கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, October 17, 2023

வீரக்குடும்பம் – தமிழ் இலக்கிய நாடகம் Tamil Drama Script for Students

Veera Kudumbam - tamil ilakkiya nadakam Drama script for students

வீரக்குடும்பம் – இலக்கிய நாடகம்

திரைக்கதை வசனம்-கவிஞர் கல்லூரணி முத்து முருகன் 9443323199   தமிழ்த்துகள்

காட்சி 1

பங்கேற்போர்:- ஒக்கூர் மாசாத்தி, பள்ளிச் சிறுவன், வீரத்தாய்

(தமிழன் என்றொரு இனமுண்டு

தனியே அவர்க்கொரு குணமுண்டு

மானம் பெரிதான வாழ்ந்திடுவான்                    தமிழ்த்துகள்

மற்றவருக்காக துயர்ப்படுவான்

தானம் வாங்கிடக் கூசிடுவான்

தருவது மேலெனப் பேசிடுவான்-நாமக்கல் கவிஞர்)

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

திரைக்குப் பின்னால்...

(கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த குடி

என்று மார்தட்டி நிற்கும் வீரத் தமிழினமே !

பொரு தடக்கை வாளெங்கே மணிமார்பெங்கே

போர் முகத்தில் எவர்வரினும் அஞ்சிடாத பருவயிரத் தோளெங்கே     தமிழ்த்துகள்

என்று பைரவியைக் கேட்ட பரணியே!

மணிமுடிக்காய் மண்ணில் குருதி ஓடக் கொடும்பகை முடித்து

வாகை சூடும் தென்பாண்டி மண்டலமே!

ஒக்கூர் மாசாத்தி உரைத்த வீரக் குடும்பம் இதோ உங்கள் கண் முன் காட்சியாக..)

பள்ளிச் சிறுவன்:- கண்டேன் கண்ணுக்கு அணியை                      தமிழ்த்துகள்

நான் காண்பது கனவா இல்லை நனவா ?

ஆத்திசூடி உரைத்த ஒளவை தொடங்கி வெண்ணிக்குயத்தி, நச்செள்ளை, அல்லூர் நன்முல்லை, இளவெயினி, ஆதிமந்தி வரிசையில் ஒப்பற்ற கவி தந்த ஒக்கூர் மாசாத்தி! வணக்கம் அம்மையே!

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

ஒக்கூர் மாசாத்தி:- யாரப்பா நீ சீருடை போல் தெரிகிறதே, இச்சிறுவயதில் என்னை எப்படி அடையாளம் கண்டாய்?                                 தமிழ்த்துகள்

பள்ளிச் சிறுவன்:- கல்விச்சாலைகள் இப்போது கல்விச் சோலைகளாய் மாறி கலைத்திருவிழாக்கள் நடத்துகின்றன. அதன் வாயிலாக விலை மதிக்க முடியாத உன் போன்ற பெண்பாற் புலவர்களை நான் அறிவேன் அம்மையே!                               தமிழ்த்துகள்

ஒக்கூர் மாசாத்தி;- மிக்க மகிழ்ச்சி! இதோ புறநானூற்றில் நான் வடித்த கவிதையை கண் முன்னே கட்சியாகக் கூறுகிறேன். அதோ பார் அங்கே தென்றலுக்குக் கால் முளைத்ததென பெண்ணொருத்தி அமர்ந்திருக்கிறாள் தெரிகிறதா?                                          தமிழ்த்துகள்

பள்ளிச் சிறுவன்;- அட ஆமாம் இது என்ன கோலம்?

வெள்ளைப் புடவை உடுத்தி வெறித்த பார்வையோடு தலைவிரி கோலமாய்...     தமிழ்த்துகள்

பூக்காடு மணக்க வேண்டிய பைங் கூந்தல்... புழுதிக் காடாய்க் கிடக்கிறதே?

ஒக்கூர் மாசாத்தி;- வீரத்தைக் கடவுளாக வணங்குகின்ற பழந்தமிழ்க்குடியில் பூத்திட்ட பெண் இவள். உயிரையும் உடலையும் விட மானம் பெரிது; ஆண்மை பெரிதென வாழ்ந்து வந்த தமிழர் மரபின் திலகம் இவள்!

பள்ளிச் சிறுவன்: அப்படியா? கேட்கவே வியப்பாக இருக்கிறதே! இவள் சோகத்திற்கு என்ன காரணம் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?                        தமிழ்த்துகள்

ஒக்கூர் மாசாத்தி:- இவள் வீரத்தையும் துணிவையும் இப்போது நினைத்தாலும் அந்நினைவு தாங்க முடியாமல் என் நெஞ்சு வெடித்து விடும் போலிருக்கிறது! மகனே! இருந்தாலும் என் நெஞ்சைக் கல்லாக்கிக் கொண்டு அவள் கடந்து வந்த காட்டாறுகளைப் படம் பிடித்துக் காட்டுகிறேன் வா.

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

காட்சி 2

பங்கேற்போர்:- வீரத்தாய், அவள் தமையன்

வீரத்தாய்:- நிலையா உலகில் நிலைக்கும் என்று இந்த வாழ்வை வாழ்ந்து வருகிறோம்! இருப்பது ஓர் உயிர் தான் அது போகப்போவது ஒருமுறைதான். அவ்வுயிர் இந்த நாட்டுக்காகப் போகட்டும்! வெற்றி முழக்கமிடு அண்ணா! உன் முழக்கம் கேட்டு யானைகள் போர் முகத்தில் அஞ்சி நடுங்கட்டும்.                         தமிழ்த்துகள்

தமையன்:- எம் குலம் காக்கும் குலக்கொடியே! என் உடன் பிறந்த வீரமே! மூன்றாம் நாள் செருக்களத்தில் என் முழக்கம் கேட்கும்! அதில் பகைவர் படைகள் கலக்கம் அடையும்.

வீரத்தாய்:- மங்காத வீரம் கொண்ட சிங்க ஏறே! சென்று வா! பகை வென்று வா தமிழ்த்துகள்

தமையன்:- கலங்காதே! தமக்கையே போய் வருகிறேன். வெற்றி நமதே!

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

திரைக்குப் பின்னால்... (இந்திரலோகத்தில் இருந்து வந்ததோ என்ற யானைகளைப் பந்தாடுகிறான் தமையன். போரில் பகைவர் குலை நடுங்குகிறது. தடந்தோளன் பெருமார்பில் ஈட்டி பாய, நாட்டுக்காக உயிரை விட்ட நல்லவர்கள் வரிசையில் அவனும் சேர்கிறான்)              தமிழ்த்துகள்

காட்சி 3

பங்கேற்போர்:-வீரத்தாய், சிறு குழந்தை, கணவன்

வீரத்தாய்- அல்லும் பகலும் சிறகாய் விரித்து என்னை அடைகாத்த உடன் பிறப்பே! மண்ணுக்குப் பசிக்கிறதோ உன்னை வீர மகனாய் விழுங்கிக் கொண்டது? யானைகள் நடுக்கமுறப் போர் புரிந்த அடலேறே, வீரம் விளைந்த மண் உன்னை மறவாது. இன்னும் ஒருவர் நம் இல்லக் கணக்கில் போர்க்களம் செல்வதற்கு உடன்பட்டால் பெரிதும் மகிழ்வேன் யான்.                     தமிழ்த்துகள்

கணவன்:- கலங்காதே கண்மணியே! கண்ணாளன் நான் இருக்கிறேன் கனப்பொழுதில் களம் சென்று எதிரிகள் தலைகளைப் பந்தாடுவேன்! வெற்றி முரசம் கேட்கட்டும்! நெற்றித் திலகம் இட்டு அனுப்படி!

துடிக்கின்ற தோள்களுக்கு வேலை வந்து விட்டது. பசித்துக் கிடக்கும் என் வீர வாளுக்கு இரை கிடைத்து விட்டது. இதோ புறப்படுகிறேன்!                        தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

வீரத்தாய்:- வெஞ்சமர்க் களத்தில் அஞ்சாது போரிடும் அருமைக் கணவா! தாய் நாட்டின் மானம் காக்க வாளேந்திப் புறப்படு, வெற்றி உன் வசமாகட்டும்!

பைந்தமிழர் வீரம் உனக்குத் துணை வரட்டும்!

(அப்போது விளையாடிக் கொண்டிருந்த சிறு பாலகன் ஓடி வருகிறான்) தமிழ்த்துகள்

சிறு குழந்தை- அப்பா அப்பா போர் முரசு ஒலிக்கும் சத்தம் கேட்கிறது விரைந்து செல்லுங்கள் வெற்றியோடு வாருங்கள்                                தமிழ்த்துகள்

கணவன்:- சென்று வருகிறேன் மகனே, வென்று வருகிறேன்!

சிறு குழந்தை:- சீக்கிரம் நீங்கள் வந்து விடுங்கள்! இல்லையென்றால், வாளும் வேலும் கையில் ஏந்தி உங்களைத் தேடி அங்கேயே வந்து விடுவேன்.                          தமிழ்த்துகள்

கணவன்:- அவசியமிருக்காது கண்ணே! அஞ்சி நடுங்கும் பகைவர் கூட்டம் கிஞ்சித்தும் மிச்சமில்லாது வெட்டிச் சாய்ப்பேன், விரைந்து வருவேன்!                   தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

திரைக்குப் பின்னால்.. (முறியடிக்க முடியாத பெரும்பகை முடித்து உருட்டினான் தலைகளை மண்ணில் உடைவாளால்! காற்றெனச் சுழன்ற அவனது வேலுக்கு வீழ்ந்தன உடல்கள்! பாய்ந்தன குருதி! எனினும், பகைவர் வாளுக்கு மார்பைக் காட்டி வீர மரணம் அடைந்தான் கணவன்; உடைந்தாள் மனைவி. கண்ணில் வரும் நீர்ப் பெருக்கைக் கட்டுப்படுத்த முடியாத பாவியாய்ப் பொட்டிழந்து பூவிழந்து மங்கள நாணிழந்து தவிக்கிறாள் இளமங்கை)                 தமிழ்த்துகள்

காட்சி 4

பங்கேற்போர்: வீரத்தாய் & ஒரே குழந்தை

சிறு குழந்தை:- அம்மா அம்மா. அப்பா எங்கே அம்மா? இன்னும் ஏன் வரவில்லை? எப்போ வருவார்?

வீரத்தாய்:- பால்மணம் மாறாப் பாலகனே! பாவியானேன்! செருக்களத்திற்கு அனுப்புவதற்குச் செம்மாந்து நிற்கும் வீரர்கள் இல்லாத குடிசையில் விளக்கு இல்லாத திரியாய் நிலவில்லாத இரவாய் நிர்க்கதியற்று இருக்கிறேன் மகனே!             தமிழ்த்துகள்

(சிறுவன் குடிசைக்குள் ஓடிச் சென்று அவனால் தூக்க முடியாத பெரிய வேல் ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு வருகிறான்)                                       தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

சிறு குழந்தை:- என்னடா முடியும் என்று என் எதிரிகள் கொக்கரிக்கட்டும்! இதுவும் முடியும்; இன்னமும் முடியும் என்று என் வேல் வீரம் பேசட்டும்! வீரவேல்! வெற்றிவேல்! செருக்களத்திற்குச் செல்கிறேன் அன்னையே கண்ணீரைத் துடையுங்கள்! வெற்றித் திலகமிட்டு என்னை அனுப்புங்கள்!                     தமிழ்த்துகள்

வீரத்தாய்:- புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கிறேன் என் மகனே! என் மானம் காக்க வந்த குலவிளக்கே! மரணத்தின் மடியில் விழுந்து விட்ட தமையனை உன் கண்ணில் பார்க்கிறேன்! மானம் பெரிதென வீர மரணம் தழுவிய கணவனை உன் பேச்சில் காண்கிறேன்! போதுமடா கண்ணே! இதோ பரந்து கிடக்கும் உன் சுருண்ட முடிகளை ஒழுங்குபடுத்தி எண்ணெய் பூசி வழியனுப்புகிறேன்!  தமிழ்த்துகள்

பகைவர் நெஞ்சில் வேல் எய்து குருதி பூசிவா கோ மகனே! வெற்றி மகள் உன் வீரத்திற்குத் துணை நிற்பாள்.

திரைக்குப் பின்னால்...

(விடை காண முடியாத வாழ்வின் பக்கங்களை வானவில் கனவுகளோடு வலம் வந்த இந்தத் தமிழச்சி, தாங்க முடியாத வலிகளையும் சுமந்து நிற்கும் இந்த வீரத்தாய்... கண்ணில் நீர் நிறைத்து நெஞ்சில் உரம் வளர்த்து பிஞ்சு மகனை நாட்டிற்குக் கடைசி காணிக்கையாய்க் கொடுத்துவிட்ட இறுமாப்புடன் காத்திருக்கிறாள். வருவானா வெற்றி வீரனாய்? செருக்களத்தில் போர் முரசும் ஒலிக்கிறதா? காலம் தான் விடை சொல்ல வேண்டும்.)

-        கவிஞர் கல்லூரணி முத்து முருகன் 9443323199              தமிழ்த்துகள்

மு.முத்துமுருகன், தமிழாசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ம.இரெட்டியபட்டி. தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive