கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, October 11, 2023

அறிவைத் திறக்கும் நூலகம் தமிழ்க் கட்டுரை பேச்சு

 arivai thirakkum noolakam tamil speech katturai essay library 

 

அறிவைத் திறக்கும் நூலகம்

முன்னுரை

இதுவரை நான் படிக்காத புத்தகத்தை எனக்குக் கொண்டு வந்து தருபவரே என் சிறந்த நண்பர் என்றார் ஆபிரகாம் லிங்கன். புரட்சிப் பாதையில் புத்தகங்களே கைத்துப்பாக்கிகள் போன்றவை என்றார் மாவீரர் லெனின். தமிழ்த்துகள்

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழமொழி. நூலகம் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது புதுமொழி. மனிதனின் ஆறாம் அறிவான சிந்திக்கும் அறிவைத் தூண்டி பகுத்தறிவை விதைப்பவை புத்தகங்களே! அறிவைத் திறக்கும் நூலகங்கள் குறித்து என் கருத்துகளை பதிவிடுகிறேன். தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

அறிஞர்களின் குடியிருப்புதமிழ்த்துகள்

உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டபோது ஒரு நூலகம் கட்டுவேன் என்றார் நம் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள். உன்னையே நீ எண்ணிப்பார் என்ற சாக்ரடீசின் தத்துவங்களும், யுரேகா யுரேகா என்று தன் கண்டுபிடிப்புகளை உலகிற்கு உரக்கச் சொன்ன ஆர்க்கிமிடிசும், செல் கொள்கையைச் சொன்ன ஸ்லைடனும் சுவானும், மார்க்கசிய தத்துவத்தை உலகெலாம் பரவச் செய்த காரல் மார்க்ஸும், இரவைப் பகலாக்கும் மின்விளக்கு உள்ளிட்ட பல்வேறு கண்டுபிடிப்புகளைத் தந்த தாமஸ் ஆல்வா எடிசனும் புத்தகங்களாக நூலகத்திற்குள் குடியிருக்கிறார்கள். தமிழ்த்துகள்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்ன வள்ளுவன், அறம் செய விரும்பு என்று சொன்ன ஒளவை, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொன்ன கணியன் பூங்குன்றன், வெண்பாவின் புகழேந்தி, உயர் விருத்த கம்பன், குடிமக்கள் காப்பியம் படைத்த இளங்கோ, முண்டாசுக் கவி பாரதி, அக்னி சிறகுகள் விரித்த அப்துல் கலாம் இன்னும் எத்தனை எத்தனை அறிஞர் பெருமக்கள் நம் அறிவுக்கண்ணைத் திறக்கக் காத்திருக்கிறார்கள் தெரியுமா?

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

புரட்சிப் பாதையில் புத்தகங்கள்                          தமிழ்த்துகள்

உலகெங்கும் ஆயுதம் ஏந்தி போரிட்டுக் கொண்டிருக்கும்போது அகிம்சை என்ற கத்தியின்றி ரத்தம் இன்றி போராடும் புதிய ஆயுதத்தைத் தந்தவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. தால்சுதாய் எழுதிய புத்தகத்தைப் படித்ததாலேயே நான் தெளிவு பெற்றேன் என்றார் அவர். உலகம் போற்றும் ஒப்பற்ற கருத்துகளை தன்னில் கொண்ட பொதுமறையாகத் திகழும் திருக்குறளைப் படித்ததால்தான் இப்படிப்பட்ட ஒரு நூலை எழுத முடிந்தது என்றார் தால்சுதாய்.

நூலகம் திறக்கும்போது உள்ளே நுழையும் அண்ணல் அம்பேத்கர், நூலகம் மூடும் போதுதான் வெளியில் வரும் வழக்கமுடையவர். அதனால்தான் வட்டமேசை மாநாட்டில் புரட்சிகரமான கருத்துகளை எடுத்து வைத்தார்.         தமிழ்த்துகள்

தன்னைத் தூக்கில் போட அழைத்த போது சற்று பொறுங்கள் ஒரு புரட்சியாளனுடன் பேசிவிட்டு வருகிறேன் என்றாராம் பகத்சிங். அவர் அப்போது படித்துக் கொண்டிருந்த புத்தகம் மாவீரர் லெனின் எழுதிய அரசும் புரட்சியும் என்பதே!                             தமிழ்த்துகள்

 

உலகளாவிய அறிவுப் பெட்டகம்

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், பக்தி இலக்கியங்கள், ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், புதுக்கவிதைகள், கட்டுரைகள், புகழ்பெற்ற அறிஞர்களின் பேச்சு, அறிவியல் கண்டுபிடிப்புகள், வரலாறு மற்றும் பொருளாதார வல்லுநர்களின் பதினெண் சித்தர்களின் வாழ்வியல், உலகப் போர்கள் பற்றிய செய்திகள், இதிகாசங்கள், புராணங்கள், பல்வேறு சமயங்களின் புனித நூல்கள் என்று ஓலைச்சுவடிகள் தொடங்கி இன்றைய நவீன தொழில்நுட்பம் வரை அனைத்து வடிவங்களிலும் நூல்கள் குவிந்து கிடக்கின்றன.          தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

புகழ் பெற்ற நூலகங்கள்

அமெரிக்காவில் உள்ள லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் உலகின் மிகப்பெரிய நூலகம் ஆகும். சீனாவில் உள்ள தேசிய நூலகம் ஆசியாவின் மிகப்பெரிய நூலகம் ஆகும். கிபி 1890 லேயே புகழ்பெற்ற சென்னை கன்னிமாரா நூலகம் தொடங்கப்பட்டது. 30 ஏக்கர் பரப்பளவில் கல்கத்தாவில் அமைந்துள்ள இந்திய தேசிய நூலகமே நம் நாட்டின் மிகப்பெரிய நூலகம் ஆகும். கிபி 1948 இல் இந்தியாவில் முதல் முதலாக நூலகச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அது 1950 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.             தமிழ்த்துகள்

புனிதமுற்று மக்கள் புதுவாழ்வு வேண்டில்

புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்

என்றார் பாவேந்தன் பாரதிதாசன்.                                       தமிழ்த்துகள்

முடிவுரை

ஒரு திருக்குறள் நூலால் திருக்குறளார் முனுசாமி உருவானார். ஒரு சிலப்பதிகாரத்தால் சிலம்புச் செல்வர் ம.பொ.சி உருவானார். புத்தகமே கதியாக கிடந்த அம்பேத்கர் இந்தியாவின் தலையெழுத்தான அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கினார். காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்குப் புத்தகம் படிக்கச் சென்ற ஒரு மாணவர் முதலமைச்சராகத் திரும்பி வந்தார், ஆம் அவர்தான் பேரறிஞர் அண்ணா. தனக்குச் செய்யவேண்டிய அறுவை சிகிச்சையைக் கூட இன்னொரு நாள் தள்ளி வைக்க முடியுமா என்று புத்தகம் படிப்பதற்காகக் கேட்டவர் பேரறிஞர் அண்ணா. தமிழ்த்துகள்

நவில் தொறும் நூல் நயம் போலும் பயில்தொறும்

பண்புடையாளர் தொடர்பு

என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.                 தமிழ்த்துகள்

புத்தகங்கள் அறிவின் திறவுகோல்கள். பற்றவைக்கும் போதுதான் வெடிக்கும் வெடிகுண்டு; திறக்கும் போதெல்லாம் வெடிக்கும் புத்தகங்கள். உலகின் தலையெழுத்தை மாற்றும் புத்தகங்களைத் துணையாய்க் கொண்டு வல்லரசு இந்தியாவின் நல்ல குடிமக்களாக விளங்குவோம்.                தமிழ்த்துகள்

நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு! 

-        கவிஞர் கல்லூரணி முத்து முருகன் 9443323199              தமிழ்த்துகள்

 

மு.முத்துமுருகன், தமிழாசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ம.இரெட்டியபட்டி. தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive