கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, October 19, 2021

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 உரைநடையின் அணிநலன்கள் 1 மதிப்பெண் வினா விடைகள் 10th urainadaiyin aninalankal one word questions answers

1.       உரைநடையின் அணிநலன்கள்

2.       குறிஞ்சிமலர் நூலின் ஆசிரியர் ......................................               

    அ. கபிலர்  ஆ. பார்த்தசாரதி    இ. ராமசாமி     ஈ. ஜீவானந்தம்

3.       உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகமாகும் – என்று எழுதியவர் ................               

    அ. தொல்காப்பியர்     ஆ. அகத்தியர்   இ. பவணந்தியார்      ஈ. தண்டி

4.       முகநிலவில் வியர்வை முத்துகள் துளிர்த்தன – இதில் .................... அமைந்துள்ளது.                                           

    அ. உவமை      ஆ. உருவகம்     இ. இணைஒப்பு        ஈ. சிலேடை

5.       உவமஉருபு மறைந்து வந்தால் .......................... அணி என்று பெயர்.             அ. உவமை      ஆ. எடுத்துக்காட்டு உவமை                    

    இ. உருவக      ஈ. எடுத்துக்காட்டு உருவக

6.       மழையும் புயலும் நூலின் ஆசிரியர் ..........................               

    அ. ராமசாமி     ஆ. திரு.வி.க.    இ. ஜானகிராமன்           

    ஈ. எழில்முதல்வன்

7.       எடுத்துக்காட்டு உவமையணியை உரைநடையில் பயன்படுத்துவதே ......................................                                

    அ. எதிரிணை         ஆ. உச்சநிலை இ. இணைஒப்பு      

    ஈ. முரண்படுமெய்ம்மை

8.       உயிர் இல்லாத பொருள்களை உயிர் உள்ளன போல கற்பனை செய்வதற்கு .......................................... என்று பெயர்.                        

    அ. எதிரிணை         ஆ. உச்சநிலை   இ. இலக்கணை      

    ஈ. முரண்படுமெய்ம்மை

9.       நாட்டுப்பற்று என்ற கட்டுரைத் தொகுப்பை எழுதியவர் ................   

    அ. திரு.வி.க.     ஆ. மு.வ  இ. கவிமணி     ஈ. பாரதியார்

10.   இந்த உலகத்தில் பயம் என்ற ஒன்றிற்குத் தவிர வேறு எதற்கு நாம் பயப்பட வேண்டும் – இது ..................................................            

    அ. எதிரிணை         ஆ. உச்சநிலை இ. இணைஒப்பு      

    ஈ. முரண்படுமெய்ம்மை

11.   கலப்பில்லாத பொய் என்பது .................................                   

    அ. எதிரிணை           ஆ. சொல்முரண்      இ. இணைஒப்பு  

    ஈ. முரண்படுமெய்ம்மை

12.   திருப்பரங்குன்றத்தின் அழகைக் கூறும் நூல் எது?               

    அ குறிஞ்சித் திரட்டு ஆ குறிஞ்சிப்பாட்டு இ குறிஞ்சிமலர்         

    ஈ குறிஞ்சிப்பா

13.   தமிழ்த்தென்றல் என்று அழைக்கப்படுபவர் .........................          

    அ ம.பொ.சி      ஆ ரா.பி.சே      இ திரு.வி.க     ஈ கி.ரா

14.   என் கிழக்காலத்தின் காசி என்று பாரதி குறிப்பிடும் நாடு .............  

    அ. இந்தியா     ஆ. கிரேக்கம்    இ. ரோம்   ஈ. இலங்கை

15.   உரைநடையின் அணிநலன்கள் என்ற கட்டுரை அமைந்துள்ள நூல் ...........................................                                         

    அ. புதிய உரைநடை      ஆ. பழைய உரைநடை            

    இ. உரைநடையின் புதுமை     ஈ. உரைநடையின் பழைமை

16.   இந்தியா தான் என்னுடைய மோட்சம் என்றவர் யார் ?         

    அ பாரதிதாசன் ஆ பாரதியார் இ அண்ணாதுரை ஈ கவிமணி

17.   சொல்லின் செல்வர் என்று அழைக்கப்படுபவர் ...........................     

    அ ம.பொ.சி      ஆ திரு.வி.க     இ ரா.பி.சே    ஈ ஜெயகாந்தன்

18.   உரைநடையின் அணிநலன்கள் என்ற கட்டுரையின் ஆசிரியர்..............................                                              

    அ. இளங்குமரனார்    ஆ. திரு.வி.க.  இ. ஜானகிராமன்      

    ஈ. எழில்முதல்வன்

19.   சாகித்ய அகாதெமி விருது பெற்ற நூல் ............................           

    அ. இனிக்கும் நினைவுகள்     ஆ. யாதுமாகி நின்றாய்      

    இ. புதிய உரைநடை             ஈ. எங்கெங்கு காணினும்

20.   யாதுமாகி நின்றாய் என்ற நூலின் ஆசிரியர் .................................      

    அ சிங்காரம் ஆ கமலாலயன் இ ராமலிங்கம் ஈ பாரதியார்

21.   செய்தி 1 – எழில்முதல்வன் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணி செய்தவர்.           

    செய்தி 2 – எழில் முதல்வனின் இயற்பெயர் சுந்தரலிங்கம்.   .     

    அ. செய்தி 1 தவறு, செய்தி 2 சரி                             

    ஆ. செய்தி 1 சரி, செய்தி 2 தவறு                             

    இ. இரண்டும் சரி      ஈ. இரண்டும் தவறு

22.   பொருந்தாதது .....................................                              

    அ. இனிக்கும் நினைவுகள்     ஆ. யாதுமாகி நின்றாய்      

    இ. எண்சுவை எண்பது          ஈ. எங்கெங்கு காணினும்

23.   முதல் தமிழ்க்கணினி ............................... ஆண்டு விற்பனைக்கு வந்தது.                                                         

    அ. 1973    ஆ 1976    இ. 1983  ஈ. 1986

...................................... பெயரில் முதல் தமிழ்க்கணினி உருவானது.   

    அ. திருவள்ளுவர்      ஆ. கம்பர்       இ. பாரதியார்         ஈ. அகத்தியர்

தமிழ்த்துகள்

Blog Archive