மாணவர் செயல்பாடு
அ) கொடுக்கப்பட்டுள்ள இரட்டை ச் சொற்களில் இரட்டைக் கிளவி, அடுக்குத்தொடர் எவை எவை எனக் கண்டுபிடித்து எடுத்து எழுதுக .
இரட்டைக்கிளவி
1.கமகம
2.கடகட
3.சலசல
4.மடமட
5.குறுகுறு
6.கொழுகொழு
அடுக்குத்தொடர்
1.ஓடிஓடி
2.வந்துவந்து
3.வருகவருக
4.செல்செல்
5.துள்ளித்துள்ளி
6.குதித்துக்குதித்து
ஆ) அடைப்புக்குறிக்குள் உள்ள சொற்களில் இருந்து சரியான சொற்களைத் தேர்ந்தெடுத்து எழுதுக .
(மடமட, சடசட, எழுதஎழுத , நெடுநெடு, பளீர்பளீர், கமகம)
1. எங்கள் ஊரில் ______________ என வளர்ந்த பனை மரம் உள்ளது.
நெடுநெடு
2. பயிற்சி ஏட்டில் ____________ கையெழுத்து அழகாக மாறியது.
எழுத எழுத
3. மல்லிகை ____________என நறுமணம் பரப்பியது.
கமகம
4. மரக்கிளை ___________என முறிந்தது.
மடமட
5. மழை ____________ எனப் பெய்தது.
சடசட
6. மின்னல் ____________ என மின்னியது.
பளீர்பளீர்