கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, October 30, 2023

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பள்ளி மறுதிறப்பு, ஓரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்

 7th Tamil model notes of Lesson

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

06-11-2023 முதல் 10-11-2023

2.பருவம்

2

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

ஓதுவது ஒழியேல் – விரிவானம், கற்கண்டு

5.உட்பாடத்தலைப்பு

பள்ளி மறுதிறப்பு, ஓரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்

6.பக்கஎண்

36-43

7.கற்றல் விளைவுகள்

T-703 தாம் பார்த்த ஓவியம் அல்லது காட்சியின் அனுபவத்தை தம் சொந்த சொற்களில்/ சைகை மொழியில் வெளிப்படுத்தல்.

T-713 பல்வேறு கதைகள் / பாடல்களைப் படித்துப் பல்வேறு வகையான முறைகளையும் நடைகளையும் (வருணனை, உணர்வு சார்ந்தவை, இயற்கை வருணனை போன்றவை) இனங்காணல்.

8.கற்றல் நோக்கங்கள்

கதை படிக்கும் ஆர்வத்தை உருவாக்குதல்.

மொழியில் உள்ள எழுத்துகள் சொற்கள் ஆகியவற்றின் கட்டமைப்பை அறிந்து பயன்படுத்துதல்.

9.நுண்திறன்கள்

பள்ளிக்கல்வியின் அவசியம் அறிதல்.

பகுபத உறுப்புகள் குறித்து அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்




இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2023/10/blog-post_55.html

https://tamilthugal.blogspot.com/2023/10/blog-post_33.html

தமிழ்த்துகள்: ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 2 இயல் 2 பள்ளி மறுதிறப்பு மனவரைபடம் 7th tamil mindmap term 2 unit 2 (tamilthugal.blogspot.com)

தமிழ்த்துகள்: ஓரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம் ஏழாம் வகுப்பு தமிழ் இலக்கண வினாவிடை பருவம் 2 இயல் 2 PAKUPATHAM (tamilthugal.blogspot.com)

தமிழ்த்துகள்: ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 2 இயல் 2 ஓரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம் மனவரைபடம் 7th tamil mindmap term 2 unit 2 (tamilthugal.blogspot.com)

தமிழ்த்துகள்: ஓரெழுத்து ஒரு மொழி, பகுபதம், பகாப்பதம் வகுப்பு 7 பருவம் 2 இயல் 2 தமிழ் இலக்கணம் 7th tamil ilakanam pahupatham, pakaapatham, oreluthu orumoli (tamilthugal.blogspot.com)

தமிழ்த்துகள்: ஓரெழுத்து ஒரு மொழிகள் தமிழ் இலக்கணம் பாடமும் தேர்வும் TAMIL ILAKKANAM OREZHUTHU ORUMOZHI ONLINE TEST (tamilthugal.blogspot.com)

தமிழ்த்துகள்: ஓரெழுத்து ஒருமொழிகள் ORELUTHU ORU MOLIKAL (tamilthugal.blogspot.com)

11.ஆயத்தப்படுத்துதல்

விடுமுறையில் பார்த்த பணிகளைக் கூறச்செய்தல்.

மாணவர்கள் அறிந்த ஓரெழுத்து ஒருமொழிகளைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

கல்வியின் சிறப்பு கூறும் கதையைக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

பதம் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          பள்ளி மறுதிறப்பு கதையைக் கூறுதல். கல்வியின் சிறப்பை உணர்தல். கல்வியின் அவசியம் குறித்து மாணவர்கள் அறிந்த கதைகளைக் கூறச் செய்தல். கல்வியின் சிறப்புகளை மாணவர்களுக்குக் கூறுதல்.

பகுபதம், பகாப்பதம் குறித்து விளக்குதல். ஓரெழுத்து ஒரு மொழிகளை விளக்குதல். பகுபத உறுப்புகளை அறிமுகம் செய்தல்.

 



          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், கதையின் கருவை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

கதைகளை அறியச் செய்தல். கல்வியின் அவசியத்தை அறிதல். பதம் குறித்துக் கூறுதல்.

15.மதிப்பீடு

          LOT – பெயர்ப்பகுபதம் .............................. வகைப்படும்.

                   எழுதினான் என்பது ....................................

          MOT – பதத்தின் இரு வகைகள் யாவை?

                   மதிவாணன் பள்ளிக்குச் செல்ல முடிவெடுத்த நிகழ்வைச் சுருக்கி எழுதுக.

HOT – கல்வியின் சிறப்பு கூறும் கதையை எழுதுக.

                   ஓரெழுத்து ஒருமொழிகளைப் பொருளுடன் எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

பள்ளி குறித்து நான்கு வரிகளில் கவிதை எழுதுக.

கல்வியின் சிறப்பு குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.

தமிழ்த்துகள்

Blog Archive