1.வேர்பாரு,தழைபாரு மிஞ்சினக்கால் பற்ப செந்தூரம் பாரே – இது யார் கூற்று?
விடை – சித்தர்கள்
2.கோடிட்ட
இடங்களை நிரப்புக.
விடை –
அ.மரபு சார்ந்த
மருந்து வேலை செய்யும் விதத்தைப் புரிந்துகொள்வதற்கு நவீன அறிவியல் பயன்படுகிறது.
ஆ.தமிழரது நிலம், நிறைந்த பண்பாடுகளும் தத்துவங்களும் அடங்கியது.
3.சரியா, தவறா.
விடை –
அ.நம்நாட்டின்மீது
நிகழ்ந்த படையெடுப்புகள் தமிழர் மருத்துவத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. –
தவறு.
ஆ.சமண, பௌத்த காலத்தில் அந்தந்த மதங்களின் கூறுகள் நம்
மருத்துவத்தில் இருந்தன. –சரி.
4.விலை உயர்ந்த
உணவுதான் சரியான உணவு – இக்கூற்றை நீ ஏற்றுக்கொள்கிறாயா? இதைப்பற்றி உன் கருத்தினை எழுது.
விடை – நான்
ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
விலை குறைந்த
தானியங்கள், நெல்லிக்காய் போன்ற சத்தான உணவுப்பொருள்கள்
அதிகம் உள்ளன. அவை உடலுக்கு நலம் தருவன.
5.பாடல் கூறும்
கருத்து.
விடை –
உடம்பு அழிந்தால்
உயிரும் அழியும்.
உயிர் அழிந்தால்
மெயஞ்ஞானம் பெற இயலாது.
உடலை வளர்க்கும்
வழிகளை அறிந்து உடலையும்
உயிரையும்
வளர்த்தேன்.
6.நடைமுறையிலுள்ள
மருத்துவ முறைகள்
விடை –
இயற்கை மருத்துவம், சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, அலோபதி, ஓமியோபதி.
7.குறிப்புகளை
விரித்து எழுதுக.
விடை –
தமிழர் மருத்துவம் சிறந்த மருத்துவமாக
விளங்கியது. மருத்துவத்தில் தனித்துவமான பார்வை இருந்தது. அது சூழலுக்கு இசைந்தது. தமிழர் மருத்துவம்
எவ்வகையிலும் சுற்றுச்சூழலைச் சிதைக்காது. அது வாழ்வியல் மருத்துவமாக விளங்கியது.
நோயின் தன்மை அறிந்து அதனை முழுமையாகக் குணப்படுத்த நோய்நாடி நோய் முதல்நாடி என்ற
குறளின் வழி அமைந்தது. அதனால் நம்மை நோயில்லாத மனிதராக்குகிறது.
8.நிரப்புக
விடை –
- மஞ்சள்
காமாலையைக் குணப்படுத்துவது கீழாநெல்லி.
- நச்சுக்கடிகளுக்கு
நல்ல மருந்தாக விளங்கும் மூலிகைச்செடி குப்பைமேனி.
- தலைமுடி
நன்கு வளரப் பயன்படுவது கற்றாழை.
- கண்பார்வையைத்
தெளிவாக்குவது கரிசலாங்கண்ணி.
- இளைப்பிருமல்
போக்குவது தூதுவளை.
9. விடை –
- வயிற்றுச்சூட்டைத்
தணிப்பது சீரகம்.
- வெங்காயத்தின்
பயன் – குளிர்ச்சியை உண்டாக்கிக் குருதியைத் தூய்மைப்படுத்தும்.
- நெஞ்சிலுள்ள
சளியை நீக்குவது மஞ்சள்.
- குருதியின்
பொருள் இரத்தம்.
- தலைப்பு
– உணவே மருந்து.
10.மருத்துவரும்
மாணவரும் உரையாடல்
விடை –
மாணவர் – ஐயா, வணக்கம். நாம் உணவை எவ்வாறு உண்ண வேண்டும்?
மருத்துவர் –
சுவைக்காக உண்ணாமல், உடல் நலத்துக்காக உண்ண வேண்டும். நன்றாக மென்று விழுங்க வேண்டும்.
அப்போதுதான் உமிழ்நீர் சுரந்து உணவுடன் கலக்கும்.
மாணவர் – அதனால்
என்ன பயன் ஐயா?
மருத்துவர் – உணவு
நன்கு செரிக்கும்.
மாணவர் – காய்களை
எவ்வாறு உண்ண வேண்டும் ஐயா?
மருத்துவர் – காய்கறிகளை முக்கால் வேக்காட்டில் வேகவைத்து உண்ண வேண்டும்.
வேகவைத்த காய்கறிநீரை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மாணவர் – அதனால் என்ன பயன் ஐயா?
மருத்துவர் – அதில் மிகுதியான சத்துகள் இருக்கும்.
மாணவர் – நன்றி ஐயா.