கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, October 11, 2023

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் தமிழ்க் கட்டுரை பேச்சு

 Ulluvathellam Uyarvullal tamil katturai speech essay

 

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்

முன்னுரை                 தமிழ்த்துகள்

எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர்

திண்ணியராகப் பெறின் என்று கூறியுள்ளார் பொய்யாமொழிப் புலவர். எண்ணங்களுக்கு அவ்வளவு வலிமை இருக்கிறதா? ஆம்! இருக்கிறது. அதனால்தான் ஒன்றே செய்க, ஒன்றும் நன்றே செய்க, நன்றும் இன்றே செய்க, இன்றும் இன்னே செய்க, இன்னும் இனிதே செய்க என்கின்றனர் நம் முன்னோர்.                        தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

 

பறவையைக் கண்டான், விமானம் படைத்தான்; பாயும் மீன்களில் படகினைக் கண்டான், எதிரொலி கேட்டான், வானொலி படைத்தான், என்று கவிஞர் கண்ணதாசன் கூறுகிறார்.

எண்ணம் உயர்வாக அமைந்துவிட்டால் நம் முயற்சியும் செயலும் அதை நோக்கியே பயணிக்கும். அது இறுதியில் வெற்றியாக மாறி நிற்கும்.                தமிழ்த்துகள்

அக்னி சிறகுகள்

முயற்சி திருவினையாக்கும் என்பது வள்ளுவர் வாக்கு. கனவு காணுங்கள் என்கிறார் ஏவுகணை நாயகன் அப்துல் கலாம் அவர்கள். உறங்கும் போது வருவதல்ல கனவு உன்னை உறங்கவிடாமல் செய்வது தான் கனவு. அன்று கலாமின் ஆசிரியர் பறக்கும் பறவையைக் காட்டி விமானத்தில் பறக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவருள் விதைத்து விட்டார். தமிழ்த்துகள்

உப்புக் காற்றை உறிஞ்சி வாழ்ந்த கட்டுமரத் தொழிலாளியின் மகன் இந்தியக் குடியரசுத் தலைவராகவும் முடியும் என்பதற்கு கலாமின் உயர்ந்த எண்ணங்களே காரணம். நான் வானில் பறக்க வேண்டும் என்று நினைத்த கலாமுக்கு எஸ்.எல்.வி மூன்று திட்டத்தின் இயக்குநராகப் பதவி வகிப்பார் என்று அப்போது தெரியாது. தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

 

தங்க மங்கை

கேரளத்தில் கடற்கரை ஓரங்களில் ஓடிக் கொண்டு திரியும்போது மின்னலெனப் பாய்ந்து தங்க மங்கையாகச் சாதிப்போம் என்று பி.டி.உஷாவுக்குத் தெரியாது. 1986 சியோலில் நடந்த போட்டிகளில் அவரின் சாதனைகளைக் கண்டு வியக்காதவர் எவரும் இல்லை. அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட பல விருதுகளுக்குச் சொந்தக்காரர் ஆகிவிட்டார் அவர்.

அதனால்தான் இன்றைக்கு இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராக அவர் பதவி வகித்து வருகிறார். சுவாமி விவேகானந்தர் எழுமின் விழிமின் இலக்கை அடையும் வரை ஓயாது உலகில் என்று கூறுகிறார்.                 தமிழ்த்துகள்

கையருகே நிலா

வெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் என்கிறார் கவிஞர் தாராபாரதி. அரசுப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது வாழ்வில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அண்ணாதுரை சந்திராயன் ஒன்று, இரண்டு திட்ட இயக்குநராகச் சிறப்பாகப் பணியாற்றி இருக்கிறார்.                       தமிழ்த்துகள்

கருப்பினப் பெண் சாதனையாளர்

மேரி மேக்லியூட் பெத்யூன் என்ற கருப்பினப் பெண்மணி சாதனையாளராக வலம் வருவதற்கு அந்தப் புத்தகத்தைத் தொடாதே உன்னால் படிக்க முடியாது! என்ற அவமானச் சொற்கள் தான் காரணம். தமிழ்த்துகள்

தன் மீது வீசும் விமர்சனங்களைத் தன் வெற்றிக்கான படிக்கட்டுகளாகக் கொண்டு முன்னேறிய சாதனையாளர்கள் பலர் வாழ்ந்து வருகிறார்கள். நீ என்னவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்பது கீதை வரிகள்.           தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

 

மேரி கோமின் சாதனைகள்

மூன்று குழந்தைகளுக்குத் தாயான பின்பும் மேரி கோம் குத்துச்சண்டை போட்டியில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பயிற்சி எடுத்தார், இறுதியில் வென்றார். ஐந்து முறை தொடர்ந்து உலகச் சாம்பியன் பட்டம் பெற்று உலக நாடுகள் எல்லாம் இந்தியாவைப் பாராட்டும் வகையில் குத்துச்சண்டை போட்டியில் சாதனை படைத்தவர். அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ விருது என விருதுகள் பல இந்த மணிப்பூர் மங்கையின் மகுடத்தில் வைரக் கற்களாக மின்னிக் கொண்டு இருக்கின்றன.                தமிழ்த்துகள்

எத்தனை உயரம் இமயமலை அதில்

இன்னொரு சிகரம் உனது தலை என்ற தைரியமும் தன்னம்பிக்கையும் யாருக்கு இருக்கிறதோ அவர்கள் வெற்றிக்குச் சொந்தக்காரர்கள்.              தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

 

சட்ட மேதையின் சாதனைகள்     தமிழ்த்துகள்

தபோலி என்னும் கிராமத்தில் சாக்குப் பையைக் கக்கத்தில் இடுக்கிக்கொண்டு பொழுது புலர்ந்த அதிகாலைப் பொழுதில் வயல் வரப்புகளில் புத்தகப் பையோடு ஓடோடிச் சென்று கொண்டிருந்தான் பீமாராவ் ராம்ஜி. என் வறுமை ஒழிய வேண்டும். என் தாய் மண்ணின் தலையெழுத்து மாற வேண்டும் என்ற சிறுவனின் உயர்ந்த எண்ணம் தான் சட்டமேதை அம்பேத்கராக அவரை உயர்த்தியது. இந்தியாவின் தலையெழுத்தான அரசியல் அமைப்புச் சட்டத்தை எழுதும் பெரும் பேரைத் தந்தது.              தமிழ்த்துகள்

இன்னும் எத்தனை சாதனையாளர்கள்?

சேலத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு 2016 பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று சாதனை புரிவதற்கு அவரது உயர்ந்த எண்ணங்களே காரணம். ரியோ டி ஜெனிரோவில் உயரம் தாண்டுதலில் அவர் அடைந்த சாதனை அவர் பெற்ற அவமானங்களுக்கு எல்லாம் பதிலடியாய் அமைந்தது. தமிழ்த்துகள்

வறுமை என்பது நிரந்தரம் அல்ல, முயற்சியும் வலிமையும் இருந்து விட்டால் சிறந்த சாதனைக்குச் சொந்தக்காரர்களாக நாம் மாறுவது உறுதி. மாங்காய் வியாபாரியின் மகனான சிவன் அவர்கள் இஸ்ரோ திட்டத்தின் இயக்குனராக உயர்வதற்கு அவரது உயர்ந்த எண்ணங்களன்றி வேறு காரணம் இருக்க முடியாது. தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

 

முடிவுரை

வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்                 தமிழ்த்துகள்

உள்ளத்தனையது உயர்வு என்கிறார் வான் புகழ் வள்ளுவர். இரண்டு அறிவு கொண்ட தாவரத்திற்கே நீர்மட்டத்திற்கு ஏற்ப உயர வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்போது போட்டி நிறைந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய ஆறறிவு கொண்ட மனிதனுக்கு எப்படிப்பட்ட முயற்சியும் வேகமும் இலக்கும் இருக்க வேண்டும், கொஞ்சம் சிந்தியுங்கள்.

சோம்பிக் கிடந்தால் சிலந்தியும் உன்னைச் சிறைப் பிடிக்கும்;

எழுந்து நடந்தால் இமயமும் உனக்குக் குடை பிடிக்கும்.     தமிழ்த்துகள்

ஊதி அணைத்துவிட நீ ஒன்றும் அகல் விளக்கல்ல! சூறாவளிக்கும் அணையாத சூரிய விளக்கு, புயலுக்குத் தலைவணங்க நீ ஒன்றும் புல்லல்ல! எதற்கும் அஞ்சாத இமயமலை! உயர்ந்த எண்ணம் கொள்வோம், விண்ணைத்தாண்டிய சாதனை படைப்போம்!

-        கவிஞர் கல்லூரணி முத்து முருகன் 9443323199              தமிழ்த்துகள்

 

மு.முத்துமுருகன், தமிழாசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ம.இரெட்டியபட்டி. தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம். தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive