கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, October 02, 2023

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஏர் புதிதா, மெய்க்கீர்த்தி, சிலப்பதிகாரம்

10th Tamil model notes of lesson

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

14-10-2024 முதல் 18-10-2024

2.பாடம்

தமிழ்

3.அலகு

7

4.பாடத்தலைப்பு

விதைநெல் – கவிதைப்பேழை.

5.உட்பாடத்தலைப்பு

ஏர் புதிதா, மெய்க்கீர்த்தி, சிலப்பதிகாரம்

6.பக்கஎண்

165 - 170

7.கற்றல் விளைவுகள்

T-1034 கவிதையின் மையக் கருத்தறிதல், கவிதையில் சொற்களும் தொடர்களும் பயன்படுத்தப்படுள்ள முறையறிந்து புதுக்கவிதை படித்தல், படைத்தல்.

T-1035 வேந்தர்களின் சிறப்புணர்த்தும் கல்வெட்டு இலக்கியமான மெய்க்கீர்த்தியின் தனித்தன்மை உணர்ந்து படித்தல்.

T-1036 முதல் காப்பியத்தின் மொழிநடை அறிதல், காப்பியம் வழி அக்காலச் சமூக வாழ்வையும் பயன்பாட்டு மொழியையும் படித்துச் சுவைத்தல்.

8.கற்றல் நோக்கங்கள்

காப்பியம், மெய்க்கீர்த்தி ஆகிய இலக்கியங்களை அவற்றின் தனித்தன்மைகளுடன் படித்துச் சுவைத்தல்.

9.நுண்திறன்கள்

வேளாண்மையின் சிறப்பு பற்றி வகுப்பறையில் பேசுதல்.

இரண்டாம் இராசராசனின் கல்வெட்டு செய்திகள் மூலம் நாட்டுவளம், ஆட்சிமுறையை அறிதல்.

மருவூர்பாக்கத்தில் தொழில் செய்வோர் குறித்துக்  கூறப்பட்ட செய்திகளைத் தொகுத்தல்

10.கற்பித்தல் துணைக்கருவிகள்



இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2021/07/7-10th-tamil-online-test-aer-puthitha.html

https://tamilthugal.blogspot.com/2021/07/7-10th-tamil-online-test-meykeerthi-one.html

https://tamilthugal.blogspot.com/2022/10/powerpoint-pdf-10th-tamil-meykeerthi.html

https://tamilthugal.blogspot.com/2020/06/silappathikaram.html

https://tamilthugal.blogspot.com/2019/05/silappathikaram.html

https://tamilthugal.blogspot.com/2019/07/blog-post_94.html

https://tamilthugal.blogspot.com/2021/07/7-10th-tamil-online-test-silapathikaram.html

https://tamilthugal.blogspot.com/2020/06/tamil-online-quiz-silappathikaaram-with.html

https://tamilthugal.blogspot.com/2020/05/blog-post_97.html

11.ஆயத்தப்படுத்துதல்

          வேளாண்மை பற்றிக் கூறச் செய்தல்.

          சோழர்கள் குறித்துக் கேட்டல்.

          ஐம்பெருங்காப்பியங்களைக் கேட்டல்.

12.அறிமுகம்

புதுக்கவிதை பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

கல்வெட்டு இலக்கியத்தை அறிமுகப்படுத்துதல்.

அக்கால வணிகத்தை அறிமுகம் செய்தல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

பொன்ஏர் பூட்டுதல் குறித்து அறியச் செய்தல்.

          கல் இலக்கியம், இராசராசன் காக்கும் திருநாட்டின் இயல்புகள் குறித்து அறிதல். மெய்க்கீர்த்திகள் குறித்து விளக்குதல்.

          சிலப்பதிகாரம், மருவூர்ப்பாக்கம் வணிகம் குறித்து மாணவர்களுக்கு விளக்குதல். இக்கால வணிகத்தை ஒப்பிடுதல். உரைப்பாட்டுமடை சிலப்பதிகாரக் குறிப்பைக் கூறல்.

மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். தலைவர்களின் பெருமையை அறிதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

வேளாண்மை குறித்து இணையம், ஊடகங்கள் வழியாக அறிந்து வகுப்பறையில் கூறச் செய்தல். உழவின் இன்றியமையாமையை உணர்தல்.

15.மதிப்பீடு

எ.சி.வி.  சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் ..............

          மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?

ந.சி.வி – முதல் மழை விழுந்த நிகழ்வை விளக்குக.

சிலப்பதிகாரம் காட்டும் வணிகர்களைப் பற்றிக் கூறு.

உ.சி.வி – சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை  எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

சிலப்பதிகாரம் குறித்த தகவல்களைத் திரட்டுதல்.

இரண்டாம் இராசராச சோழன் பற்றி மேலும் சில தகவல்களை அறிதல்.

தமிழ்த்துகள்

Blog Archive