கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, October 11, 2023

எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி தமிழ்க் கட்டுரை பேச்சு

 Engal palli milirum palli tamil speech katturai essay


எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி

முன்னுரை

கல்வி கரையில                தமிழ்த்துகள்

என்று கூறி இருக்கிறார் ஔவைப் பாட்டி. இன்று ஏடு தூக்கும் சிறுவர்களே நாளை நாடு காக்கும் தலைவர்கள் ஆவார்கள். பள்ளி என்பது சமுதாயத்தின் குறுகிய வடிவம் என்பது கல்வி இயல் வல்லுநர்களின் கருத்து. சாதி மத பேதம் இல்லாத சமத்துவம் நிறைந்த பள்ளி எங்கள் பள்ளி.

விளையாட்டு               தமிழ்த்துகள்

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு என்ற பாரதியின் வரிகளைப் படித்தவர்கள் நாங்கள். எங்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளாக அனைவரையும் எண்ணுகிறோம். ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா என்று பாடினார் பாரதி. இந்தப் பகுதியிலேயே இவ்வளவு பெரிய விளையாட்டுத் திடலைப் பார்த்திருக்க மாட்டீர்கள். அப்படிப்பட்ட பெரிய அளவிலான விளையாட்டுத் திடல் கொண்டது எங்கள் பள்ளி. தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

கலைத்திருவிழா

தற்காப்புக் கலைகளான சிலம்பம் மற்றும் கராத்தே சொல்லித் தரப்படுகிறது. உடலையும் மனதையும் வலிமையாக்கும் யோகாசனம் கற்றுத் தரப்படுகிறது. கலைத் திருவிழாக்கள் மூலம் எங்கள் தனித் திறமைகள் வெளிப்படுகின்றன. கரகாட்டம் ஒயிலாட்டம் காவடி ஆட்டம் மற்றும் பரதநாட்டியத்தில் பங்கேற்று திறமைகளை வெளிக்காட்டும் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் படிக்கவும் செய்கிறார்கள். தமிழ்த்துகள்

திறன்மிகு வகுப்பறை

பாலர் பள்ளி முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ளது எங்கள் அரசு மேல்நிலைப்பள்ளி. புதிய உத்திகளுடன் கற்பித்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் நாங்கள் பெற்ற வரம் என்றே கூற வேண்டும். 25 கணினிகளுடன் கூடிய திறன்மிகு வகுப்பறை எங்களைக் காலச் சூழ்நிலைக்கு ஏற்ப திறமையாளர்களாக மாற்றுகிறது. தமிழ்த்துகள்

விழாக்கள்

நல்ல தண்ணீர் வசதியுடன் கூடிய கழிவறைகள், காற்றோட்டமான வகுப்பறைகள், குடிப்பதற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று எங்கள் பள்ளி மிளிர்கிறது. விடுதலை நாள் விழா, குடியரசு நாள் விழா, கல்வி வளர்ச்சி நாள் விழா மற்றும் ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம். தமிழ்த்துகள்

சோலையாக

பள்ளியால் எனக்குப் பெருமை என்னால் பள்ளிக்குப் பெருமை என்ற எண்ணம் எங்கள் ஒவ்வொருவர் மனதிலும் பதிந்து விட்டது. மரங்களுக்குள் பள்ளியா பள்ளிக்குள் மரங்களா என்று கேட்கும் வண்ணம் மரங்கள் நிறைந்த சோலையாக எம் பள்ளி காட்சி தருகிறது. நெல்லிக்கனி தரும் மரங்களும் நாவல் கனி தரும் மரங்களும் ஒவ்வோர் ஆண்டும் எங்களுக்குப் பலன் தருகின்றன. தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

நூலகம், ஆய்வகம்

ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை ஆங்கில வழியில் பயில்வதற்கு வசதி உள்ளது. எந்தத் தனியார் பள்ளிகளும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குக் கற்றல் கற்பித்தல் செம்மையாக இருக்கிறது. பத்தாயிரம் புத்தகங்களுடன் எங்கள் நூலகம் என்னைப் படிக்க வா என்று எப்போதும் அழைத்துக் கொண்டே இருக்கிறது.

இயற்பியல் வேதியியல் தாவரவியல் விலங்கியல் என்று ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு ஆய்வகம் எங்கள் அறிவியல் அறிவை பட்டை தீட்டுகிறது. மாணவர்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன. தமிழ்த்துகள்

சமூக அக்கறை

பள்ளிகளில் இயங்கி வரும் தேசிய மாணவர் படை, நாட்டு நலப் பணித்திட்டம், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம், சாரண சாரணியர் படை, தேசிய பசுமைப்படை செஞ்சுருள் சங்கம் போன்றவை எங்களை சமூக அக்கறை உள்ளவர்களாக மாற்றுகிறது. எம் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் இணைந்து ஒவ்வோர் ஆண்டும் புதிய புதிய வசதிகளைச் செய்து கொடுத்து எம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்கள். தமிழ்த்துகள்

சிறப்பான கல்வி

அதுமட்டுமல்ல பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் நூற்றுக்கு நூறு விழுக்காடு பெறுவதையே இலக்காகக் கொண்டு செயல்படுகிறது எம் பள்ளி. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் ஒவ்வோர் ஆண்டும் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்த வண்ணம் உள்ளனர். தமிழ்த்துகள்

குக்கிராமங்களில் இருந்து வரும் மாணவர்கள் உலகம் முழுவதும் உயர்ந்த அலுவலர்களாக பல்வேறு அரசுப் பணிகளில் வேலை பார்க்கிறார்கள். இராணுவம் மற்றும் காவல்துறைக்குச் செல்லும் வாய்ப்பை இங்கு சிறப்பாகச் செயல்பட்டு வரும் தேசிய மாணவர் படை வழங்குகிறது. தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

நலத்திட்டங்கள்

காலை மாலை சிறப்பு வகுப்புகள் மூலம் பள்ளியின் கல்வித்தரம் மேம்படுத்தப்படுகிறது. பல்வேறு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு மாணவர்களின் உடல் நலம் காக்கப்படுகிறது. மடிக்கணினி, மிதிவண்டி போன்றவை மேல்நிலை பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழ்த்துகள்

விலையில்லா புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள் உள்ளிட்ட அரசு வழங்கும் அனைத்து உதவிகளும் எம் பள்ளிக்குக் கிடைக்கிறது. தமிழ்த்துகள்

திறமைக்கு வாய்ப்பு

மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் கால்பந்து மற்றும் தனிநபர் விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் வெற்றிவாகை சூடி வருகின்றனர். பல்வேறு பிரிவுகளில் நடைபெறும் பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளில் கலந்து கொண்டு எம் பள்ளி மாணவர்கள் பரிசுகளை வென்று வருகிறார்கள். இயலாக் குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளி எம் பள்ளி வளாகத்தில் செயல்படுகிறது. தமிழ்த்துகள்

ஆசிரியர்கள்

இதுவும் முடியும் இன்னமும் முடியும் என்று எம்மை ஊக்கப்படுத்தி கற்பிக்கும் திறமைமிகு ஆசிரியர்கள் எங்கள் பள்ளியின் தூண்கள். தேனியைப் போல சுறுசுறுப்பாக இயங்கும் தலைமை ஆசிரியர் எங்கள் முன்மாதிரி. உன்னால் முடியும் உன்னால் மட்டுமே முடியும் என்று எங்களை வழி நடத்தும் ஆசிரியர்கள் எங்கள் போற்றுதலுக்கு உரியவர்கள். தமிழ்த்துகள்

மிளிரும் பள்ளி

மட்கும் குப்பை மக்காக் குப்பை என்று பிரித்துப் போட்டு பள்ளியின் தூய்மை பேணுகிறோம். நாள்தோறும் முட்டையுடன் சுகாதாரமான சத்துணவு வழங்கப்படுகிறது. ஆதி திராவிடர் மாணவர் விடுதி, பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி மற்றும் மாணவியர் விடுதி எங்கள் பள்ளியில் பயில அண்டை மாவட்டங்களிலிருந்தும் மாணவர்களை அழைக்கிறது. தமிழ்த்துகள்

முடிவுரை        தமிழ்த்துகள்

பாரம்பரியமிக்க எம் பள்ளி இன்னும் பல சாதனைகளைச் சுமந்து நிற்கிறது. உண்மையில் எம் பள்ளி மிளிரும் பள்ளி தான். அப்பள்ளியில் பயில்வது எனக்கு என்றும் பெருமைதான்.

-        கவிஞர் கல்லூரணி முத்து முருகன் 9443323199              தமிழ்த்துகள்

 

மு.முத்துமுருகன், தமிழாசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ம.இரெட்டியபட்டி. தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்


தமிழ்த்துகள்

Blog Archive