புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
பத்தாம் வகுப்பு
தமிழ்
செயல்பாடு 4
விடைக்குறிப்பு
பழமொழிக்கான பொருள் எழுதுக.
ஊருடன் ஒத்து வாழ்.
ஊர் மக்களுடன் இணங்கி வாழ்தல் வேண்டும்.
தான் சார்ந்திருக்கும் சமுதாயத்தின் வழக்கங்களோடு ஒன்றி வாழ்தல்.
2.பழமொழியைப் பயன்படுத்திச் சொற்றொடர் அமைக்க.
அ.பதறாத காரியம் சிதறாது.
பதறாத காரியம் சிதறாது என்பதை அறிந்த செல்வன் தனக்கு விபத்து நேர்ந்த போதிலும் பதற்றமில்லாமல் மருத்துவ முதலுதவிக்கு அழைத்தான்.
ஆ.ஒரு கை தட்டினால் ஓசை வராது.
ஒரு கை தட்டினால் ஓசை வராது என்பது போல கையூட்டைத் தடுக்க தனியாகப் போராடினால் வெற்றி கிடைக்காது.
3.பழமொழியை நிறைவு செய்க.
அ.இளமையில் கல்வி சிலையில் எழுத்து
ஆ.சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்.
இ.கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.
4.மரபுத்தொடர்களுக்கான பொருளை எழுதுக.
அ.எட்டாக்கனி - அரிதான செயல்
ஆ.உடும்புப்பிடி - மாறாப்பற்று
இ.கிணற்றுத்தவளை - உலகு அறிவு இன்மை
5.மரபுத்தொடர்களைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக.
அ.ஆகாயத்தாமரை
நம் ஊருக்கு ஆற்றுத் தண்ணீரை வரவழைப்பேன் என்று தலைவர் பேசுவது ஆகாயத்தாமரை மலர்வது போன்றது.
ஆ.முதலைக்கண்ணீர்
தொழிலில் எனக்கு ஏற்பட்ட இழப்பைக் கண்டு என் எதிரி முதலைக் கண்ணீர் வடித்தவாறு எனக்கு ஆறுதல் கூறினான்.
6.மரபுப்பிழைகளை நீக்கி எழுதுக.
அ.வீட்டின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்.
வீட்டின் அருகே புதிதாகக் கூரை வேய்ந்தனர்.
ஆ.கயல் பானை செய்யக் கற்றுக் கொண்டாள்.
கயல் பானை வனையக் கற்றுக் கொண்டாள்.
7.செய்யுள் தொடர்கள் உணர்த்தும் பொருளை எழுதுக.
அ.உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உணவைக் கொடுத்தோரே உயிர் வாழச் செய்தோர்.
ஆ.உண்பது நாழி உடுப்பவை இரண்டே
உண்பது நாழியளவே, உடுப்பது மேலாடை, அரையாடை என இரண்டே ஆகும்.
இ.யாதும் ஊரே யாவரும் கேளிர்
இவ்வுலக மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் உறவினரே.