கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Saturday, October 30, 2021

ஆறாம் வகுப்பு புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 3.இலக்கணக் கூறுகளைக் கண்டறிதல் sixth Tamil refresher course answer key 6th

 




மதிப்பீட்டுச் செயல்பாடு:

அ) எழுவாய், செயப்படுபொருள், பயனிலைகளை எடுத்தெழுதுக.

1. மீனாட்சி நடனம் ஆடினாள்.

2. எடிசன் மின்விளக்கினை உருவாக்கினார் .

3. வெண்டைக்காய் உடலுக்கு நல்லது.

4. நளாயினி பாடம் நடத்தினாள்.

5. நான் மருத்துவரிடம் சென்றேன் .

6. மழையினால் பூமி குளிர்ந்தது.

வ.

எண்

எழுவாய்

செயப்படுபொருள்

பயனிலை

1

மீனாட்சி

நடனம்

ஆடினாள்

2

எடிசன்

மின்விளக்கினை

உருவாக்கினார்

3

வெண்டைக்காய்

உடலுக்கு

நல்லது

4

நளாயினி

பாடம்

நடத்தினாள்

5

நான்

மருத்துவரிடம்

சென்றேன்

6

பூமி

மழையினால்

குளிர்ந்தது


ஆ) அடிக் கோடிட்ட தொடரிலுள்ள எழுவாய், செயப்படுபொருள், பயனிலைகளை எடுத்து எழுதுக.

விஜயநகரம் விழாக் கோலம் பூண்டிருந்தது. விழாவிற்கு அண்டை நாட்டு மன்னர் விஜயவர்த்தனர் வந்திருந்தார் . விழா மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது.

எழுவாய் - விஜயநகரம்

செயப்படுபொருள் - விழாக்கோலம்

பயனிலை - பூண்டிருந்தது

இ) எழுவாய், செயப்படுபொருள், பயனிலைகளைக் கொண்ட தொடர்களை உருவாக்குக.

1.மரம் பழங்களைத் தந்தது.

2.கவிதா கட்டுரை எழுதினாள்.

3.அகிலன் பந்தைப் பிடித்தான்.

தமிழ்த்துகள்

Blog Archive