8th tamil model notes of lesson
எட்டாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
21-10-2024 முதல் 25-10-2024
2.பாடம்
தமிழ்
3.அலகு
5
4.பாடத்தலைப்பு
குழலினிது
யாழினிது – விரிவானம், கற்கண்டு
5.உட்பாடத்தலைப்பு
தமிழர் இசைக்கருவிகள்,
தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள், திருக்குறள்.
6.பக்கஎண்
104 - 120
7.கற்றல் விளைவுகள்
T-817 ஒரு குறிப்பிட்ட சூழலில் பிறர்
பயன்படுத்திய சொற்களைப் பிறிதொரு சூழலில் தமது மொழிநடையில் பயன்படுத்துதல்.
T-816 மொழி பற்றிய நுட்பங்களை அறிந்து அவற்றைத்
தம் மொழியில் எழுதும்போது பயன்படுத்துதல் (சொற்களை மாற்றுவதன் மூலம் பாடலின்
சந்தத்தில் ஏற்படும் ஓசை நயத்தைப் புரிந்துகொள்ளுதல்)
T-809 படித்தவற்றைப் பற்றி நன்கு
சிந்தித்துப் புரிதலை மேலும் சிறப்பாக்குதல்.
8.கற்றல் நோக்கங்கள்
பழந்தமிழர்
பயன்படுத்திய இசைக்கருவிகளின் நுட்பங்களைப் புரிந்து கொள்ளுதல்.
தொகைநிலை,
தொகாநிலைத் தொடர்களின் வகைகளை அறிந்து பயன்படுத்துதல்.
திருக்குறள்
பாடல்களைச் சீர்பிரித்தும் பொருளுணர்ந்தும்
படித்தல்.
9.நுண்திறன்கள்
இசைக் கருவிகளின்
வகைகளைப் பற்றி அறிதல்.
தொகைநிலை, தொகாநிலைத்
தொடர்கள் பற்றி அறிதல்.
திருக்குறள்களை
வாழ்க்கை நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு எழுதுதல்.
10.கற்பித்தல் துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2022/10/5-8th-tamil-mindmap-unit-5_18.html
https://tamilthugal.blogspot.com/2021/09/ancient-tamil-music-instruments.html
https://tamilthugal.blogspot.com/2023/10/blog-post_37.html
https://tamilthugal.blogspot.com/2021/08/5-thokainilai-thokanilai.html
https://tamilthugal.blogspot.com/2020/01/8-2-2.html
11.ஆயத்தப்படுத்துதல்
இசைக்கருவிகள் குறித்து
மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச்செய்தல்.
வேற்றுமை குறித்து
மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
மாணவர்கள் பார்த்த,
வாசித்த இசைக் கருவிகளின் பெயர்களைக் கூறச்செய்தல்.
மாணவர்கள் அறிந்த தொகை,
தொடர் வகைகள் பற்றிக் கூறச்செய்தல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
இசைக்கருவிகள்
குறித்து மாணவர்களுக்கு விளக்குதல். நான்கு வகை இசைக் கருவிகள் குறித்து விளக்கி
மாணவர்களை அவை குறித்து கூறச்செய்தல். அடிக்கடி காணும் இசைக்கருவிகள் குறித்து
மாணவர்களுடன் கலந்துரையாடல்.
தொகைநிலை தொகாநிலை குறித்து
மாணவர்களுக்கு விளக்குதல்.
திருக்குறளின் விளக்கத்தைப்
புரிய வைத்தல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
இசைக் கருவிகள் இசைக்கும் கலைஞர்களைக் கண்டு உரையாடுதல். தொகை,
தொகாநிலைச் சொற்களை அறிந்துகொள்ளுதல். திருக்குறளின் கருத்துகளை உள்வாங்குதல்.
வாழ்வில் பின்பற்ற முயலுதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – வளர்தமிழ் என்பது
.............................. தொகை.
சேகண்டி
.................................... எனப்படும்.
ந.சி.வி – அன்மொழித்தொகையை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
காற்றுக் கருவிகள் குறித்த செய்திகளைத் தொகுத்து எழுதுக.
அரசன் தண்டிக்கும் முறை யாது?
உ.சி.வி – நீ அறிந்த இசைக் கருவிகளைப் பட்டியலிடுக.
தொகைநிலைத் தொடர்களை
எடுத்துக்காட்டுகளுடன் எழுது.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.
17.தொடர்பணி
இக்கால இசைக்கருவிகளைப் பட்டியலிடுக.
தொகாநிலைத் தொடர்களுக்கு உதாரணங்களை எழுதுதல்.
இசைக்கருவிகள் குறித்த தகவல்களை இணையத்தில் தேடி எழுதுக.