அன்னை மொழியே
1.
சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் – என்றன்
சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் – என்று பாடியவர் ...................
அ. பெருஞ்சித்திரனார் ஆ. பாரதியார் இ. பாரதிதாசன்
ஈ. சச்சிதானந்தன்
2. தமிழுக்குக் கருவூலமாய் அமைந்துள்ள நூல் ..........................
அ. திருக்குறள் மெய்ப்பொருளுரை ஆ.உலகியல் நூறு
இ. நூறாசிரியம் ஈ.
மகபுகுவஞ்சி
3. தென்னன் மகளே – இவ்வடியில் தென்னன் என்று கனிச்சாறு குறிப்பிடுவது ........................ மன்னன்.
அ.
சேர ஆ. சோழ இ. பாண்டிய ஈ. பல்லவ
4. பொருந்தாததைக் குறிப்பிடு
அ. கனிச்சாறு ஆ தமிழ்ச்சிட்டு இ. நூறாசிரியம்
ஈ. பாவியக்கொத்து
5. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் ..........................................
அ. செந்தில் ஆ. முத்து இ. மாணிக்கம்
ஈ. சரவணன்
6.
தமிழ் அரசாண்ட கண்டம்………………..…. அ)ஆசியா ஆ)குமரி
இ)ஐரோப்பா ஈ)ஆப்பிரிக்கா
7. அன்னைமொழியே, அழகார்ந்த செந்தமிழே – என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் ........................................
அ. கனிச்சாறு ஆ. மகபுகுவஞ்சி இ. பள்ளிப்பறவைகள்
ஈ. பாவியக்கொத்து
8. .............................. இதழ் மூலம் தமிழுணர்வை உலகெங்கும் பரப்பியவர் பெருஞ்சித்திரனார்.
அ குயில் ஆ மணிமொழி
இ தென்மொழி ஈ மணிச்சிட்டு
9. தும்பி என்பதன் பொருள் ....................
அ பூச்சி ஆ வண்டு இ நண்டு ஈ தந்தம்
10. செய்தி 1 – பெருஞ்சித்திரனாரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.
செய்தி 2 – தென்மொழி என்பது பெருஞ்சித்திரனார் இயற்றிய நூல்.
அ. செய்தி 1 தவறு, செய்தி 2 சரி
ஆ. செய்தி 1 சரி, செய்தி 2 தவறு
இ.
இரண்டும் சரி ஈ. இரண்டும் தவறு
11. மன்னுஞ்சிலம்பே, மணிமேகலை வடிவே – இவ்வரி குறிப்பிடுவது ...........................................
அ இரட்டைக்காப்பியங்கள் ஆ இதிகாசங்கள்
இ
எட்டுத்தொகை ஈ சிறு
காப்பியங்கள்
12. அன்னை மொழியே…என்ற பாடல் இடம்பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு ………
அ)மொழிவாழ்த்து ஆ)தேன்மொழி இ)கனிச்சாறு ஈ)தமிழ்ச்சிட்டு
13. அந்தும்பி பாடும் அதுபோல யாம்பாடி
முந்துற்றோம்
யாண்டும் முழங்கத் தனித்தமிழே
- அடி
எதுகையை எழுதுக.
அ. அந்தும்பி-அதுபோல ஆ. முந்துற்றோம்-முழங்க