ninaivu nallathu vendum tamil speech katturai essay for competition
நினைவு நல்லது வேண்டும்
தாயே தமிழே தரணி ஆள்பவளே!
உலக மொழிகளுக்கு எல்லாம் மூத்தவளே! முச்சங்கம் கண்டவளே! மூவேந்தர் ஆண்ட மண்ணில் நாவேந்தி
வந்திருக்கிறேன்! அருள்வாய் தாயே!
ஆன்றவிந்தடங்கிய அவைத்தலைவர்
அவர்களே சான்றோர் பெருமக்களே! அறிவுக்கண் திறக்கும்
ஆசிரியர்களே, அன்பு உடன்பிறப்புகளே! உங்கள் அனைவருக்கும் அடியேனின் அன்பு வணக்கங்கள். தமிழ்த்துகள்
நீ என்னவாக வேண்டும் என்று
நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்கிறது கீதை
எண்ணிய எண்ணியாங்கு எய்துவர்
எண்ணியர்
திண்ணியராகப் பெறின் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. நான் நினைத்தேன்
நடந்து விட்டது என்று நாமே சில நேரங்களில் சொல்வது உண்டு. இது தெய்வச் செயலோ அல்லது
அதுவாக நிகழ்ந்ததா? என்று சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டும். நம்
எண்ணங்களுக்கு அவ்வளவு சக்தி உள்ளது. தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி
வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றுமில்லை தமிழ்த்துகள்
என்ற கண்ணதாசனின்
வரிகள் என் நினைவுக்கு வருகின்றன. எண்ணங்களே மனிதனை உயர்த்துகின்றன. நல்ல எண்ணங்கள்
நம் மனதில் தோன்றினால் நம் வாழ்வு உயரும்; தீய எண்ணங்கள் நம் மனதில் தோன்றினால் நம் வாழ்வு
கேள்விக்கு உரியதாகிவிடும்.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
வாடினேன் என்று
கூறினார் வள்ளலார். அன்பின் வழி நின்ற அவருடைய வழிபாடு அனைவராலும் போற்றப்பட்டது.
அந்தக் கருணை உள்ளமே கடவுளின் இல்லம் என்று கொண்டாடப்பட்டது. தமிழ்த்துகள்
என் கடன் பணி செய்து கிடப்பதுவே
என்று கூறினார் அப்பர் என்ற திருநாவுக்கரசர்.
சைவ சமயக் குரவர்கள் நால்வரில் தொண்டுகள் செய்தே இறைவன் அடி சேர்ந்தவர் அவர் ஆவார்.
இறைவனைத் தன் மனதுக்குள்ளேயே
நினைத்து கோவில் கட்டி வழிபாடு செய்தவர் மனக்கோயில் கொண்ட மாணிக்கம் பூசலார் நாயனார். அவர்கள் கதை உலகு அறிந்த ஒன்று ஆகும். எண்ணத்தில் இறைவன் நிறைந்து விட்டால் செயல்களில் தூய்மை
இருக்கும், யாருக்கும் எந்தத் தீங்கும் நினைக்காத நெஞ்சம் வேண்டும் என்கிறார் மகாகவி பாரதியார்.
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி
வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும் நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும். தமிழ்த்துகள்
நம் வாழ்வில் சிலரைச்
சில நேரம் சந்திக்கும்போது கூட நான் நினைத்தேன்; நீங்கள் வந்து விட்டீர்கள் என்று கூறி பெருமைப்படுவது
உண்டு.
பிறவியில் உயர்ந்தது
மனிதப் பிறவி. ஆறு அறிவு படைத்த மனிதன் இவ்வுலகில் வாழ்ந்ததற்குப் பொருள் வேண்டும்.
தமிழ்த்துகள்
நம் எண்ணங்கள் நல்லவையாக
இருந்தால் நம் பணி நாம் மறைந்த பிறகும் போற்றப்படும். இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்; இவர் போல யார்
என்று ஊர் சொல்ல வேண்டும் என்கிறார் கண்ணதாசன்.
நல்லதோர் வீணை செய்தே அதை தமிழ்த்துகள்
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி என்னைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்து
விட்டாய் என்று
பாரதி சக்தியைப் பார்த்துக் கேள்வி கேட்கிறார். தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி
வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
உயர்ந்த எண்ணங்கள்
மனிதனை மாமனிதன் ஆக்குகின்றன. அரசனாக இருந்த சித்தார்த்தர் உயர்ந்த எண்ணங்களால் புத்தராக மாறுகிறார். நரேந்திரனாக இருந்த ஒருவர் சுவாமி விவேகானந்தனாக மாறுகிறார்.
எல்லாவற்றுக்கும் உயர்ந்த எண்ணங்களே காரணம் தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்தபோது
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியாக இருந்தவர் தேசப்பிதாவாக உயர்ந்தது நமக்கெல்லாம்
தெரியும். இதற்கு அவரது உயர்ந்த எண்ணங்களே காரணமாக அமைந்தன. இன்றைக்கும் உலகமெல்லாம்
கொண்டாடும் ஒப்பற்ற தலைவர் அவர்.
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி
வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
நன்னம்பிக்கை, நல்லறிவு,
நன்னடத்தை என்ற மூன்று
கொள்கைகளை திரி ரத்தினங்கள் என்று சமண சமயம் போதிக்கிறது. தமிழ்த்துகள்
மனமது செம்மையானால்
மந்திரம் ஜெபிக்க வேண்டாம் என்பது நம்முடைய முன்னோர்கள் மொழி ஆகும். நினைவுகளால் ஆளப்படுவதே
மனிதன் வாழ்க்கை. அந்த நினைவுகள் இனிமையானதாக இருக்க வேண்டும் என்றால் எண்ணங்கள் நல்லவையாக
இருக்க வேண்டும் என்பது உறுதி. தூய எண்ணம் கொள்வோம், நம் மனத்தைக் கடவுளின் இருப்பிடமாக
ஆக்குவோம்!
பாடையிலே படுத்து ஊரைச்
சுற்றும் போதும்
பைந்தமிழில் அழும் ஓசை
கேட்க வேண்டும் தமிழ்த்துகள்
ஓடையிலே என் சாம்பல் கரையும்
போதும்
ஒண்டமிழே சலசலத்து ஓட வேண்டும்
என்ற யாழ்ப்பாணத்துக் கவியின் வரிகளைச் சொல்லி தமிழ்த்துகள்
வல்லமை தாராயோ இந்த மாநிலம்
பயனுற வாழ்வதற்கே என்ற பாரதியின்
வரிகளை நினைவூட்டி நல்ல வாய்ப்புக்கு நன்றி பாராட்டி அமைகிறேன் நன்றி வணக்கம்.
- கவிஞர்
கல்லூரணி முத்து முருகன் 9443323199 தமிழ்த்துகள்
மு.முத்துமுருகன், தமிழாசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி,
ம.இரெட்டியபட்டி. தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள்,
தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்