்தியில் திறந்ததிந்தப் பேனா

ஆழ்ந்திருக்கிற தமைதியாய்க் கடற்கரையி லென்பேனா?

-              கவிஞர் கல்லூரணி முத்து முருகன்

                9443323199

Monday, August 28, 2023

சிறார் திரைப்பட மன்றம் பதிவேடு pdf

பதிவிறக்கு/DOWNLOAD

Children movie club record pdf

நான் விரும்பும் தலைவர் வ.உ.சி பொதுக்கட்டுரை தமிழ் வகுப்பு 7 NAAN VIRUMPUM THALAIVAR V.O.C 7th essay

நான் விரும்பும் தலைவர் வ.உ.சிதம்பரனார் ஏழாம் வகுப்பு தமிழ்க் கட்டுரை pdf

 பதிவிறக்கு/DOWNLOAD


7th Tamil katturai nan virumbum thalaivar v.o.c. essay in tamil my favourite leader

தமிழ் மன்றம் இலக்கியப் போட்டிகள் முடிவு விவரப் படிவம் pdf

பதிவிறக்கு/DOWNLOAD

தயாரிப்பு
திரு ரா.தாமோதரன்,
தமிழாசிரியர்,
கும்பகோணம்.

Sunday, August 27, 2023

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு செப்டம்பர் 9

 10th Tamil Model Notes of lesson

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

09-09-2024 முதல் 13-09-2024

2.பாடம்

தமிழ்

3.அலகு

1-6

மதிப்பீடு

          காலாண்டுத் தேர்விற்கு மாணவர்களைத் தயார் செய்தல்.

திருப்புதல் வினாக்கள்

  •     தமிழ்மொழிக்காகக் கலைஞர் செய்த சிறப்புகளுள் நீங்கள் அறிந்துகொண்ட இரண்டினை எழுதுக.

·         தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?

·         தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுறமொழியும் பாங்கினை விளக்குக.

·         சோலைக்(பூங்கா) காற்றும் மின்விசிறிக் காற்றும் பேசிக்கொள்வதுபோல் ஓர் உரையாடல் அமைக்க.                   தமிழ்த்துகள்

·         மழைநின்றவுடன் புலப்படும் காட்சியை வருணித்து எழுதுக.                         குறிப்பு : இலைகளில் சொட்டும் நீர் – உடலில் ஓடும் மெல்லிய குளிர் – தேங்கிய குட்டையில் சளப் தளப் என்று குதிக்கும் குழந்தைகள் – ஓடும் நீரில் காகிதக் கப்பல்.

·         கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்தலை கூத்தராற்றுப்படை எவ்வாறு காட்டுகிறது?

·         வேலொடு நின்றான் இடுஎன்றது போலும்

கோலொடு நின்றான் இரவு     

- குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.                       தமிழ்த்துகள்

·         மாளாத காதல் நோயாளன் போல் என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.

·         மன்னன் இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்புச் செய்தது ஏன்?  விளக்கம் தருக.                          தமிழ்த்துகள்

·         உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார். அவரிடம் கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?

·         வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.

·         முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

·         இன்மை புகுத்தி விடும்.

·         இக்குறட்பாவில் அமைந்துள்ள பொருள்கோளின் வகையைச் சுட்டி விளக்குக.

·         ’கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது, மலைப் பகுதிகளில் மலைப் பயிர்களும் நிலப்பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன’ -  காலப் போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்தபோதிலும், பண்டைத் தமிழரின் திணைநிலைத் தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும் அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக.

·         இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்பது குறித்த சிந்தனைகளை முன்வைத்து எழுதுக.

·         புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது’ இதுபோல் இளம்பயிர்வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு செப்டம்பர் 2

  9th Tamil Model Notes of lesson

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

02-09-2024 முதல் 06-09-2024

2.பாடம்

தமிழ்

3.அலகு

1-4

மதிப்பீடு

          காலாண்டுத் தேர்விற்கு மாணவர்களைத் தயார் செய்தல்.

திருப்புதல் வினாக்கள்

·         கண்ணி என்பதன் விளக்கம் யாது?

·         நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது?

·         செய்வினையைச் செயப்பாட்டு வினையாக மாற்றும் வினைகள் இரண்டனை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

·         கணினி சார்ந்து நீங்கள் அறிந்த எவையேனும் ஐந்து தமிழ்ச் சொற்களைத் தருக.

·         தமிழோவியம் கவிதையில் உங்களை மிகவும் ஈர்த்த அடிகள் குறித்து எழுதுக.

·         கூவல் என்று அழைக்கப்படுவது எது?

·         உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே - குறிப்புத் தருக.

·         உங்களது பள்ளியைச் சுற்றியுள்ள நீர் நிலைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

·         நீங்கள் வாழும் பகுதியில் ஏறுதழுவுதல் எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகிறது?

·         ஏறுதழுவுதல் நிகழ்விற்கு இலக்கியங்கள் காட்டும் வேறு பெயர்களைக் குறிப்பிடுக.

·         தொல்லியல் சான்றுகள் காணப்படும் இடங்களை அகழாய்வு செய்ய வேண்டும். ஏன்?

·         ஏறுதழுவுதல் குறித்துத் தொல்லியல் சான்றுகள் கிடைத்த இடங்களைப் பட்டியல் இடுக.

·         கூட்டுப்புழுவை எடுத்துக்காட்டி கவிஞர் உணர்த்தும் கருத்துகளை எழுது.

·         செயற்கைக்கோள் ஏவு ஊர்தியில் பொருத்தும் செயலியைப் பற்றி திரு. சிவன் கூறுவது யாது?

·         இணைய வழியில் இயங்கும் மின்னணு இயந்திரங்கள் எவையேனும் ஐந்தினைக் குறிப்பிடுக.

·         பள்ளியில் நடைபெற்ற இலக்கிய மன்ற விழா நிகழ்ச்சி செய்திகளைத் திரட்டி தொகுப்புரை உருவாக்குக.

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு வேற்றுமை

 8th Tamil Model Notes of lesson 

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

02-09-2024 முதல் 06-09-2024

2.பாடம்

தமிழ்

3.அலகு

4

4.பாடத்தலைப்பு

கல்வி கரையில – கற்கண்டு.

5.உட்பாடத்தலைப்பு

வேற்றுமை

6.பக்கஎண்

84-92

7.கற்றல் விளைவுகள்

T-816 மொழி பற்றிய நுட்பங்களை அறிந்து அவற்றைத் தம் மொழியில் எழுதும் போது பயன்படுத்துதல் (சொற்களை மாற்றுவதன் மூலம் பாடலின் சந்தத்தில் ஏற்படும் ஒசை நயத்தைப் புரிந்து கொள்ளுதல்).

8.கற்றல் நோக்கங்கள்

கொடுக்கப்பட்ட சொற்றொடர்களில் எழுவாய், செயப்படுபொருள் பயனிலைகளை அட்டவணைப்படுத்தி எழுதுதல்

9.நுண்திறன்கள்

வேற்றுமை உருபுகளையும் அவற்றின் பொருள்களையும் அட்டவணைப்படுத்தி எழுதுதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

 https://tamilthugal.blogspot.com/2021/08/4-vetrumai-8th-tamil-ilakkanam.html

https://tamilthugal.blogspot.com/2020/02/vetrumai.html

https://tamilthugal.blogspot.com/2020/01/8-2-1.html

11.ஆயத்தப்படுத்துதல்

வேற்றுமை உருபுகள் இல்லாத தொடர்களைக் கூறி பொருள் வேறுபடுவதை உணர்த்துதல்.

12.அறிமுகம்

வேற்றுமை வகைகளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          வேற்றுமை குறித்து மாணவர்களுக்கு விளக்குதல். வேற்றுமை வகைகள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.

          வேற்றுமை வரும் பொருள்களை மாணவர்களுக்குப் புரிய வைத்தல்.

          வேற்றுமை உருபுகளையும் சொல்லுருபுகளையும் பொருளையும் மாணவர்களுக்கு விளக்குதல்.

மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

வேற்றுமையின் முக்கியத்துவத்தை மாணவர்கள் உணர்தல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது ..............................

          ந.சி.வி – உடனிகழ்ச்சிப் பொருள் என்றால் என்ன?

                   எழுவாய் வேற்றுமையை விளக்குக.

     உ.சி.வி – ஆன்ற குடிப்பிறத்தல் பாடப்பகுதியில் உள்ள ஒரு பத்தியிலிருந்து வேற்றுமை உருபுகளை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

நான்காம் வேற்றுமைக்குப் புதிய எடுத்துக்காட்டுகளை எழுதுக.

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு செப்டம்பர் 2

  7th Tamil Model Notes of lesson 

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

02-09-2024 முதல் 06-09-2024

2.பருவம்

1

3.அலகு

1, 2, 3

4.மதிப்பீடு வினாக்கள்

          முதல் பருவத் தேர்வுக்கு மாணவர்களைத் தயார்படுத்துதல்.

  • கவிஞர் தமிழை ஏன் தேனுடன் ஒப்பிடுகிறார்?
  • காந்தியக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?
  • தமிழ்நாட்டின் இயற்கை வளங்களாக கவிஞர் கூறுவன யாவை?
  • எட்டுத்தொகை நூல்களை எழுதுக.
  • தமிழில் அற இலக்கியங்கள் மிகுதியாகத் தோன்றக் காரணம் என்ன?
  • பேச்சு மொழி என்றால் என்ன?
  • கிளை மொழிகள் எவ்வாறு உருவாகின்றன?
  • ஒலியின் வரிவடிவம் ............... ஆகும்.
  • இலக்கியங்கள் இன்னும் அழியாமல் வாழ என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்?
  • பொம்மலாட்டக் காட்சிகளைச் சிறுகதையாக எழுதுக.
  • சொலவடைகள் தோன்ற என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்?
  • குற்றியலுகரம் என்னும் சொல்லைப் பிரித்து விளக்கம் தருக.
  • குற்றியலிகரம் என்றால் என்ன?
  • காட்டின் பயன்களாகக் கவிஞர் சுரதா கூறுவன யாவை?
  • விடுதி என்னும் சொல்லின் பொருள் யாது?
  • காட்டை இயற்கை விடுதி என்று கவிஞர் கூறக் காரணம் என்ன?
  • பெருங்காற்றில் வீழ்ந்த மரத்தைக் கவிஞர் ஏன் பார்க்க விரும்பவில்லை?


ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு செப்டம்பர் 2

 6th Tamil Model Notes of lesson 

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

02-09-2024 முதல் 06-09-2024

2.பருவம்

1

3.அலகு

1, 2, 3

4.மதிப்பீடு வினாக்கள்

          முதல் பருவத் தேர்வுக்கு மாணவர்களைத் தயார்படுத்துதல்.

·         பாரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ள பெயர்கள் யாவை?

·         நீங்கள் தமிழை எதனோடு ஒப்பிடுவீர்கள்?

·         தமிழ் மொழியின் செயல்களாகக் கவிஞர் கூறுவன யாவை?

·         செந்தமிழின் புகழ் எங்கெல்லாம் பரவ வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்?

·         தமிழ் மூத்த மொழி எனப்படுவது எதனால்?

·         நீங்கள் அறிந்த தமிழ்க் காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

·         சிலப்பதிகாரக் காப்பியம் எவ்வெவற்றை வாழ்த்தித் தொடங்குகிறது?

·         இயற்கை போற்றத்தக்கது ஏன்?

·         காணிநிலம் பாடலில் பாரதியார் வேண்டுவன யாவை?

·         பாரதியார் இயற்கையின் மீது கொண்டுள்ள விருப்பம் குறித்து எழுதுக.

·         பறவைகள் எக்காரணங்களுக்காக இடம்பெயர்கின்றன?

·         வலசையின் போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் யாவை?

·         முதல் எழுத்துகள் என்பவை யாவை? அவை எதனால் அவ்வாறு அழைக்கப்படுகின்றன?

·         சார்பெழுத்துகள் எத்தனை? அவை யாவை?

·         சொற்களில் ஆய்த எழுத்து எவ்வாறு இடம்பெறும்?

தமிழ்த்துகள்

Blog Archive