1.அகர வரிசை
மட்டு, வாரி, முட்டு,
பட்டிடுவாய், பாயில், விழுந்திடுவாய்
விடை – பட்டிடுவாய், பாயில், மட்டு, முட்டு, வாரி, விழுந்திடுவாய்.
2.கோடிட்ட இடங்களை நிரப்புக.
விடை – அ. நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்.
ஆ. உடம்பை வளர்த்தேன் உயிரை வளர்த்தேனே.
இ. உணவே மருந்து.
ஈ. அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது.
3.சரியா, தவறா.
விடை –
அ.அழகுக்காக மட்டும் உடலெடையைக் குறைப்பதும், மிகவும்
மெலிவதும் நல்லவையல்ல. – சரி.
ஆ.தமிழ்மக்கள் உடற்கூறுகள் பற்றிய அறிவிலும், மருத்துவம்
பற்றிய புரிதலிலும்
சிறந்து விளங்கினர். – தவறு.
4.விடையளி.
விடை –
அ.நினைவாற்றல் பெருக உதவும் கீரை வல்லாரைக்கீரை.
ஆ.மணித்தக்காளிக்கீரை வாய்ப்புண், குடற்புண்ணைக் குணமாக்கும்.
இ.முசுமுசுக்கைக் கொடியின் வேரைப் பசும்பாலில் ஊறவைத்து, உலர்த்திப் பொடியாக்கிப் பசும்பால், மிளகுப்பொடி,
சருக்கரையுடன் உண்டு வந்தால் இருமல் நீங்கும்.
ஈ.வெந்தயக்கீரை – இரும்புச்சத்து தரும், சிறுகீரை – பித்தத்தைக்
குறைக்கும்.
உ. தலைப்பு - கீரையும் மருத்துவமும்
5.பாடலின் பொருள்.
விடை –
வீட்டிலும் வீதியிலும் மருந்து இருக்கிறது. பாட்டியிடம் நாம் கேட்டால் சுக்கு, மிளகு, சீரகம், இஞ்சி,
திப்பிலி சேர்த்து கைக்குள் வைத்துக் கசக்கிக் கொடுத்து நம்மைக்
காப்பாள்.
6.கோவிட் – 19 வைரஸ்
விடை –
இது உலகளாவிய தொற்று நோய்.
2019, திசம்பரில் சீனாவில் கண்டறியப்பட்டது.
கைகழுவுதல், முகக் கவசம் அணிதல் இதற்கான முன்னெச்சரிக்கை
நடவடிக்கை.
ஊரடங்கு, சமூக இடைவெளியே பரவலைக்
குறைக்கும்.
7.எச்சங்கள் விடை –
அடிச்சொல் |
பெயரெச்சம் |
வினையெச்சம் |
செல் |
சென்ற |
சென்று |
வா |
வந்த |
வந்து |
பற |
பறந்த |
பறந்து |
எடு |
எடுத்த |
எடுத்து |
பார் |
பார்த்த |
பார்த்து |
8.சரியான இணை
விடை –
படித்த புத்தகம் – தெரிநிலைப் பெயரெச்சம்.
9.எச்சங்கள்
விடை –
குதித்து, கடந்து, விரிந்த, இறங்கி, தவழ்ந்து, ஏறி, நிரப்பி, ஓடி.