மாணவர் செயல்பாடு
அ) பின்வரும் சொற்களை வகைப்படுத்துக.
(அரசி, மாமரம், மலர்விழி, எழுதுகோல், கோவலன், கடிகாரம், மருத்துவர், சங்கு, மாணவர்,கரும்பலகை , ஆசிரியர், மேசை )
உயர்திணை
அரசி
மலர்விழி
கோவலன்
மருத்துவர்
மாணவர்
ஆசிரியர்
அஃறிணை
மாமரம்
எழுதுகோல்
கடிகாரம்
சங்கு
கரும்பலகை
மேசை
ஆ) பின்வரும் சொற்பட்டியலில் உள்ள சொற்களை வகைப்படுத்தி அட்டவணையில் நிரப்புக.
மாணவி, மாணவன், ஆசிரியை , வீடுகள், முருகன், பூ, மலர்கள், எருது, விண்மீன்கள், அவர்கள், பாடகி, சிறுவர்கள், பனை மரம், வாக்காளர்கள், உழவன்.
ஆண்பால்
மாணவன்
முருகன்
உழவன்
பெண்பால்
மாணவி
ஆசிரியை
பாடகி
பலர்பால்
அவர்கள்
சிறுவர்கள்
வாக்காளர்கள்
ஒன்றன்பால்
பூ
எருது
பனைமரம்
பலவின்பால்
வீடுகள்
மலர்கள்
விண்மீன்கள்