மதிப்பீட்டுச் செயல்பாடு:
அ) எதிர்ச் சொற்களைப் பொருத்துக.
1. நன்மை X மறையும் - தீமை
2. புகழ் X இருள் - இகழ்
3. வெற்றி X தீமை - தோல்வி
4. வெளிச்ச ம் X தோல்வி - இருள்
5. தோன்றும் X இகழ் - மறையும்
ஆ) வண்ணமிட்ட சொல்லின் எதிர்ச் சொல்லைக் கொண்டு தொடரை நிறைவு செய்க.
1. இளமையில் சிறப்பாகப் பயின்றால் முதுமையில் மகிழ்ச்சி கொள்ளலாம்.
2. பறவைகள் வெளிச்சம் வந்தவுடன் இரை தேடும். இருள் சூழ்ந்தவுடன் தத்தம் கூடுகளுக்குச் செல்லும்.
இ) படங்களுக்கு ஏற்ற எதிர்ச்சொற்களை அட்டவணையிலிருந்து எடுத்தெ ழுதிப் படங்களைப் பொருத்துக.
பாடலில் உள்ள எதிர்ச்சொற்களை எடுத்து எழுதுக.
அருவி
மலையின் மேலே பிறந்து வந்தேன் !
மலையின் கீழே தவழ வந்தேன் !
மேட்டில் இருந்தே இறங்குகிறேன் !
பள்ளத்தில் வந்தே விழுகின்றேன் !
கோடையில் நானே வாடி நிற்பேன் !
குளிரில் தானே மலர்ந்து செல்வேன் !
எட்டும் மரங்களை அணைக்கின்றேன் !
எட்டாக் கனிகளைத் தருகின்றேன் !
கொட்டும் அருவியாய்க் குதிக்கின்றேன் !
குழந்தைகள் என்னிடம் வாருங்கள்!
குளித்து மகிழ்ந்து செல்லுங்கள்!
விடைகள்
1.மேலே கீழே
2.மேட்டில் பள்ளத்தில்
3.கோடையில் குளிரில்
4.எட்டும் எட்டா
5. வாருங்கள் செல்லுங்கள்