திருமகள் அருளொளி
திக்கெல்லாம் பரவட்டும் ...
தீபாவளி இனி அதற்கு
தீப்பந்தம் கொழுத்தட்டும்
தீராவலியெல்லாம் விசையற்று மாயட்டும் ...
தீங்கனியின் சுவை போல வரும்
தீபாவளி மலரட்டும் ...
இருள் என்ற ஒன்றினி
இடமின்றிப் போகட்டும்...
இதயங்கள் எல்லாம் இனி
ஒளியால் நனையட்டும்....
விடியாத பொழுதெல்லாம்
காலைப் பனியாக மறையட்டும்.... வெளிச்ச வெள்ளம் தமிழனுக்கு
விலாசமாய் மாறட்டும் ....
சாதி, மதப் புரட்டெல்லாம்
சடுதியில் ஒழிந்திட
சமத்துவ மின்னல் பூத்து
சன்மார்க்கம் நிலைத்திட
சந்தனத் தமிழால்
தமிழ்ச் சொந்தங்களுக்குத்
தீபாவளி நல் வாழ்த்துகள்💐💐
சுரேஷ் இராமலிங்கம்
காரியாபட்டி