கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, October 15, 2023

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு சங்க இலக்கியத்தில் அறம்

 10th tamil model notes of lesson

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

28-10-2024 முதல் 30-10-2024

2.பாடம்

தமிழ்

3.அலகு

8

4.பாடத்தலைப்பு

பெருவழி – உரைநடை உலகம்.

5.உட்பாடத்தலைப்பு

சங்க இலக்கியத்தில் அறம்.

6.பக்கஎண்

184 - 187

7.கற்றல் விளைவுகள்

T-1040 அறக்கருத்துகளை வேராகக் கொண்ட சங்க இலக்கியப் பாடல்களின் மையப் பொருளறிதல், உரைநிகழ்த்துதல், அக்கருத்துகள் இன்றும் சமூகத்தில் பொருந்தி நிற்பது குறித்துக் கலந்துரையாடுதல்.

8.கற்றல் நோக்கங்கள்

அறக்கருத்துகளை வேராகக் கொண்ட சங்க இலக்கியப் பாடல்களின் மையப் பொருளறிதல்.

9.நுண்திறன்கள்

சங்க இலக்கியம் கூறும் அறம், திருக்குறள் கூறும் அறம் இவற்றை ஒப்பிட்டு எழுதுதல் 10.கற்பித்தல் துணைக்கருவிகள்



இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2023/10/10th-tamil-ppt-power-point-presentation_9.html

https://tamilthugal.blogspot.com/2020/02/8-1-tenth-tamil-unit-8-one-word-online.html

https://tamilthugal.blogspot.com/2023/06/pdf-10th-tamil-big-question-answer_7.html

https://tamilthugal.blogspot.com/2020/05/10-sanga-ilakkiyangalil.html

11.ஆயத்தப்படுத்துதல்

          சங்க கால வாழ்வு பற்றிக் கூறச் செய்தல்.

          போர்கள் குறித்துக் கேட்டல்.

12.அறிமுகம்

அறம் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

அக்கால அறங்களை அறிமுகம் செய்தல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

அறத்தில் வணிக நோக்கம் கொள்ளாமை, அரசியல் அறம், அறங்கூறவையம், போர் அறம், கொடை, உதவி, வாய்மை குறித்து விளக்குதல்.

          பண்டைய தமிழரின் அறம் குறித்து விளக்குதல். அறம் குறித்து மாணவர்கள் அறிதல்.

மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். தமிழரின் அறங்களை அறிதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

தமிழரின் அறம் குறித்து இணையம், ஊடகங்கள் வழியாக அறிந்து வகுப்பறையில் கூறச் செய்தல். தமிழரின் வாய்மையை உணர்தல்.

15.மதிப்பீடு

எ.சி.வி  .............. ஓர் அதிசயத் திறவுகோல்.

ந.சி.வி – அவையம் – குறிப்பு வரைக.

உ.சி.வி – சங்க இலக்கியத்தில் அறம் குறித்து ஒரு கட்டுரை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

கொடை குறித்த தகவல்களைத் திரட்டுதல்.

இன்றைய அறம் குறித்த தகவல்களை எழுதுதல்.


தமிழ்த்துகள்

Blog Archive