8th Tamil Model Notes Of Lesson
எட்டாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
12-08-2024 முதல் 16-08-2024
2.பாடம்
தமிழ்
3.அலகு
3
4.பாடத்தலைப்பு
உடலை ஓம்புமின் –
உரைநடை உலகம், விரிவானம்
5.உட்பாடத்தலைப்பு
தமிழர்
மருத்துவம், தலைக்குள் ஓர் உலகம்.
6.பக்கஎண்
53-62
7.கற்றல் விளைவுகள்
T-819 அன்றாட வாழ்வில் நிகழும் குறிப்பிடத்தக்க அனுபவங்களை
(நிகழ்வுகள், சூழல்கள்) புத்தாக்க முறையில் வெவ்வேறு
வழிகளில் (சமூக ஊடகங்கள், நோட்டு, புத்தகம்,
பதிப்பாளருக்குக் கடிதம் எழுதுதல்) எழுதுதல்.
T-807 கதைகள்,
பாடல்கள், கட்டுரைகள், அறிக்கைகள்,
நினைவுகள், நகைச்சுவை போன்ற பல்வேறு
வகைப்பட்டவற்றைப் படிக்கும்போது அவற்றை நுட்பமாக ஆய்வு செய்து சில குறிப்பிட்ட
செய்திகளைக் கண்டறிதலும் ஊகித்தறிதலும்.
8.கற்றல் நோக்கங்கள்
தமிழர் மருத்துவ
முறைகளை அறிந்து பயன்படுத்தும் திறன்
மூளையின்
செயல்பாடுகளை அறியும் திறன்
9.நுண்திறன்கள்
தமிழர்
மருத்துவத்தின் தொன்மை, சிறப்பை அறிந்து பெருமிதம் கொள்ளும் திறன்.
மூளையின்
செயல்பாடுகள் பற்றிய புதுமையான செய்திகளை அறிந்து மகிழும் திறன்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2023/08/blog-post_77.html
https://tamilthugal.blogspot.com/2023/08/blog-post_25.html
https://tamilthugal.blogspot.com/2022/08/3-8th-tamil-mindmap-unit-3_16.html
https://tamilthugal.blogspot.com/2021/05/8th-tamil-urainadai-ulagam-tamilar.html
https://tamilthugal.blogspot.com/2021/02/thuritha-unavum-arokiya-seerkedum-tamil.html
https://tamilthugal.blogspot.com/2021/08/3-thalaikul-or-ulagam-8th-q.html
https://tamilthugal.blogspot.com/2022/08/8th-tamil-thalaikul-or-ulagam.html
https://tamilthugal.blogspot.com/2021/08/3-thalaikul-or-ulakam-8th-virivanam.html
https://tamilthugal.blogspot.com/2022/08/3-8th-tamil-mindmap-unit-3_23.html
11.ஆயத்தப்படுத்துதல்
மருத்துவத்தின்
வகைகளைக் கூறச்செய்தல்.
நோய்கள் அதிகரிக்க
என்ன காரணம் எனக் கேட்டல்.
உடல்
உள்ளுறுப்புகளைக் கூறச்செய்தல்.
மூளையின்
செயல்களைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
தமிழர்
மருத்துவத்தை அறிமுகப்படுத்துதல்.
நல்ல உணவுமுறை
குறித்து விளக்கி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
மனித மூளையின்
செயல்பாடுகளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
பழந்தமிழர்கள்
அறிந்த மருத்துவமுறைகளை மாணவர்களுக்குக் கூறி மாணவர்கள் அறிந்த தற்கால
மருத்துவமுறைகளைக் கூறச் செய்தல். சித்தர்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்குதல்.
மருத்துவத்தில் பக்க விளைவுகள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.
நோய்கள் குறித்தும் இன்றைய
மருத்துவம் குறித்தும் மாணவர்களுடன் உரையாடுதல். உடல்நலம் காக்க நாம் செய்ய
வேண்டியவை குறித்து மாணவர்களிடம் வினவல். நோய் வராமல் தடுக்க என்னென்ன செய்யலாம்
என்பது குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச்செய்தல்.
மூளையின் அமைப்பு,
உணவு, உடல் இயக்கம், வலதும் இடதும், உணர்வுகளும், நினைவாற்றலும், தன்னுணர்வும்,
அன்றாட நிகழ்வுகளும், கற்றலும் குறித்த விரிவான தகவல்களை மாணவர்களுக்குப் புரிய
வைத்தல்.
மூளையின் முக்கியத்துவம்
குறித்த தகவல்களைக் கூறுதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
சுத்தம், சுகாதாரம், தமிழர் மருத்துவம் குறித்துக் கூறுதல். நல்ல உணவுப் பழக்கத்தின் அவசியத்தை விளக்குதல். மூளை
குறித்த கூடுதல் தகவல்களை மாணவர்களுக்குக் கூறுதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – உடல் எடை அதிகரிப்பதால்
ஏற்படும் நோய்களுள் ஒன்று ..............................
சுஜாதாவின் இயற்பெயர்
..............................
ந.சி.வி – மருத்துவம் எப்போது தொடங்கியது?
மூளையின் செயல்பாடுகள் குறித்து எழுதுக.
உ.சி.வி – நோயின்றி
வாழ நீ மேற்கொள்ளும் செயல்களைப் பட்டியலிடுக.
மருத்துவரிடம் நீ கேட்க
விரும்பும் 5 வினாக்களை எழுது.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை
விளக்குதல்.
17.தொடர்பணி
மூலிகைகளின் மருத்துவ குணங்களைப் பட்டியலிடுக.
தமிழர் மருத்துவத்தின் பெருமைகளை, மூளை குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.