8th tamil model notes of lesson
எட்டாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
28-10-2024 முதல் 30-10-2024
2.பாடம்
தமிழ்
3.அலகு
6
4.பாடத்தலைப்பு
வையம்புகழ் வணிகம்
- கவிதைப்பேழை
5.உட்பாடத்தலைப்பு
வளம்பெருகுக,
மழைச்சோறு
6.பக்கஎண்
122 - 126
7.கற்றல் விளைவுகள்
T-814 தான் எழுதுவதைப் படிப்பவர் மற்றும்
எழுத்தின் நோக்கம் ஆகியவற்றை மனதில் கொண்டு பயன் விளைவிக்கும் வகையில் எழுதுதல்.
T-818 தமது சொந்த அனுபவங்களைத் தமக்கே உரிய மொழிநடையைப்
பயன்படுத்தி வெவ்வேறு இலக்கிய வடிவங்களில் எழுதுதல் ( கதை, கட்டுரை, பாடல் வடிவில் அனுபவங்களை வெளிப்படுத்துதல் )
8.கற்றல் நோக்கங்கள்
உழவு சார்ந்த
நூல்களை நூலகத்திலிருந்து படித்தல்.
நாட்டுப்புறப்
பாடல்கள்வழி தமிழர் பண்பாட்டினை அறியும் திறன்.
9.நுண்திறன்கள்
வான்மழையால் வளமான
பயிர்கள் செழிப்பது குறித்து அறியும் திறன்.
மழை வேண்டி
வழிபடும் பாடல் குறித்து அறியும் திறன்.
10.கற்பித்தல் துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2023/10/blog-post_81.html
https://tamilthugal.blogspot.com/2023/10/blog-post_23.html
https://tamilthugal.blogspot.com/2022/10/6-8th-tamil-mindmap-unit-6.html
https://tamilthugal.blogspot.com/2021/05/6-8th-tamil-kuruvina-vidai-unit-6-valam.html
https://tamilthugal.blogspot.com/2019/12/8-2-3.html
https://tamilthugal.blogspot.com/2021/05/6-8th-tamil-mazhai-choru-kuruvina-vidai.html
https://tamilthugal.blogspot.com/2022/10/6-8th-tamil-mindmap-unit-6_26.html
11.ஆயத்தப்படுத்துதல்
உழவு குறித்து
மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச்செய்தல்.
மழைபெற நாம் செய்ய
வேண்டிய செயல்களைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
தகடூர் யாத்திரையை
அறிமுகப்படுத்துதல்.
மழைச்சோற்று
நோன்பு குறித்து அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
ஆசிரியர் வளம்
பெருகுக பாடலை வாசித்துப் பொருள் கூறுதல், மாணவர்களும் பாடலை வாசித்தல். சேர
நாட்டின் உழவுச் சிறப்புகள் குறித்து விளக்குதல். உழவுத்தொழிலின் அவசியம் குறித்து
மாணவர்களைக் கேட்டல்.
மாணவர்கள் அறிந்த விவசாயம் குறித்துக் கூறச்செய்தல். மழையின்
அவசியம் பற்றி மாணவர்களைக் கூறச்செய்தல். மாணவர்கள் அறிந்த மழையின் நன்மைகளைக்
கூறச்செய்தல். மழை குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
உழவுத்தொழில் குறித்துக் கூறுதல். உழவுக்கு மழையின் அவசியம்
குறித்துக் கூறுதல். உழவுக்கும் மழைக்கும் உள்ள தொடர்பைக் கூறுதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – வாரி என்பதன் பொருள்
..............................
கனத்தமழை என்பதன் பொருள்
.....................................
ந.சி.வி – உழவர்கள் எப்போது ஆரவார ஒலி எழுப்புவர்?
மக்கள் ஊரைவிட்டு வெளியேறக் காரணம் என்ன?
உ.சி.வி – உழவுக் கருவிகளைப் பட்டியலிடுக.
மழை வளம் பெருக மக்கள் செய்ய
வேண்டியவைகளை எழுது.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
மழை தொடர்பான பாடல்களைப் பட்டியலிடுக.
உழவின் பெருமைகளை இணையம் மூலம் அறிதல்.