புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
ஒன்பதாம் வகுப்பு
தமிழ்
செயல்பாடு 3
விடைக்குறிப்பு
1.பின்வரும் சொற்களை அகராதியில் கண்டு அதற்கான பொருளை எழுதுக.
அடிசில் - சோறு, உணவு
ஆவலி - காண்க
இம்மி - அணு, புலன், பொய்ம்மை
கல்லல் - குழப்பம்
காசினி - பூமி
தரு - மரம்
நண்ணலர் - பகைவர்
வங்கூழ் - காற்று
வெஃகல் - பேராசை
2.கீழுள்ள பத்தியைக் கவனமாய்ப் படித்துக் கொடுக்கப்பட்ட சொற்களுக்குரிய பொருளை அகராதியில் கண்டு எழுதுக.
அஞ்ஞானம் அகன்றிட, ஆழ்ந்து கற்றிடுவீர்; இறுமாப்பாய் உலவி, ஈறுவரை புகழ்பெற்று வாழ்ந்திடுவீர்; ஊருணியாய்ப் பிறருக்குப் பயன்பட்டு, எஞ்ஞான்றும் சிறந்திடுவீர்; ஏதின்றி மொழிந்திடுவீர்; ஐயம் அகற்றித் தெளிந்திடுவீர்; ஒப்புமையின்றி உயர்ந்திடுவீர்; ஓதிஞானம் பெற்றதனால், ஔதாரியமாய் வாழ்ந்திடவே, அஃகலிலும் கற்றிடுவீர்.
அஞ்ஞானம் - அறிவின்மை
இறுமாப்பு - பெருமிதம்
ஈறுவரை - இறுதிவரை
ஊருணி - குளம்
எஞ்ஞான்றும் - எப்பொழுதும்
ஏதின்றி - குற்றமின்றி
ஓதிஞானம் - கல்வியறிவு
ஔதாரியம் - பெருந்தன்மை
அஃகல் - குறைதல்
3.பொருளை அகராதி உதவியுடன் எழுதுக.
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
குற்றம் நேர்வதற்கு முன்னரே வராமல் காத்துக் கொள்ளாதவன் வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல அழிந்துவிடும்.
மனமெனும் சோலையில் மந்தியாய் ஆடி
கனலான சொல்லாலே காய்த்து மனத்தை
ஊனமாய் மாற்றுமந்த உன்மத்தக் கோபத்தை
ஏனமாய் எஞ்ஞான்றும் எண்.
மனம் என்ற சோலையில் குரங்கு போல ஆடி நெருப்பான சொல் கொண்டு மனதை ஊனமாக மாற்றும் உச்ச கோபத்தைக் குற்றமாய் எப்போதும் நினைக்க வேண்டும்.