Arive Alagu tamil speech competition
அறிவே அழகு
அன்னைத் தமிழே அருளோவியமே!
பழமைக்குப் பழமையே புதுமைக்குப் புதுமையே. கன்னித் தமிழாய் இருந்து இன்று கணினித் தமிழாய்
என் நாவில் நடமாடும் தமிழ் அன்னையே உன்னை வணங்கித் தொடங்குகிறேன் அருள்வாயாக! தமிழ்த்துகள்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே தொல்காப்பியர்
ஓரறிவு முதல் ஆறறிவு வரை உள்ள உயிரிகளை வகைப்படுத்தி
செய்யுள் இயற்றி இருக்கிறார். ஒன்றறிவதுவே உற்றறிவதுவே... என்று தொடங்கும் அப்பாடலில்
ஆறறிவதுவே அவற்றொடு மனனே என்று பகுத்தறிவு கொண்ட உயிரியாக மனிதனை வகைப்படுத்துகிறார். தமிழ்த்துகள்
கண்ணுடையர் என்போர் கற்றோர்
முகத்திரண்டு
புண்ணுடையோர் கல்லாதவர் என்கிறார் பொய்யாமொழிப் புலவர் வள்ளுவர்.
கற்றோர்க்குச் சென்ற
இடமெல்லாம் சிறப்பு என்று மூதுரையில் ஒளவைப் பாட்டி கூறுகிறார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனாரின் வைர வரிகளுக்கு முழுமையான சொந்தக்காரர்கள் கற்றவர்கள்
தானே? தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள்,
இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள்,
கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற
பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
அதிலும் அறிவு என்பது
என்ன? கல்வி
என்பது என்ன? இதனை வேறு படுத்தாமல் அறிவே அழகு என்று நான் பேச
முடியுமா என்ன? கல்வி அறிவு என்பது நூல்களைப் படிப்பது மூலமாகவும்
சான்றோர் உரைகளைக் கேட்பது மூலமாகவும் அமைவது. அறிவு எனப்படுவது இயற்கையிலேயே மனிதனுக்கு
அமைந்து உள்ளது. தமிழ்த்துகள்
கல்வியால் அறிவு மேம்படும்,
முறையான கல்வியை ஆசிரியர்களிடம் கற்காவிட்டாலும் மனிதனின் அறிவு பல புதிய கண்டுபிடிப்புகளைச்
செய்வதற்கு உதவியாக இருக்கும். இயல்பிலேயே கவிதை எழுதும் ஆற்றல் கைவரப் பெற்றவர்கள்,
இயல்பிலேயே ஆராயும் ஆற்றல் கைவரப் பெற்றவர்கள் இவ்வுலகில் சாதனையாளர்களாக விளங்குகிறார்கள். தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள்,
இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள்,
கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
பெண்ணுக்கு அணிகலன்
அழகுதான், ஆனால் கல்வி என்னும் அணிகலன் இருந்துவிட்டால் அதுவே பேரழகு என்கிறார் பாரதிதாசன்.
அதனால் தான்
தலைவாரிப் பூச்சூடி உன்னைப்
–பாட
சாலைக்கு போவென்று சொன்னால்
உன் அன்னை
சிலை போல ஏன் இங்கு நின்றாய்"
நீயும் தமிழ்த்துகள்
சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்?
மலை வாழை அல்லவோ கல்வி
வாயார உண்ணுவாய் போ என்
புதல்வி! என்று
பெண்ணைப் படிப்பதற்குப் பள்ளிக்குச் செல் என்று கூறுகிறார். தமிழ்த்துகள்
கல்வி இல்லாப் பெண்டிர்
களர் நிலம்- அந்நிலத்தில்
புல் விளைந்திடலாம் நல்ல
புதல்வர்கள் விளைவது இல்லை என்று உறுதியாகக் கூறுகிறார் பாரதிதாசன். தமிழ்த்துகள்
வானை அளப்போம், கடல் மீனை
அளப்போம்
சந்திர மண்டலத்தியல் கண்டு
தெளிவோம் என்று
அன்றே கூறினார் மகாகவி பாரதி. இன்று சந்திரயான் ஒன்று இரண்டு மூன்று என வரிசையாக நிலவில்
கால்பதிக்கும் நாளை விரல் விட்டு எண்ணிக் கொண்டிருக்கிறோம். இதற்கு மனிதன் பெற்ற அறிவே
அடித்தளம் அல்லவா? தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள்,
இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள்,
கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற
பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
ஒருமைக்கண் தான் கற்ற கல்வி
ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து என்று திருக்குறள் கூறுகிறது. ஒரு பிறவியில்
நாம் கற்கின்ற கல்வி, ஏழு பிறவிகளுக்கும் தொடர்ந்து வந்து நமக்குப் பாதுகாப்பை அளிக்கும்
என்றால் அறிவின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். படிப்பறிவு, கேள்வி
அறிவு என்ற இரண்டிலும் நாம் சிறந்து விளங்க வேண்டும். படிப்பதற்கு ஏற்ற காலம் இளமைக்
காலமே. அதனால்தான் ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்று நம் முன்னோர் கூறியிருக்கிறார்கள். தமிழ்த்துகள்
செவியின் சுவையுணரா அவியுணவின்
மாக்கள்
அவியினும் வாழினும் என்
என்று கல்லாதோரைச் சாடுகிறார் திருவள்ளுவர்.
தகடூர் எறிந்த பெருஞ்சேரல்
இரும்பொறை அரசு கட்டிலில் படுத்து உறங்கிய மோசிகீரனாருக்குக் கவரி வீசினான் என்பது
வரலாறு. நாட்டை ஆளும் மன்னன் அயர்ந்து உறங்கிய புலவருக்குத் தண்டனை கொடுக்கப் போகிறான்
என்று எல்லோரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் போது அவர் நன்றாக உறங்கட்டும் என்று
கவரி வீசியது அவர் அறிவுக்கு அரசன் கொடுத்த மரியாதை அல்லவா? தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள்,
இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள்,
கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
நீண்ட நாள் உயிர் வாழலாம்
என்று தெரிந்தும், தான் உண்ணாமல் அதிசய நெல்லிக்கனியை ஔவையாருக்குக் கொடுத்து மகிழ்ந்தான்
அதியமான். தமிழ் வாழ வேண்டும், தமிழறிஞர் படைப்புகள் இவ்வுலகம் முழுவதும்
பரவ வேண்டும் என்று மன்னரும் விரும்பியதன் விளைவுதான் இன்று பல்வேறு நூல்கள் நம்மிடையே
இருப்பதற்குக் காரணம். தமிழ்த்துகள்
பெருந்தலைச்சாத்தனார் என்னும் புலவருக்காகத் தன் தலையையே கொடுக்க முன்வந்தான்
குமண வள்ளல். தம்பி இளங்குமணன் ஆட்சியைப் பிடித்துக் கொண்டு குமணனைக் காட்டிற்கு விரட்டி
விட்டான். அண்ணன் தம்பியருள் பகை இருக்கிறது என்று தெரிந்தும் வறுமையின் காரணமாக குமணனைச்
சந்திக்கச் சென்றார் சாத்தனார். தமிழ்த்துகள்
அவரிடம் என் தலையைக்
கொண்டு வந்து கொடுத்தால் ஆயிரம் பொற்காசுகளை வழங்குவதாக இளங்குமணன் அறிவித்திருக்கிறான்.
இதோ என் தலையை வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள்! என்று தன் உடைவாளைக் கொடுத்தான் குமணன்.
தமிழ்த்துகள்
அதிர்ந்து போன புலவர்
தமிழுக்காகத் தலையைக் கொடுத்த உன்னை வணங்குகிறேன் என்று கூறி அவ்வாளை வாங்கிச் சென்றார்.
இளங்குமணனிடம் நடந்த விவரத்தைக் கூறி அவர்கள் இருவருக்கும் உள்ள பகையை நீக்கினார்.
அறிவு அழகுதானே? அறிவு வீரம்தானே? அறிவு
புகழ்தானே? இன்னும் என்ன தயக்கம்? தமிழ்த்துகள்
கற்றோர்க்குக்
கல்வி நலனே கலனல்லால்
மற்றோர்
அணிகலன் வேண்டாவாம் - முற்ற
முழுமணிப்
பூணுக்குப் பூண்வேண்டா யாரே
அழகுக்கு
அழகுசெய் வார்? தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள்,
இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள்,
கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற
பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
அன்றைக்கு அறிவு பெறுவதற்கு ஆசிரியர் இல்லம் தேடி நாம் சென்றோம் இன்றோ ஆசிரியர்கள்
நம் இல்லம் தேடி வருகிறார்கள். ஆம் இல்லம் தேடிக் கல்வி தமிழ்நாட்டை அறிவு மிகுந்த
மாநிலமாக மாற்றிக் கொண்டிருக்கிறது. அறியாமை ஒழித்து அறிவுச்சுடர் ஒவ்வொரு வீட்டிலும்
பிரகாசிக்கிறது. தமிழ்த்துகள்
கற்கை
நன்றே கற்கை நன்றே
பிச்சை
புகினும் கற்கை நன்றே என்றான் அதிவீரராம பாண்டியன் என்ற மன்னன்.
உற்றுழி
உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை
நிலை முனியாது கற்றல் நன்றே என்றான் ஆரியப் படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன். இதைவிட அறிவுக்குப்
புகழாரம் வேறு என்ன வேண்டும். தமிழ்த்துகள்
ஈன்ற
பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன்
எனக்கேட்ட தாய் என்ற வான்புகழ்
வள்ளுவரின் வாக்கை மனதில் நிறுத்துவோம். நாம் பெறும் அறிவால் நம்மை அழகுபடுத்துவோம்!
ஆம்! அறிவே அழகு.. புற அழகெல்லாம் அழகில்லை என்பதை உரக்கச் சொல்லுவோம்! அறிவைப் பெருக்குவோம்!
அவனி போற்ற வாழ்வோம்! வாய்ப்புக்கு நன்றி, தமிழ்த்துகள்
வருகிறேன் விடைபெறுகிறேன்.
- கவிஞர் கல்லூரணி முத்து முருகன் 9443323199 தமிழ்த்துகள்
மு.முத்துமுருகன்,
தமிழாசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி,
ம.இரெட்டியபட்டி. தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள்,
இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள்,
கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற
பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்