கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, October 30, 2023

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இராமானுசர், பா-வகை, அலகிடுதல்.

  10th Tamil model notes of Lesson

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

11-11-2024 முதல் 15-11-2024

2.பாடம்

தமிழ்

3.அலகு

8

4.பாடத்தலைப்பு

பெருவழி – விரிவானம், கற்கண்டு.

5.உட்பாடத்தலைப்பு

இராமானுசர், பா-வகை, அலகிடுதல்.

6.பக்கஎண்

191 - 203

7.கற்றல் விளைவுகள்

T-1043 கட்டுரை, நாடகம் போன்ற இலக்கிய வடிவங்களின் வாயிலாகக் கருத்துகளைப் படித்துணர்தல், கருத்துகள் வலுவாகச் சொல்லப்படுவதற்கு ஏற்ற வடிவத்தினைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துதல்.

T-1044 செய்யுளின் யாப்பு அமைப்புகளை அறிந்து படித்தல், அவற்றுள் யாப்புக் கூறுகளைப் புரிந்து கொண்டு செய்யுள் கூறுகளைப் பிரித்தல், யாப்புக் கட்டமைப்பின் நுட்பமறிந்து சுவைத்தல்.

8.கற்றல் நோக்கங்கள்

தமிழின் நான்கு பாவகைகள் குறித்த அறிமுகம் பெற்று மேலும் கற்க ஆர்வம் கொள்ளுதல்.

9.நுண்திறன்கள்

இராமானுசர் நாடகத்தில் கூறப்பட்ட செய்திகளைப் பற்றி சக மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.

செய்யுளின் சீரைப் பிரித்து நேரசை, நிரையசை எனப் பகுத்தல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்




இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2023/10/blog-post_29.html

https://tamilthugal.blogspot.com/2023/10/blog-post_66.html

https://tamilthugal.blogspot.com/2020/05/10-8-ramanujar-tamil-ka.html

https://tamilthugal.blogspot.com/2023/10/10-10th-tamil-ppt-power-point_19.html

https://tamilthugal.blogspot.com/2023/10/10th-tamil-ppt-power-point-presentation_21.html

https://tamilthugal.blogspot.com/2021/02/alagiduthal-tamil-ilakkanam-alakitu.html

https://tamilthugal.blogspot.com/2019/09/8.html

https://tamilthugal.blogspot.com/2019/08/blog-post_25.html

https://tamilthugal.blogspot.com/2023/10/pdf_41.html

https://tamilthugal.blogspot.com/2021/07/8-10th-tamil-online-test-paa-vakai.html

https://tamilthugal.blogspot.com/2021/07/8-10th-tamil-online-test-ramanujar.html

https://tamilthugal.blogspot.com/2018/11/blog-post_16.html

https://tamilthugal.blogspot.com/2020/09/tamil-ilakkanam-alakidal-matching-game.html

https://tamilthugal.blogspot.com/2022/01/alagiduthal-tamil-online-quiz.html

https://tamilthugal.blogspot.com/2020/04/40-10th-tamil-alagitu-vaypadu-pdf.html

11.ஆயத்தப்படுத்துதல்

          நாடகம் பற்றிக் கூறச் செய்தல்.

          யாப்பு குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கேட்டல்.

12.அறிமுகம்

இராமானுசர் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

பா வகைகளை அறிமுகம் செய்தல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

இராமானுசர் நாடகம் குறித்து விளக்குதல்.

          நாடகம் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். நாடக உரையாடலை மாணவர்கள் பேசுதல். நாடக வடிவங்களை அறிதல். ஞானி குறித்து உணர்தல்.

          ஓசைகள், பா வகைகள், வெண்பா, ஆசிரியப்பா இலக்கணங்கள், அலகிடுதல் ஆகியவற்றை விளக்குதல்.

மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

இராமானுசர்  குறித்து இணையம், ஊடகங்கள் வழியாக அறிந்து வகுப்பறையில் கூறச் செய்தல். தமிழரின் பா வகைகளை உணர்தல்.

15.மதிப்பீடு

எ.சி.வி  செப்பலோசை ............... உரியது.

ந.சி.வி – ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.

உ.சி.வி – உனக்குப் பிடித்த கதையை நாடகமாக எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

நாடகம் குறித்த தகவல்களைத் திரட்டுதல்.

பிடித்த குறளுக்கு அலகிட்டு வாய்பாடு எழுதுதல்.

தமிழ்த்துகள்

Blog Archive