கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, October 10, 2023

சமத்துவமே மகத்துவம் தமிழ்ப் பேச்சு கட்டுரை

 SAMATHUVAME MAKATHUVAM TAMIL SPEECH KATTURAI ESSAY

 

சமத்துவமே மகத்துவம்

முச்சங்கம் வளர்த்து மூவேந்தர் ஆட்சி செய்த மண்ணில் வாழும் மக்களுக்கெல்லாம் உயிர் மூச்சாய்த் திகழ்கின்ற தாயே, தமிழே, தன்னிகரில்லாதவளே, சேயாய் உன்றன் திருவடி வணங்கி உரையைத் தொடங்குகிறேன். தாயாய் நாவில் நடனமிடு நல்லதொரு தீர்ப்பைக் கொடு.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா                தமிழ்த்துகள்

செய்தொழில் வேற்றுமையான் என்றார் வான்புகழ் வள்ளுவர், இந்தியத் துணைக் கண்டத்தில்தான் எத்தனை எத்தனை வேறுபாடுகள்? கதம்ப மலர்களாக இந்தியத் தாய் கழுத்தில் கிடக்கும் நவமணி மாலைகள் அவை. சாதி இன மொழி மத வேறுபாடுகளால் பிரிவுபடுத்திப் பார்க்கும் எவரும் இதுவரை அவளிடம் தோற்றுத்தான் போயிருக்கிறார்கள்.       தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

 

முப்பது கோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புற வொன்றுடையாள். இவள்

செப்பு மொழி பதினெட்டுடையாள் எனிற் சிந்தனை ஒன்றுடையாள் என்று பாடினார் மகாகவி பாரதியார்.                               தமிழ்த்துகள்

சங்ககாலத்திலேயே

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்.

நீதி வழுவா நெறிமுறையின் மேதினியில்

இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தார்                தமிழ்த்துகள்

பட்டாங்கில் உள்ளபடி என்று நல்வழி என்னும் நூலில் பாடிவைத்துச் சென்றுவிட்டாள் ஔவைப்பாட்டி.

யாரு மேல கீறினாலும் ரத்தம் ஒன்று தான்

ஆக மொத்தம் பிறந்ததெல்லாம் பத்தே மாசம் தான்

என்று பாமரரும் புரியும் வண்ணம் பகுத்தறிவு வரிகளை சொல்லிச்சென்றார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். சமத்துவமும் சகோதரத்துவமும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தந்திருக்கும் உரிமை. தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

 

வேற்றுமையில் ஒற்றுமை தான் பாரதம்- தம்பி

வேதங்கள் பிறந்த இடம் பாரதம்

ஆற்று வளம் சோற்று வளம் கொஞ்சமா- இல்லை

ஆன்மீகத் தத்துவம் தான் பஞ்சமா என்று கேள்வி கேட்ட கவிஞர் தமிழ்த்துகள்

இனங்கள் பல மொழிகள் பல ஆயினும் இந்து

இயேசு புத்த முகமதியர் ஆயினும்.

ஒன்று நாடு உடன் பிறந்தோர் யாவரும் எனும்

உணர்வினிலே வளர்ந்து வரும் நாடிது என்று முடிக்கிறார்.           தமிழ்த்துகள்

வேற்றுமையில் ஒற்றுமை என்ற வேத மந்திரத்தை இன்னும் நாம் முழங்கிக் கொண்டிருப்பதால்தான் உலக நாடுகள் வியப்புடன் பார்க்கும் வளர்ச்சியை எட்ட முடிகிறது. பொருளாதார தன்னிறைவு அடைவதற்கு மாநிலங்களுக்கிடையே உள்ள விட்டுக் கொடுத்தலும் கலை, கலாச்சார பிணைப்புகளும் தான் காரணம்.               தமிழ்த்துகள்

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்

காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்

சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு

சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்! என்று பாரத நாட்டின் ஒற்றுமையைப் பறைசாற்றுகிறார் முண்டாசுக் கவி பாரதி.               தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

 

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்.

இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே

என்றும்

பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்              தமிழ்த்துகள்

சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு என்றும் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் இனமான வரிகளைக் கூறி ஒற்றுமைப்படுத்துகிறார்.

தொழில் வழிவந்த சாதிப் பிரிவுகளால் ஏற்றத்தாழ்வுகள் வராமல் காக்க வேண்டும்.

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

நன்றே நினைமின் நமனில்லை நாணாமே               தமிழ்த்துகள்

என்று பதினெண் சித்தர்களுள் ஒருவரான திருமூலர் பாடியுள்ளார். சிற்றரசர்களாகச் சிதறிக்கிடந்த பாரதத்தில் நயவஞ்சகர் நரிகளாக உள்ளே புகுந்த ஆங்கிலேயர் நம்மை அடிமைப்படுத்தினர்.                  தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

 

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு என்ற எண்ணம் பிறந்த பிறகுதான் பேராயக் கட்சி தோன்றியது. செய் அல்லது செத்துமடி என்று வெள்ளையனை ஒன்று சேர்ந்து விரட்டிய வரலாறு உலகத்திற்கு நம் ஒற்றுமையின் பலத்தை என்றைக்கும் காட்டும்.               தமிழ்த்துகள்

தண்ணீர் விட்டா வளர்த்தோம் சுதந்திரப் பயிரை

கண்ணீராற் காத்தோம் கருகத்திருவுளமோ என்றான் பாரதி. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பார்கள் நம் முன்னோர். இனி எந்த அந்நியரும் நம்மில் பிரிவினைவாதத்தைத் தூண்டிவிட்டு நம்மை ஆளும் வாய்ப்பைக் கொடுத்து விட மாட்டோம். தமிழ்த்துகள்

சிங்கமும் எருதுகளும் கதையை இளம் வயது முதலே படித்து அதன் மையக்கருத்தைப் புரிந்தவர்கள் நாம். தனித்தனியாக மேயும் மாடுகள் சிங்கத்தின் இரைக்குப் பலியாகிவிடுகிறது. மீதமுள்ள மாடுகள் சேர்ந்து எதிர்க்கும் போது சிங்கமே ஓடிவிடுகிறது.

தனியாக இருக்கும் குச்சியை உடைத்து விட முடியும். ஆனால் கட்டாக இருக்கும் குச்சிகளை ஒடிக்க முடியாது.               தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

 

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்

சால மிகுத்துப் பெயின் என்று இதைத்தான் 2000 ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவம் கூறியிருக்கிறது. சமத்துவத்தின் மகத்துவத்தை உணர்ந்ததால் தான் பல்வேறு சமத்துவபுரங்கள் தமிழ்நாட்டில் முளைத்திருக்கின்றன. தீண்டாமைக் கொடுமை முற்றிலும் ஒழிந்து விட்டது. ஆண் பெண் சமத்துவம் வளர்ந்துவிட்டது. தமிழ்த்துகள்

பெண்களுக்கான கல்லூரிகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன. சிறுபான்மையினருக்கு இந்தியா தரும் பாதுகாப்பு போல எந்த நாடும் கொடுப்பதில்லை உலக அரங்கில். ஆண்களுக்கு நிகரான பணிகளைப் பெண்களும் செய்யத் தொடங்கிவிட்டார்கள்.

33 விழுக்காடு இட ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டுவிட்டது. தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் நலவாழ்வு வாரியங்கள் ஏற்படுத்தப்பட்டு அவர்கள் வாழ்வு செழிக்க வழிவகை செய்யப்பட்டுவிட்டது. கல்வியால் அனைவரும் சமம் என்று கல்வி கற்கும் உரிமை அரசியல் அமைப்புச் சட்டப்படி நடைமுறைப்படுத்தப்பட்டுவிட்டது. இன்னும் என்ன வேறுபாடு நம்முள் வந்துவிடப் போகிறது? தமிழ்த்துகள்

ஏழை பணக்காரன் என்ற எண்ணம் மாறி அனைவரும் மனிதர்கள் என்ற எண்ணம் உதிக்கட்டும். ஒரு கை தட்டினால் ஓசை வராது, தனி மரம் தோப்பாகாது, தட்டுங்கள் உங்கள் கைகளை, காட்டுங்கள் உங்கள் ஆதரவை, ஒன்றுபடுவோம் உயர்ந்து நிற்போம். வாய்ப்புக்கு நன்றி வருகிறேன் விடைபெறுகிறேன்.

-        கவிஞர் கல்லூரணி முத்து முருகன் 9443323199              தமிழ்த்துகள்

 

மு.முத்துமுருகன், தமிழாசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ம.இரெட்டியபட்டி. தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive