கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, October 08, 2023

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஆழ்கடலின் அடியில், இலக்கிய வகைச் சொற்கள்

  7th tamil model notes of lesson

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

21-10-2024 முதல் 25-10-2024

2.பருவம்

2

3.அலகு

1

4.பாடத்தலைப்பு

அறிவியல் ஆக்கம் – விரிவானம், கற்கண்டு

5.உட்பாடத்தலைப்பு

ஆழ்கடலின் அடியில், இலக்கிய வகைச் சொற்கள்

6.பக்கஎண்

14-20

7.கற்றல் விளைவுகள்

T-719 தனிப்பட்ட அனுபவங்களைச் சொந்த நடையில் தமது மொழியில் வெளிப்படுத்துதல்.

T-717 வெவ்வேறு சூழல்களில் மற்றவர்களால் கூறப்பட்ட சொற்களை ( முறை சார்ந்த அல்லது தனி முறையிலான கூட்டங்கள் அல்லது நிகழ்வுகளின்போது வயதில் பெரியவர்கள் பயன்படுத்திய சொற்கள், தச்சர், குயவர் துணிதுவைப்பவர்,  முடிதிருத்துவோர் போன்ற தொழிலாளிகளுடன் பெரியவர்கள் உரையாடும்போது கேட்ட சொற்கள்) வேறு சூழல்களில் நாம் விரும்பியவாறு எழுதுதலில் பயன்படுத்துதல்.

8.கற்றல் நோக்கங்கள்

மொழிபெயர்ப்புப் புதினத்தைப் படித்தறிந்து, கதையைச் சுருக்கமாகச் சுவைபட எடுத்துரைத்தல்.

மொழியில் பயன்படுத்தப்படும் இலக்கிய வகைச் சொற்களைக் கண்டறிதல்.

9.நுண்திறன்கள்

கப்பல்களின் வகைகளும் பயன்களும் பற்றி பேசுதல்.

நால்வகைச் சொற்கள் வகைப்படுத்தி எழுதுதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்




 இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2023/10/blog-post_54.html

https://tamilthugal.blogspot.com/2023/10/blog-post_49.html

https://tamilthugal.blogspot.com/2022/10/aalkadalin-adiyil-7th-virivaanam.html

https://tamilthugal.blogspot.com/2022/10/2-1-7th-tamil-mindmap-term-2-unit-1_18.html

https://tamilthugal.blogspot.com/2018/06/blog-post_8.html

https://tamilthugal.blogspot.com/2022/10/2-1-7th-tamil-mindmap-term-2-unit-1_33.html

https://tamilthugal.blogspot.com/2021/08/2-1-ilakiya-vakai-sorkal-7th.html

https://tamilthugal.blogspot.com/2020/06/7-2-1-7th-tamil-ilakanam-ilakiya-vagai.html

11.ஆயத்தப்படுத்துதல்

நீர்மூழ்கிக் கப்பல் குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச்செய்தல்.

மாணவர்கள் அறிந்த சொற்களின் வகை குறித்துக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

ஆழ்கடலின் அடியில் கதை பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

சொற்களின் வகைகளைக் கூறுதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          ஆழ்கடலின் அடியில் கதையை மாணவர்கள் உணரும் வகையில் கூறுதல். மாணவர்களின் கருத்துகளைக் கேட்டல். தீவு, புதையல், எரிமலை, முத்துக்குளித்தல், சுறா குறித்து மாணவர்களைக் கூறச் செய்தல்.

          இலக்கிய வகைச் சொற்களை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குதல். மாணவர்களை மேலும் சில எடுத்துக்காட்டுகளைக் கூறச் செய்தல்.

ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள், பல பொருள் குறித்த ஒரு திரிசொல் குறித்து கலந்துரையாடுதல்.

 


 


          மனவரைபடங்கள் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், நீர்மூழ்கிக் கப்பல் குறித்து உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

கற்பனைக் கதை படிக்கும், எழுதும் பழக்கத்தை மாணவர்களிடம் உருவாக்குதல். இலக்கிய வகைச் சொற்கள் குறித்து அறியச் செய்தல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – நால்வகைச் சொற்களை எழுது.

          ந.சி.வி – திரிசொல்லின் வகைகள் குறித்து விளக்குக.

          உ.சி.வி – கடல்பயணம் குறித்த ஒரு கற்பனைக் கதையை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

நாளிதழ் செய்தியில் நால்வகைச் சொற்களை இனங்காணுதல்.

நீர்மூழ்கிக் கப்பல் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.

தமிழ்த்துகள்

Blog Archive