கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Friday, October 13, 2023

சாலை விபத்து மற்றும் இறப்புகளைக் குறைத்தல் தமிழ்ப் பேச்சு கட்டுரை

 

சாலை விபத்து மற்றும் இறப்புகளைக் குறைத்தல்

முன்னுரை

வானை அளப்போம்; கடல் மீனை அளப்போம்

சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் - என்றார் பாரதியார்.                       தமிழ்த்துகள்

விலங்குகளோடு விலங்குகளாக காடுகளில் வாழ்ந்தவன் மனிதன். அவன் ஓரிடத்தில் நிலையாக வாழத் தொடங்கியது வேளாண்மை செய்த பிறகு தான். அதன் பின்னர் தன் விளைபொருள்களை வேறு இடத்திற்குக் கொண்டு சென்று விற்பதற்கு வண்டிகளைக் கண்டுபிடித்தான். அதனால் அவனுக்கு சாலைகள் உதவின.

தற்போது கணினிக் காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். நான்கு வழிச்சாலைகள் ஆறு வழிச்சாலைகள் எட்டு வழிச் சாலைகள் என நம் கண் முன்னே நகரங்கள் தார்ச் சாலை போர்த்தி உறங்குகின்றன. மலைப்பிரதேசங்களில் எல்லாம் பாம்புகள் போல நெளிந்தபடி சாலைகள் செல்கின்றன. வண்டிகளும் அதிகமான அளவில் பெருகிவிட்டன. இந்நிலையில் அரசும் பல்வேறு சட்ட திட்டங்கள் வகுத்து விபத்துகளைக் குறைக்கவும் வழிவகை செய்து வருகிறது. சாலை விபத்து மற்றும் இறப்போரைக் குறைத்தல் குறித்து இக்கட்டுரையில் காண்போம்!                                   தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

 

உலக அளவில் இந்தியாவின் நிலை             தமிழ்த்துகள்

இந்தியா உலக மக்கள் தொகையில் சீனாவை மட்டும் முந்திச் செல்லவில்லை. 2009இல் உலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ள செய்தியின் படி நாம் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி சாலை விபத்துகளில் முதலிடத்தில் இருக்கிறோம். உலகில் சாலை விபத்தில் இறப்போர் 13 விழுக்காடு இந்தியர்களே என்கிறது ஆய்வு. 2015இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஒவ்வொரு நாளும் 400 பேர் சாலை விபத்தில் இறப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. இதில் 54 விழுக்காடு மக்கள் பதினைந்து முதல் 34 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள். தமிழ்நாட்டில் சாலை விபத்தில் இறப்போரின் எண்ணிக்கை சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, கோவை நகரங்களில் அதிகமாக இருக்கிறதாம்!                           தமிழ்த்துகள்

விபத்துக்கான காரணங்கள்

மிதவேகம் மிக்க நன்று; அதிக வேகம் ஆபத்தைத் தரும்

படியில் பயணம்; நொடியில் மரணம்                              தமிழ்த்துகள்

வேகத்தைக் குறைப்போம், விபத்தைத் தடுப்போம்.

அதிக ஒளி ஆபத்தைத் தரும் - என்று பல்வேறு விழிப்புணர்வு வரிகளை எழுதி வைத்து இருந்தாலும் விபத்துகள் குறைந்தபாடில்லை.            தமிழ்த்துகள்

மது அருந்திவிட்டு வண்டி ஓட்டுதல்; ஓட்டுநர் இருக்கையிலும் பிற இருக்கைகளிலும் இருக்கைப் பட்டை அணியாமல் இருத்தல்; மது அருந்திவிட்டு வண்டி ஓட்டுதல், அதிவேகமாக வண்டிகளை இயக்குதல், நடைபாதைக் கடைகள்; தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வண்டிகள் ஓட்டுதல்; பொதி வண்டிகளில் ஆட்களை ஏற்றிச் செல்தல்; ஒளிரும் வண்ண விளக்குகளை அதிகமாக வண்டிகளில் இணைத்து ஒளிரச் செய்தல். தமிழ்த்துகள்

குறிப்பிட்ட ஒளி அளவுக்கு மேற்பட்ட விளக்குகளைப் பொருத்துவதால் எதிரே வரும் வண்டிகளை விபத்துக்கு உள்ளாக்குதல்; வேகத்தடை மற்றும் சாலை சமிக்ஞைகளைக் கவனிக்காமல் வண்டிகளைச் செலுத்துதல்; யூ-திருப்பங்களைச் சரியான கவனத்துடன் கடக்காமை; அவசர ஊர்தி, தீயணைப்பு வண்டிகளுக்கு வழி விடாமல் இருத்தல்; குண்டும் குழியுமான சாலைகளாக இருந்தால் அவற்றின் தரத்திற்கு ஏற்ப வண்டியின் வேகத்தைக் குறைத்து ஓட்டாமை போன்ற பல்வேறு காரணங்களால் விபத்துகள் ஏற்படுகின்றன. தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

 

தேசிய சாலைப் பாதுகாப்பு வாரம்

கிபி 1989 முதல் இந்தியாவில் தேசிய சாலைப் பாதுகாப்பு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. மார்ச் 15, 2010 அன்று சுந்தர் குழுவினர் பரிந்துரை செய்த பாதுகாப்புக் கொள்கைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு மோட்டார் வாகன திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் 34 ஆவது சாலைப் பாதுகாப்பு வாரத்தை நாம் கொண்டாடி வருகிறோம்.             தமிழ்த்துகள்

இந்த சாலைப் பாதுகாப்பு வாரம் ஸ்வச்சதா பக்வாடா என்ற பெயரில் மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சாலைகளின் மொத்த நீளம் 62 லட்சம் கிலோமீட்டர் இந்தியாவில் வாழ்வோர் சுமார் 150 கோடி பேர். இவர்களில் 90 விழுக்காடு மக்கள் சாலையில் பயணிப்பதையே விரும்புகின்றனர். பொதிகளை ஏற்றிச் செல்வதற்கு 65 விழுக்காடு சாலை வழிகளே பெரும் உதவியாக இருக்கின்றன.                                     தமிழ்த்துகள்

சதக் சுரக்ஷா ஜீவன் ரக்ஷா

2021 ஆம் ஆண்டு நம் நாட்டில் 4,12,432 சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53,972. காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 3,84,448 - என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. கொரோனா காலத்தில் வண்டிகளின் போக்குவரத்து குறைந்திருந்தாலும் இறப்பு விகிதம் குறைந்தபாடில்லை.

ஆம்! மனிதனின் கவனக்குறைவு இருக்கும் வரை விபத்துகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அதனால்தான் மனித உயிர்கள் மகத்தானவை; அவற்றை வீணே சாலையில் விட்டுவிடக்கூடாது என்ற முழக்கத்தோடு சதக் சுரக்ஷா ஜீவன் ரக்ஷா என்ற முழக்கத்தோடு 2023க்கான சாலைப் பாதுகாப்பு வாரம் கொண்டாடப்பட்டது.                             தமிழ்த்துகள்

விதிமுறைகள்

சிவப்பு-நில், மஞ்சள்-தயாராக இரு, பச்சை-புறப்படு என விளக்குகளின் பயன்பாடு அறிந்து வண்டி ஓட்ட வேண்டும். 18 வயதுக்கு உட்பட்டோர் மோட்டார் வண்டிகளை இயக்கக் கூடாது வண்டி ஓட்டக்கூடிய ஒவ்வொருவரும் முறையான ஓட்டுநர் உரிமம் பெற்று இருக்க வேண்டும். வாடகை வண்டி ஓட்டுவோர் ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும். ஒவ்வொரு வண்டிக்கும் ஆயுள் காப்பீடு செய்திருக்க வேண்டும் என்ற அரசின் பல்வேறு விதிமுறைகளை நாம் கடைப்பிடித்தால் மட்டுமே இழப்பையும் விபத்தையும் குறைக்க முடியும்.                        தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

 

சாலை விபத்துகளைத் தடுப்பதில் இளைஞர்களின் பங்கு

எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை

அதிர வருவதோர் நோய் என்கிறார் திருவள்ளுவர்.                   தமிழ்த்துகள்

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை என்று திருவள்ளுவர் கூறியதை நாம் மனதில் பதிக்க வேண்டும். இன்றைய இளைஞர்கள் இருசக்கர வண்டிகளில் மூன்று நான்கு பேர் பயணிப்பதை சாகசம் என்று நினைத்துவிடுகிறார்கள். அது முற்றிலும் சாலை விதிகளுக்குப் புறம்பானது; விபத்துகளை ஏற்படுத்தக் கூடியது என்பதை உணர வேண்டும்.                 தமிழ்த்துகள்

 

பள்ளிகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் உள்ள இடங்களில் உரிய சமிக்ஞைகளைப் பார்த்து அதற்கு ஏற்றபடி வண்டிகளைச் செலுத்த வேண்டும். மேலும் வளைவுகள், பாலங்கள், வேகத்தடைகள் அமைக்கப்பட்ட இடங்கள் அறிந்து வண்டியைச் செலுத்த வேண்டும். மது மற்றும் போதைப் பொருள்களைப் பயன்படுத்திவிட்டு மோட்டார் வண்டிகளை ஓட்டுவது பெருங்குற்றமாகும். பெரும்பாலான விபத்துகள் இதன் மூலமாகத்தான் நடக்கின்றன. அவசரமாகச் செல்லக்கூடிய வண்டிகளுக்கு வழி விடுதல் வேண்டும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் வண்டிகளை அவ்வப்போது பழுது பார்த்தல் மிக அவசியம் ஆகும்.

முடிவுரை                           தமிழ்த்துகள்

வந்தபின் காப்பது மடமை வருமுன் காப்பதே அறிவுடைமை என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிந்து அதன்படி நடந்து கொள்ள வேண்டும். இருப்பது ஓர் உயிர் தான் அது போகப்போவது ஒருமுறைதான், அவ்வுயிர் நாட்டிற்காகப் போவதில் பெருமை கொள்கிறேன் என்றார் பேரறிஞர் அண்ணா. நாம் கொடுக்கக் கூடிய இரத்தம் இன்னொரு உயிரைக் காப்பாற்றுவதாக இருக்க வேண்டும்; அதை விட்டுவிட்டு நம்முடைய இரத்தம் சாலைகளில் வீணே போக நாம் அனுமதிக்கக் கூடாது.                      தமிழ்த்துகள்

மனித உயிர்கள் மகத்தானவை ஒவ்வொரு நாட்டின் சொத்தாக இருக்கக்கூடியது மனித வளம். இந்த மனித வளம் சாலை விபத்துகளால் பறிபோவது கூடாது. விழிப்புணர்வு இல்லாத வண்டி ஓட்டுபவர்களே நாட்டில் இனி இருக்கக் கூடாது. ஒவ்வொருவரும் சாலை விதிகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். தமிழ்த்துகள்

பொது வண்டிகள் உரிய அளவில் பொதிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். கம்பிகள் தகடுகள் போன்றவற்றை பாதுகாப்பான முறையில் ஏற்றிச் செல்ல வேண்டும். அமிலங்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்கள் ஏற்றிச் செல்லும் வண்டிகள் உரிய விதிகளைப் பின்பற்ற வேண்டும்.

வெள்ளம் வரும் முன்னே அணை போட வேண்டும் !

விபத்து நடக்கும் முன்னே விழிப்புணர்வு கொள்ள வேண்டும்!                தமிழ்த்துகள்

விழிப்புணர்வு கொள்வோம்! சாலை விபத்தையும் அதில் இறப்போரையும் தடுப்போம்!

-        கவிஞர் கல்லூரணி முத்து முருகன் 9443323199              தமிழ்த்துகள்

 

மு.முத்துமுருகன், தமிழாசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ம.இரெட்டியபட்டி. தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்


தமிழ்த்துகள்

Blog Archive