பத்தாம் வகுப்பு
தமிழ்
செயல்பாடு 6
விடைக்குறிப்பு
நீங்கள் நாள்தோறும் வகுப்பறையில் மிகுதியாகப் பயன்படுத்தும் சொற்களைப் பட்டியலிட்டு அவற்றில் இடம்பெற்றுள்ள பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை அறிந்து எழுதுக
சொற்பட்டியல்
வகுப்பு
புத்தகம்
பிளாக் போர்டு
பேனா
பென்சில்
நோட்டு
பிளாக்போர்டு - கரும்பலகை
பேனா - தூவல்
பென்சில் - கரிக்கோல்
நோட்டு - ஏடு
உரையாடலை நிறைவு செய்க. அவற்றுள் இடம்பெறும் பிறமொழிச் சொற்களைத் தமிழாக்கம் செய்க.
அருண்
வணக்கம் நண்பா
நளன்
வணக்கம் நண்பா, நாம் பார்த்து நீண்ட நாள்கள் ஆகிவிட்டது.
அருண்
ஆமாம், பத்து ஆண்டுகள் ஆச்சு இல்லையா?
நளன்
ஆமாம் நான் இப்போது பன்னாட்டு நிறுவனமொன்றில் செயல் திட்ட மேலாளராக இருக்கிறேன். நீ ?
அருண்
நான் திருவள்ளுவர் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறேன்.
நளன்
அந்தக் கல்லூரியில் தான் என் தம்பி முதலாம் ஆண்டு படிக்கிறான்.
அருண்
அப்படியா மிக்க மகிழ்ச்சி, நான் வருகிறேன்
நளன்
மீண்டும் சந்திப்போம்.