கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, October 09, 2023

கடமை கண்ணியம் கட்டுப்பாடு தமிழ்ப் பேச்சு கட்டுரை

 kadamai kanniyam katupadu tamil speech essay katturai

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத்

தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்- என்ற பாவேந்தன் பாரதிதாசனின் வரிகளால் அன்னைத் தமிழை வணங்கி என் உரையைத் தொடங்குகிறேன்.          தமிழ்த்துகள்

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே

சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே

வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லர்க்குக் கடனே

நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே         தமிழ்த்துகள்

ஒளிறுவாள் அருஞ்சமம் முறுக்கி

களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே என்கிறார் பொன்முடியார். தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற நியதி இருக்கிறது. தாயாய் மகளாய் மனைவியாய் தாதியாய் தந்தையாய் மகனாய் மன்னனாய் எந்த நிலையில் இருந்தாலும் அவரவர்க்கென்று கடமைகள் உள்ளன. ஒவ்வொருவரும் இந்நாட்டின் குடிமக்கள். உரிமையைப் பெறுவது போல் கடமையையும் செய்ய வேண்டும். தொழிலாளர் தான் பெற்ற ஊதியத்துக்கு உண்மையாய் உழைப்பது கடமை.              தமிழ்த்துகள்

மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை

என்நோற்றான் கொல்லெனுஞ் சொல்

என்று மகனுக்கான கடமையைக் கூறுகிறார் திருவள்ளுவர்.

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து                  தமிழ்த்துகள்

முந்தி இருப்பச் செயல் என்று தந்தை மகனுக்கு ஆற்ற வேண்டிய நன்றியை எடுத்துரைக்கிறார். மாணவர்களின் கடமை என்ன என்பதை பள்ளிக்கூடம் பட்டியலிடுகிறது. ஒரு தொண்டனின் கடமை என்ன என்பதை ஒவ்வொரு அரசியல் கட்சியும் பட்டியலிட்டு இருக்கிறது. கடமையிலிருந்து பின்வாங்குபவனை இவ்வுலகம் மதிப்பதே இல்லை. கடமை தவறியவன் வாழ்வில் உயர்வு அடைய மாட்டான்.    தமிழ்த்துகள்

செய்யும் தொழிலே தெய்வம் என்று நம் முன்னோர் கூறியதும் இதற்காகத்தான்.

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

கடமையைச் செய்! உரிமையைப் பெறு என்ற முழக்கம் ஒவ்வொரு நாட்டிலும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது. பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என்ற முழக்கம் விண்ணைப் பிளக்கிறது. தலைவனின் கடமை என்ன? அரசனின் கடமை என்ன? என்பதற்கு அன்றே வரையறை செய்துவிட்டான் தமிழன். தமிழ்த்துகள்

அதனால்தான் வேதம் ஓதும் வேதியருக்கு ஒரு மழை, கற்பினிற் பிறழாத பெண்டிர்க்கு ஒரு மழை, செங்கோல் வழுவாத மன்னவர்க்கு ஒரு மழை என்று மாதம் மும்மாரி பெய்ததற்கான காரணத்தை வரையறுத்தான்.     தமிழ்த்துகள்

அனைத்தையும் துறந்து சென்ற துறவியர் கூட தாய்க்கு இறுதிக் கடன் செய்வதைத் தம் கடமையாகக் கொண்ட நிகழ்வுகளை நாம் அறிவோம்.        தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

"முந்தித் தவம் கிடந்து முற்நூறு நாள் சுமந்து-

என்ற பட்டினத்தாரின் வலி மிகுந்த வரிகள் எவர் கண்களையும் கலங்கச் செய்யும். புறங்கூறாது இருத்தல், பிறர் அறியா வண்ணம் அவருக்குத் தீங்கு செய்யாதிருத்தல். பிறரை ஏமாற்றிப் பொருள் ஈட்டல் இவற்றை விடுத்து பிறர் நம்மேல் வைத்த நம்பிக்கைக்கு உண்மையாக இருத்தல். குடும்பத்திலும் சமுதாயத்திலும் நாட்டிற்காகவும் தன் சுயநலம் விடுத்து நடுநிலைமை காத்தல் இவை அனைத்தும் கண்ணியம் என்பதற்கான விளக்கம் ஆகும். கண்ணியமிக்க மனிதர்களைத் தமிழகம் அதிக அளவில் கண்டிருக்கிறது.  தமிழ்த்துகள்

புறாவுக்காகத் தன் தசையையே அறுத்துக் கொடுத்த சிபி மன்னன். பசுவின் கன்றுக்காகத் தன் ஒரே மகனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்ற மனுநீதிச் சோழன். பொய்யான தீர்ப்பைச் சொல்லி விட்டோம் என்பதற்காக அவையிலேயே உயிர் நீத்த பாண்டிய மன்னன். இவர்கள் எல்லாம், தான் கண்ணியத்தில் இருந்து தவறி விட்டோமே என்று அதனைச் சரி செய்ய செயற்கரிய செய்து வரலாற்றில் இடம் பெற்றவர்கள். நீதியும் நேர்மையும் நம்மிடம் இருந்துவிட்டால் இவ்வுலகம் நம் பக்கமே.      தமிழ்த்துகள்

குற்றமிலனாய்க் குடி செய்து வாழ்வானைச்

சுற்றமாச் சுற்றும் உலகு என்கிறார் வள்ளுவர். ஏட்டுக் கல்வி இல்லாத காலத்திலும் குருகுலத்தில் சென்று கற்று கண்ணியமாய் வாழ்ந்தோர் பலர். திண்ணைப் பள்ளிகள் வந்த பிறகும் மாசறக்கற்று மண்ணில் சிறந்தோர் பலர். இந்தக் கணினிக் காலத்திலும் மாணவனுக்குரிய கண்ணியத்தை மறவாதோர் பலர். கொண்ட கொள்கையில் விடாப்பிடியாய் இருந்து சமுதாய மேம்பாட்டிற்காக உழைக்கும் தலைவர்கள் பலர். தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

கோடானு கோடி தொண்டர்கள் இருந்தாலும் அவர்கள் ஓரிடத்தில் கூடும்போது கண்ணியம் காத்தலே தன் தலைவனுக்கு அவர்கள் காட்டும் மரியாதை. செய்வது வாணிகம் என்றாலும் அதிகமாக எடை போட்டு வாங்காமல், குறைவாக எடை போட்டு விற்காமல் அறவழியில் சேர்க்கின்ற பொருள் என்றும் நிலைக்கும். தமிழ்த்துகள்

இல்லையென்றால் அழக்கொண்டை எல்லாம் அழப்போம் என்று எச்சரிக்கிறார் வள்ளுவர். கண்ணியத்தில் தவறும் பெண்ணை இச்சமுதாயம் மதிப்பதில்லை. ஒரு வீட்டில் ஆடவர் கண்ணியம் தவறினால் அவருக்கு மட்டுமே இழுக்கு. ஆனால் பெண்கள் கண்ணியம் தவறினால் அக்குடும்பத்துக்கே இழுக்கு என்று நம் முன்னோர் கூறியுள்ளனர். அதனால்தான் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்பதை பெண்களுக்கு உரித்தாக்கினர். தமிழ்த்துகள்

தமிழன் என்றோர் இனமுண்டு

தனியே அவர்க்கொரு குணம் உண்டு

அமிழ்தம் அவருடை மொழியாகும்

அன்பே அவனுடை வழியாகும் தமிழ்த்துகள்

மானம் பெரிதென வாழ்ந்திடுவான்

மற்றவர்க்காகத் துயர்ப்படுவான்

தானம் வாங்கிடக் கூசிடுவான்

தருவது மேல் என பேசிடுவான் என்ற நாமக்கல்லாரின் வரிகளில் தமிழனின் கண்ணியம் வெளிப்படும். தமிழ்த்துகள்

கட்டுப்பாடற்ற வீரம் மூடத்தனம். கட்டுப்பாடற்ற வேகம் விபத்தைத் தரும். கட்டுப்பாடு இல்லாத சமுதாயம் காட்டு மரமாகும். கட்டுப்பாடற்ற கூட்டமே போராட்டக் களமாகும். அதில் வெற்றி கிடைக்காது. கட்டுப்பாடுடன் கூடிய சமுதாயம் வெற்றிமேல் வெற்றி பெறும். கட்டுப்பட்டு நடக்கக்கூடிய எம்மனிதனும் பண்பாளனாக உயர்வான். தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்ற ஆணிவேரில்தான் பரந்து விரிந்த பாரத நாட்டின் கட்டுப்பாடு முழுவதும் இருக்கிறது. சாலை விதிகளுக்குக் கட்டுப்படாத வண்டிகள் விபத்தைச் சந்திக்கின்றன. இதனால் பெரும் உயிரிழப்பும் பொருள் சேதமும் ஏற்படுகிறது. வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்ட வண்டிகளில்தான் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயணிக்க முடியும் என்ற சட்டமே இருக்கிறது. தமிழ்த்துகள்

தேனடை என்ற ஒன்றிற்குள் கட்டுப்பட்டதால்தான் தேனீக்கள் தேனைச் சேகரிக்க முடிகிறது. தொண்டர்கள் என்ற கட்டுப்பாட்டில் இருப்பதால்தான் ஒரு கட்சி வெற்றி மேல் வெற்றி பெற முடிகிறது. குடும்பம் என்ற கட்டுப்பாட்டில் அதன் உறுப்பினர்கள் எல்லாம் இருந்துவிட்டால் ஒரு பல்கலைக்கழகமாக அது உயர்ந்து விடுகிறது. மனக்கட்டுப்பாடு இருக்கின்ற மனிதர்கள் மட்டுமே தன்னை ஆள முடியும் தரணியும் ஆள முடியும். ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்ற புத்தர் மனக்கட்டுப்பாடு பற்றிப் பேசுகிறார். தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

ஆபத்துக்கு உதவாப் பிள்ளை

அரும்பசிக் குதவா அன்னம்

தாகத்தைத் தீராத் தண்ணீர் தமிழ்த்துகள்

தரித்திரம் அறியாப் பெண்டிர்

கோபத்தை அடக்கா வேந்தன்

குருமொழி கொள்ளாச் சீடன்

பாவத்தைப் போக்காத் தீர்த்தம்

பயனில்லை ஏழும் தானே என்கிறது விவேக சிந்தாமணிப் பாடல். ஒழுங்கும் கட்டுப்பாடும் இருப்பதால்தான் ஆறுகள் பயனளிக்கின்றன. கட்டுப்பாடற்ற காட்டாறுகள் பயனில்லாமல் போகின்றன. தமிழ்த்துகள்

ஒழுங்கும் கட்டுப்பாடும் வேண்டும் என்பதற்காகவே மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர். ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் அடிமைத்தனம் என்று நினைத்து விட்டால் நாம் வாழ்வில் உயர முடியாது. விதிகளுக்குக் கட்டுப்பட்டு வாழ்தல் ஆறறிவு கொண்ட மனித இனத்திற்கே உயர்வைத் தரும். தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற முப்பெரும் கொள்கைகளை வகுத்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். வறுமையிலும் செம்மையாக வாழ்தல் வேண்டும். கடமையை மறவாத தொண்டராக இருக்க வேண்டும். கட்டுப்பாட்டை மீறாத கண்ணியம் வேண்டும். இப்படிப்பட்ட தலைவர்களாலும் தொண்டர்களாலும் தான் நல்லாட்சியைத் தர முடியும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர் அண்ணா. தமிழ்த்துகள்

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் நல்ல மணம் உண்டு என்று எதிர்க்கட்சிக்காரர்களையும் மதித்தவர் அண்ணா. எதிர்க்கட்சி ஒருபோதும் எதிரிக் கட்சி அல்ல என்பது அவர் எண்ணம்.            தமிழ்த்துகள்

இருப்பது ஓர் உயிர்தான், அது போகப் போவது ஒருமுறைதான்; அவ்வுயிர் இந்த நாட்டிற்காகப் போவதில் பெருமை கொள்கிறேன் என்று பற்றோடு முழங்கிய பேரறிஞர் அண்ணாவின் முப்பெரும் கொள்கைகளைக் கடைப்பிடிப்போம்! தமிழ்த்துகள்

மூவேந்தர் போற்றி வளர்த்த முத்தமிழை மூச்சாகக் கொண்ட தமிழரே பண்பாட்டுப் பெட்டகத்தின் அடையாளம் என்பதை உலகுக்கு எடுத்துரைப்போம்.

வாய்ப்புக்கு நன்றி வருகிறேன், விடைபெறுகிறேன்.

-        கவிஞர் கல்லூரணி முத்து முருகன் 9443323199              தமிழ்த்துகள்

மு.முத்துமுருகன், தமிழாசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ம.இரெட்டியபட்டி. தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive