உமிழ்ந்திடும் கரிவளி
பெருகிட தினம் ஒரு தொழிற்சாலை வகுக்கிறாய்!
உயிரின் மதிப்புத்
தெரியாமல் நீ
அறிவியல் வளர்க்கிறாய்!
பெருகிடும் மக்கள்
கூட்டத்திற்காய்ப்
புவியை அழிக்கிறாய்!
பெருமை மிகுந்த
இயற்கைக் காற்றில்
கரி வளி கலக்கிறாய்!
உயிர்வளி பெருகிட
பசுமரக் கன்றினை
உடனே நடுகிறாய்!
கரிவளி நிறைத்த காரணத்தால் இன்று உயிர்வளி சுமக்கிறாய்!
புரியுது தெளியுது
உயிர்வளி தருவது
மரம் என்றுணர்கிறாய் !
காற்றை விலைக்கு
வாங்காத் தலைமுறை இதுவென்று கூவி அழைக்கிறாய்!
-மு.முத்துமுருகன்
கல்லூரணி