கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, September 02, 2021

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் பத்தாம் வகுப்பு தமிழ் செயல்பாடு 5 விடைக்குறிப்பு refresh book tamil answer activity 5

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

பத்தாம் வகுப்பு

தமிழ்

செயல்பாடு 5

விடைக்குறிப்பு

1.எழுதிய கவிதை என்ற சொல், நிகழ்காலம், எதிர்காலத்தில் எவ்வாறு அமையும் என்பதை எழுதுக.

எழுதிய கவிதை - இறந்தகாலப் பெயரெச்சம்

எழுதுகின்ற கவிதை - நிகழ்காலப் பெயரெச்சம்

எழுதும் கவிதை - எதிர்காலப் பெயரெச்சம்

2.பொருத்துக.

வந்து - வினையெச்சம்
எழுதிய - பெயரெச்சம்
எடுத்தனன் கொடுத்தான் - முற்றெச்சம்
வேகமாக - குறிப்பு வினையெச்சம்

3.தேர்ந்தெடுத்து எழுதுக.

அ.பெயரெச்சம் - எழுதுகின்ற

ஆ.தெரிநிலைப் பெயரெச்சம் - எழுதிய புத்தகம்

இ.குறிப்புப் பெயரெச்சம் - பெரிய புத்தகம்

ஈ.வினையெச்சம் - பேசி

உ.தெரிநிலை வினையெச்சம் - படித்து வந்தான்

ஊ.குறிப்பு வினையெச்சம் - விரைந்து வந்தான்

4.தொடரில் விடுபட்ட எச்சங்களைஎழுதுக.

அ.அகிலன் நல்ல மாணவன்.

ஆ.குதிரை வேகமாக ஓடியது.

இ.கமலா எழுதிய கட்டுரை.

ஈ.அருண் நிறைய பணம் வைத்திருந்தான்.

உ.அகிலா கல்லூரியில் படித்து வந்தாள்.

5.பத்தியில் உள்ள எச்சச் சொற்களையும் முற்றுச் சொற்களையும் வகைப்படுத்தி எழுதுக.

பத்தி கொடுக்கப்படவில்லை.

தமிழ்த்துகள்

Blog Archive