கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, June 28, 2022

6ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயல் 1 பருவம் 1 கனவு பலித்தது 6th model notes of lesson tamil kanavu palithathu term 1 unit 1

 ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

வகுப்பு – 6

பாடம் – தமிழ்

பருவம் 1

இயல் 1

தலைப்பு – கனவு பலித்தது

1.கற்றல் விளைவு

          தன்னம்பிக்கையுடன் தனக்கான இலக்குகளை உருவாக்கும் திறன் பெறுதல்.

2.உணர்தல்

          தமிழில் இயல், இசை, நாடகம் மட்டுமல்ல அறிவியலும் உண்டு. அறிவியல் செய்திகளை நம் முன்னோர்கள், இலக்கியங்கள் வாயிலாக உணர்தல்.

3.முன்னறிவு

          கடிதம் குறித்து மாணவர்களைக் கூறச் செய்தல்.

          மாணவர்கள் அறிந்த அறிவியல் செய்திகளை எழுதச் செய்தல்.

4.விதைநெல்

          தமிழ் வழியில் கற்று அறிவியல் அறிஞர் – தமிழில் பயின்ற அறிவியல் அறிஞர்கள் – தமிழ் இலக்கியங்களில் அறிவியல் செய்திகள் – இவை உள்ளடங்கிய கடிதக் கருத்துகள்.

5.விதைத்தல்

          ஐம்பூதங்கள், ஆறறிவு குறித்து தொல்காப்பியர் கூறுபவை – ஔவையார் பாடலின் கருத்து – பதிற்றுப்பத்து, நற்றிணையில் உள்ள மருத்துவச் செய்திகள் – கலீலியோவின் கருத்து கபிலரின் திருவள்ளுவமாலை - இவற்றை மாணவர்களுக்கு விளக்குதல்.

          தமிழின் பெருமைகளையும் தமிழரின் அறிவியல் அறிவையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.

6.கருத்துப்புனைவு


















7.கருத்துத்தூவானம்

          தன்னம்பிக்கை தரும் செய்திகளையும் கதைகளையும் மாணவர்களுக்குக் கூறுதல்.

          உங்களின் எதிர்காலக் கனவையும் அதற்கான காரணத்தையும் கூறுக என மாணவர்களிடம் கேட்டல்.

8.விளைச்சல்

          கனவு பலித்தது என்ற தலைப்பு இக்கதைக்கு எவ்வாறு பொருந்துகிறது என்பதனை விளக்குக.

          இன்சுவையின் எண்ணம் நிறைவேறக் காரணங்களாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?

9.சங்கிலிப்பிணைப்பு

          மாணவர்களின் எதிர்காலக் கனவு குறித்து ஒரு கடிதம் எழுதி வரச் செய்தல்.

          தமிழில் பயின்ற சாதனையாளர்கள் குறித்த தகவல்களைத் தொகுத்தல்.


7ஆம் வகுப்பு தமிழ் இயல் 1 பருவம் 1 மாதிரி பாடக்குறிப்பு சொலவடைகள் 7th model notes of lesson tamil solavadaigal term 1 unit 1

 ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

வகுப்பு – 7

பாடம் – தமிழ்

பருவம் 1

இயல் 1

தலைப்பு – சொலவடைகள்

1.கற்றல் விளைவு

          சொலவடைகளில் பொதிந்துள்ள சமூக உண்மைகளைக் கண்டறியும் திறன் பெறுதல்.

2.உணர்தல்

பேச்சுமொழியின் அழகியலையும் பண்பாட்டுக் கூறுகளையும் கொண்டிருக்கும் பொருட்செறிவுமிக்கச் சொலவடைகளை உணர்தல்.

3.முன்னறிவு

          அறிந்த சொலவடைகளை மாணவர்களைக் கூறச் செய்தல்.

பொம்மலாட்டம் குறித்து மாணவர்களைக் கூறச் செய்தல்.

4.விதைநெல்

          சொலவடைகளைக் கொண்ட பொம்மலாட்ட வடிவிலான ஆளுக்கு ஒரு வேலை என்ற கதைப்பகுதி.

5.விதைத்தல்

          பள்ளி செல்ல மறுத்த பையன் விளையாட வர்றியா? என எறும்பு, தேனீ, மாடு, ஆமை, முயல், குட்டிச்சுவரு என அனைவரிடமும் வினவி அனைவரும் தங்களுக்கு வேலை இருப்பதாகக் கூற குட்டிச்சுவரு இடிஞ்சு விழ பூச்சி, எறும்பு, வண்டு கடிக்க மீண்டும் பள்ளி செல்கிறேன் எனக் கூறிய பையனின் கதையை மாணவர்களுக்கு விளக்குதல்.

          அணை உடைஞ்சு போன வெள்ளம் அழுதாலும் வராது, வெளச்சலுக்கும் வெள்ளாட்டுக்கும் சென்மப்பகை, எறும்பு ஊரக் கல்லும் தேயும், உழைக்கிற மாடுதான் ஊருக்குள்ள விலை போகும், அடைமழை விட்டாலும் செடிமழை விடாது, நினைச்சதாம் கழுதை எடுத்ததாம் ஓட்டம், ஆயிரம் கலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும், அதிர அடிச்சா உதிர விளையும், அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே சொர்க்கம், அமாவாசை இருட்டில் பெருச்சாளிக்குப் போன இடமெல்லாம் வழிதான் போன்ற சொலவடைகளை மாணவர்கள் மனதில் விதைத்தல்.

6.கருத்துப்புனைவு

















7.கருத்துத்தூவானம்

          நாம் பயன்படுத்தும் சொலவடைகளை எழுதச் செய்தல்.

          சொலவடைகளுடன் கூடிய பொம்மலாட்டக் கதையைக் கூறி, வாசித்துப் பழகுதல்.

8.விளைச்சல்

          பொம்மலாட்டக் காட்சிகளைச் சிறுகதையாக எழுதுக.

          சொலவடைகள் தோன்ற என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்?

9.சங்கிலிப்பிணைப்பு

          பொம்மலாட்டக் கதைகளைக் கேட்டல்.

          உங்கள் பகுதியில் வழங்கி வரும் சொலவடைகளைத் தொகுத்தல்.

          உனக்குப் பிடித்த சொலவடையைத் தொடரில் அமைத்து எழுதுக.


8ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு சொற்பூங்கா 8th model notes of lesson tamil tamil sor poonka unit 1

 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

வகுப்பு – 8

பாடம் – தமிழ்

இயல் 1

தலைப்பு – சொற்பூங்கா

1.கற்றல் விளைவு

          ஓரெழுத்து ஒரு மொழியை அடிப்படையாகக் கொண்டு சொல்லாட்சித் திறனை வளர்க்கும் திறன் பெறுதல்.

2.உணர்தல்

          தமிழிலுள்ள ஓரெழுத்து ஒரு மொழிகள் பற்றியும் அவற்றிலிருந்து தோன்றி வளரும் புதிய சொற்கள் பற்றியும் உணர்தல்.

3.முன்னறிவு

          ஓரெழுத்து ஒரு மொழி குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச் செய்தல்.

          குறில் நெடில் எழுத்துகளை மாணவர்கள் கூறச் செய்தல்.

4.விதைநெல்

          செந்தமிழ் அந்தணர் இரா.இளங்குமரனார் எழுதிய தமிழின் தனிப்பெருஞ் சிறப்புகள் என்னும் நூலிலிருந்து தொகுக்கப்பட்ட செய்திகள்.

5.விதைத்தல்

          தேய்மானம் – உயிரோட்டத்தமிழ் – சொல் – நெல் – தொல்காப்பியர் – நெட்டெழுத்து ஏழு – நன்னூலார் – 42 – யா, மா, ஈ – ஏ, ஏவலன், ஏகலை – எய்ப்பன்றி – எயினர் – எயினியர் ஆகியவை குறித்து மாணவர்களுக்கு விளக்குதல்.

          மொழிப்பற்றை மீட்டெடுத்தல் குறித்தும், மொழிப்பற்றை வளர்ப்பது குறித்தும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.

6.கருத்துப்புனைவு


7.கருத்துத்தூவானம்

          ஓரெழுத்து ஒரு மொழிகளையும் அவற்றின் பொருளையும் எழுதிவரச் செய்தல்.

          இளங்குமரனார் குறித்த செய்திகளை அறிந்து வரல்.

8.விளைச்சல்

          தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிகளின் பெருக்கம் குறித்து இளங்குமரனார் கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.

          தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு நாம் செய்ய வேண்டிய பணி என்ன?

9.சங்கிலிப்பிணைப்பு

          ஓரெழுத்து ஒரு மொழிகள் இடம்பெறும் தொடர்கள் எழுதுதல்.

          மா என்ற ஓரெழுத்து ஒரு மொழியின்

 பொருள்களைத் தொகுத்தல்.


ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 1 இயல் 1 கனவு பலித்தது மனவரைபடம் 6th tamil mindmap term 1 unit 1 tamil kanavu palithathu

 


ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 1 இயல் 1 சொலவடைகள் மனவரைபடம் 7th tamil mindmap term 1 unit 1 solavadaikal

 


எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 1 சொற்பூங்கா மனவரைபடம் 8th tamil mindmap unit 1 sorpoonka

 


எட்டாம் வகுப்பு தமிழ் பலவுள் தெரிக வினாடி வினா இயல் 1 TAMIL 8TH ONE WORD CHOOSE UNIT 1 QUIZ & ANSWER

ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 1 இயல் 1 தமிழ் எழுத்துகளின் வகை தொகை மனவரைபடம் 6th tamil mindmap term 1 unit 1 tamil eluthukalin vakai thokai


 

ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 1 இயல் 1 குற்றியலுகரம், குற்றியலிகரம் மனவரைபடம் 7th tamil mindmap term 1 unit 1 kutriyalukaram, kutriyalikaram


 

எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 1 எழுத்துகளின பிறப்பு மனவரைபடம் 8th tamil mindmap unit 1 eluthukalin pirappu



 

Tuesday, June 21, 2022

ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 1 இயல் 1 வளர் தமிழ் மனவரைபடம் 6th tamil mindmap term 1 unit 1 valar tamil

 


ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 1 இயல் 1 பேச்சுமொழியும் எழுத்துமொழியும் மனவரைபடம் 7th tamil mindmap term 1 unit 1 pechumoliyum eluthumoliyum

 


எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 1 தமிழ் வரிவடிவ வளர்ச்சி மனவரைபடம் 8th tamil mindmap unit 1 tamil varivadiva valarchi

 


6ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயல் 1 பருவம் 1 வளர் தமிழ் 6th model notes of lesson tamil valar tamil term 1 unit 1

 ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

வகுப்பு – 6

பாடம் – தமிழ்

பருவம் 1

இயல் 1

தலைப்பு – வளர்தமிழ்

1.கற்றல் விளைவு

          தமிழ்மொழியின் தனிச்சிறப்புகளைப் பட்டியலிடும் திறன் பெறுதல்.

2.உணர்தல்

          உலகச் செம்மொழிகளுள் ஒன்றாக விளங்கும் தமிழ் மொழியின் சிறப்புகளை உணர்தல்.

3.முன்னறிவு

          பூவின் பருவ நிலைகள் குறித்து மாணவர்களைக் கூறச் செய்தல்.

          மாணவர்கள் அறிந்த தமிழ் எண்களை எழுதச் செய்தல்.

4.விதைநெல்

          மூத்தமொழி – எளியமொழி – சீர்மை மொழி – வளமை மொழி – வளர்மொழி – புதுமை மொழி – அறிவியல் தொழில்நுட்ப மொழி – தமிழ் எண்கள்.

5.விதைத்தல்

          மொழிகள், செம்மொழிகள், பாரதியார் பாடல்வரி, தொல்காப்பியம், வலஞ்சுழி எழுத்துகள், அல்திணை, பாகுஅல்காய், இலக்கிய, இலக்கண வளம், ஒரு சொல் பல பொருள், முத்தமிழ், கணினித் தமிழ் புதிய கலைச்சொற்கள்- இவற்றை மாணவர்களுக்கு விளக்குதல்.

          தமிழின் பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.

6.கருத்துப்புனைவு



7.கருத்துத்தூவானம்

          இணையத் தமிழ் குறித்த செய்திகளை

 எழுதி வரச் செய்தல்.

          கவிஞர் அறிவுமதி அவர்கள் எழுதிய

 பிறந்தநாள் வாழ்த்துப் பாடலைக் கொண்டு

 பிறந்தநாள் வாழ்த்து கூறும் பழக்கத்தை

 ஏற்படுத்துதல்.

8.விளைச்சல்

          தமிழ் மூத்தமொழி எனப்படுவது எதனால்?

          தமிழ்மொழியின் சிறப்பு குறித்து ஐந்து

 வரிகளில் எழுதுக.

          தமிழ் இனிய மொழி என்பதற்கான

 காரணம் தருக.

          மா என்னும் சொல்லின் பொருள் ......................

          தமிழ்மொழி வளர்மொழி என்பதை

 உணர்கிறீர்களா? காரணம் தருக.

9.சங்கிலிப்பிணைப்பு

          மாணவர்களின் வயதைத் தமிழ் எண்களில்

 எழுதி வரச் செய்தல்.

          திறன்பேசியில் உள்ள செயலிகளுக்குத்

 தமிழ்ச்சொல் அறிந்து வரல்.

7ஆம் வகுப்பு தமிழ் இயல் 1 பருவம் 1 மாதிரி பாடக்குறிப்பு பேச்சுமொழியும் எழுத்துமொழியும் 7th model notes of lesson tamil Pechumoliyum Eluthumoliyum term 1 unit 1

 ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

வகுப்பு – 7

பாடம் – தமிழ்

பருவம் 1

இயல் 1

தலைப்பு – பேச்சுமொழியும் எழுத்துமொழியும்

1.கற்றல் விளைவு

          பேச்சு மொழி, எழுத்து மொழியின் நுட்பங்களை அறியும் திறன் பெறுதல்.

2.உணர்தல்

          தமிழ்மொழியின் பேச்சுமொழி, எழுத்துமொழி என இரண்டு கூறுகளையும் அவற்றிற்கு இடையே  உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை உணர்தல்.

3.முன்னறிவு

          எழுத்துமொழியின் பேச்சு வடிவங்களை மாணவர்களைக் கூறச் செய்தல்.

பேச்சுமொழியின் எழுத்து வடிவங்களை மாணவர்களைக் கூறச் செய்தல்.

4.விதைநெல்

          மொழியின் வடிவங்கள் – பேச்சுமொழி – பேச்சுமொழியில் பொருள் வேறுபாடு – வட்டாரமொழி – கிளை மொழி – எழுத்துமொழி – பேச்சுமொழியும் எழுத்துமொழியும்.

5.விதைத்தல்

          மொழியின் முதல்நிலை, இரண்டாம் நிலை, பேச்சுமொழியில் உள்ள பொருள் வேறுபாடு, அழுத்தம் கொடுத்தல், வட்டார வழக்குச் சொற்கள், கிளை மொழிகள், உலக வழக்கு, இலக்கிய வழக்கு, இரட்டை வழக்கு மொழி என்பதை மாணவர்களுக்கு விளக்குதல்.

          தமிழ் இரட்டை வழக்கு மொழி என்பதை மாணவர்கள் மனதில் விதைத்தல்.

6.கருத்துப்புனைவு




7.கருத்துத்தூவானம்

          நாம் பயன்படுத்தும் பேச்சு வழக்குச்

 சொற்களை எழுத்து வழக்கில் எழுதச் செய்தல்.

          குரல் ஏற்றத்தாழ்வுடன் பேசிப் பழகுதல்.

8.விளைச்சல்

          பேச்சு மொழி என்றால் என்ன?

          கிளை மொழிகள் எவ்வாறு உருவாகின்றன?

          பேச்சுமொழி, எழுத்துமொழி -

 வேறுபாடுகளை எழுதுக.

          ஒலியின் வரிவடிவம் ............... ஆகும்.

          இலக்கியங்கள் இன்னும் அழியாமல் வாழ

 என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்?

9.சங்கிலிப்பிணைப்பு

          சிறந்த பேச்சாளர்களின் மேடைப்

 பேச்சுகளைக் கேட்டல்.

          வட்டார வழக்குச் சொற்களைத் தொகுத்தல்.


8ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு தமிழ் வரிவடிவ வளர்ச்சி 8th model notes of lesson tamil tamil vari vadiva valarchi unit 1

 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

வகுப்பு – 8

பாடம் – தமிழ்

இயல் 1

தலைப்பு – தமிழ் வரிவடிவ வளர்ச்சி

1.கற்றல் விளைவு

          தமிழ் எழுத்துகளின் வளர்ச்சி நிலைகளை அறியும் திறன் பெறுதல்.

2.உணர்தல்

          தமிழ் எழுத்துகளின் வரிவடிவங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உணர்தல்.

3.முன்னறிவு

          எழுத்துகளின் தோற்றம் குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச் செய்தல்.

          பெரியாரைப் பற்றி மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச் செய்தல்.

4.விதைநெல்

          எழுத்துகளின் தோற்றம் – தமிழ் எழுத்துகள் – வரிவடிவ வளர்ச்சி – புள்ளிகளும் எழுத்துகளும் – உருவ மாற்றம் – எழுத்துச் சீர்திருத்தத்தின் தேவை – எழுத்துச் சீர்திருத்தம் – வீரமாமுனிவரின் எழுத்துச் சீர்திருத்தம் – பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம்.

5.விதைத்தல்

          ஓவிய எழுத்து, ஒலி எழுத்து நிலை, அச்சுக்கலை, வட்டெழுத்து, தமிழெழுத்து, கண்ணெழுத்து, துணைக்கால், இணைக்கொம்பு, புதிய வரிவடிவம் ஆகியவை குறித்து மாணவர்களுக்கு விளக்குதல்.

          தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் குறித்தும், கணினிப் பயன்பாட்டிற்கு ஏற்ற மொழி தமிழ் என்பது குறித்தும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.

6.கருத்துப்புனைவு


7.கருத்துத்தூவானம்

          தமிழ்மொழியின் பழைய வரிவடிவச்

 சொற்களை எழுதிவரச் செய்தல்.

          கல்வெட்டுச் செய்திகளை அறிந்து வரல்.

8.விளைச்சல்

          ஓவிய எழுத்து என்றால் என்ன?

          எழுத்துச் சீர்திருத்தத்தின் தேவை குறித்து

 எழுதுக.

          எழுத்துகளின் தோற்றம் குறித்து எழுதுக.

          தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில்

 ஈடுபட்டவர் .........................

          தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு நாம் செய்ய

 வேண்டிய பணி என்ன?

9.சங்கிலிப்பிணைப்பு

          பெரியார் பற்றிய குறிப்புகளை அறிதல்.

          தமிழின் கல்வெட்டு எழுத்துகளைத்

 தொகுத்தல்.


தமிழ்த்துகள்

Blog Archive