6th Tamil Model Notes Of Lesson
ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
12-08-2024 முதல் 16-08-2024
2.பருவம்
1
3.அலகு
3
4.பாடத்தலைப்பு
எந்திர உலகம் – உரைநடை உலகம்
5.உட்பாடத்தலைப்பு
கணியனின் நண்பன்
6.பக்கஎண்
58-63
7.கற்றல் விளைவுகள்
T-614 – புதிய சொற்களைத் தெரிந்துகொள்வதில்
பேரார்வத்தை வெளிப்படுத்தல், அகராதிகளைப் பார்த்து அவற்றின் பொருளைப்
புரிந்துகொள்ள முயலுதல்.
8.கற்றல் நோக்கங்கள்
நவீன அறிவியல் அறியும் திறன்
எந்திர மனிதன் குறித்து அறியும் திறன்
9.நுண்திறன்கள்
நம்நாட்டின் எதிர்கால முன்னேற்றத்துக்கு எவையெல்லாம்
தேவை என அறியும் திறன்.
அறிவியல் கண்டுபிடிப்புகளினால் ஏற்படும்
விளைவுகள் பற்றி விவாதிக்கும் திறன்.
10.கற்பித்தல் உபகரணங்கள்
இணைய
வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2023/08/blog-post_52.html
https://tamilthugal.blogspot.com/2021/06/3-1-6th-tamil-kaniyanin-nanban-vina.html
https://tamilthugal.blogspot.com/2022/08/blog-post_44.html
11.ஆயத்தப்படுத்துதல்
நமக்கு உதவும் எந்திரங்கள் குறித்துக்
கூறச்செய்தல்.
மாணவர்கள் அறிந்த நவீன தகவல்
தொழில்நுட்பங்களைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
நவீன அறிவியலின் வளர்ச்சியைக் கூறி
பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
அறிவியலின் நவீன கண்டுபிடிப்புகளைக் கேட்டு,
பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
எந்திர மனிதனை மாணவர்களுக்கு அறிமுகம் செய்து மாணவர்கள் அறிந்த எந்திர மனிதன்
குறித்த தகவல்களைக் கேட்டல். ரோபோ என்பதற்கு அடிமை என்ற பொருளைக்கூறி
பெயர்க்காரணத்தை விளக்குதல்.
டீப்
புளூ, சோபியா குறித்துக் கூறி மாணவர்கள் கருத்தைக் கேட்டல். புதிய சொற்களுக்கான
பொருளை அகராதி மூலம் அறியச் செய்தல். சதுரங்கம் குறித்துக்கூறி ஒலிம்பியாட் பற்றி
மாணவர்களைக் கூறச் செய்தல்.
மனவரைபடம்
மூலம் பாடப்பொருளை விளக்குதல்.
மாணவர்கள்
ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், அறிவியல் கருத்துகளை உள்வாங்குதல்,
வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல் செயல்பாடுகள்
அறிவியல் சிந்தனையை மாணவர்களிடம் உருவாக்குதல். புதிய கண்டுபிடிப்புகளின்
தேவையையும் பழைமையின் அவசியத்தையும் அறியச் செய்தல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – நுட்பமாகச் சிந்தித்து அறிவது
..............................
எளிது
என்னும் சொல்லின் எதிர்ச்சொல் ....................................
ந.சி.வி – ரோபோ என்னும் சொல் எவ்வாறு உருவானது?
எந்திர மனிதனின் பயன்களை விளக்குக.
உ.சி.வி – நீ எந்திர மனிதனை எதற்கெல்லாம் பயன்படுத்துவாய் என எழுதுக.
எவற்றுக்குப்
புதிய கண்டுபிடிப்புகள் தேவை என்று சிந்தித்து எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை
விளக்குதல்.
17.தொடர்பணி
உனக்குப் பிடித்த அறிவியல் சாதனங்கள் 5 எழுதுக.
ரோபோ குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.