1.கல்வெட்டுகளிலுள்ள
எந்த எழுத்துகளுக்குக் குறில், நெடில் வேறுபாடு இல்லை.
விடை – எகர,ஒகரம்
2.தமிழெழுத்துகளில்
மிகப்பெரும் சீர்திருத்தங்கள் செய்தவர்
விடை – வீரமா
முனிவர்.
3.பொருத்துக.
விடை –
அ |
ஓலைச்சுவடி |
வளைகோடுகள் |
ஆ |
செப்பேடுகள் |
ஏழாம் நூற்றாண்டு |
இ |
கல்வெட்டுகள் |
நேர்கோடு |
ஈ |
கண்ணெழுத்துகள் |
கடைச்சங்க காலம் |
4.கோடிட்ட இடங்களை
நிரப்புக.
விடை –
அ.ஓர் ஒலிக்கு ஓர்
எழுத்து என உருவான நிலையை ஒலி எழுத்து நிலை என்பர்.
ஆ.கண்+எழுத்துகள் – சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் கண்ணெழுத்துகள்
ஆகும்.
இ.மனிதன் தன்
கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்க மொழியைக் கண்டுபிடித்தான்.
5.சரியா தவறா.
விடை –
அ. தவறு
ஆ. சரி
இ. சரி
ஈ. சரி
6.தமிழ் வரிவடிவ
வளர்ச்சியினை வரிசைப்படுத்துக.
விடை –
அ. சைகை, ஒலி, பேச்சு, எழுத்து.
ஆ. கல்வெட்டு, செப்பேடு, அச்சுக்கலை
7.கல்வெட்டுகள், செப்பேடுகளில் காணப்படும் வரிவடிவங்கள்
விடை –
வட்டெழுத்து
தமிழெழுத்து
8.பெரியார் செய்த
எழுத்துச் சீர்திருத்தங்கள்
விடை –
ணா, ணை, ணொ, ணோ, லை, ளை, றா, றொ, றோ, னா, னை, னொ, னோ.
9. வட்டெழுத்து, தமிழெழுத்து என்றால் என்ன?
விடை –
வட்டெழுத்து
வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய
தமிழ் எழுத்து.
தமிழெழுத்து
இக்காலத்தில் எழுதப்படும் தமிழ்
எழுத்துகளின் பழைய வரிவடிவம்.
10.தமிழ்மொழியின்
வரிவடிவ வளர்ச்சி
விடை –
பண்டைக்காலத்தில்
தமிழ் மொழியிலுள்ள எல்லா எழுத்துகளும் நாம் இன்று எழுதுவது போன்ற வடிவத்தில்
எழுதப்படவில்லை. அவை காலத்திற்கேற்பப் பல உருவ மாற்றங்களைப் பெற்றுத்தான் இக்கால
வடிவத்தை அடைந்திருக்கின்றன. இவ்வாறு எழுத்துகளில் மாற்றங்கள் ஏற்பட எழுதப்படும்
பொருள்களின் தன்மை, அழகுணர்ச்சி போன்றவை
காரணங்களாக அமைகின்றன.
பழங்காலத்தில்
கற்பாறை, செப்பேடு, ஓலை போன்றவற்றில் எழுதினர். அந்தந்தப்
பொருள்களின் தன்மைக்கு ஏற்ப எழுத்துகளின் வடிவங்கள் அமைந்தன. பாறைகளில்
செதுக்கும்போது வளைகோடுகளைப் பயண்படுத்த முடியாது என்பதால் நேர்கோடுகள்
பயன்படுத்தப்பட்டன. ஓலைகளில் நேர்கோடுகளையும் புள்ளிகளையும் எழுதுவது கடினம் என்பதால்
வளைகோடுகளை அதிகம் பயன்படுத்தினர்.
சில எழுத்துகளை
அழகுபடுத்துவதற்காக அவற்றின் மேற்பகுதியில் குறுக்குக்கோடு இடப்பட்டது. பின்னர்
அவையே நிலையான வடிவங்களாக அமைந்துவிட்டன. எகர ஒகர குறில் எழுத்துகளைக் குறிக்க
எழுத்துகளின் மேல் புள்ளி வைக்கும் வழக்கம் தொல்காப்பியர் காலம் முதல் இருந்து
வந்துள்ளது. நெடிலைக் குறிக்க ஒற்றைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் துணைக்கால்
பயன்படுகின்றது.
தமிழ் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தத்தைச் செய்தவர் வீரமா முனிவர்.
எகர ஒகர வரிசை எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை அவர் களைந்தார்.
பெரியார் சில எழுத்துகளைச் சீர்திருத்தம் செய்தார். காலந்தோறும் ஏற்பட்ட இவ்வாறான
வரிவடிவ வளர்ச்சி காரணமாகத் தமிழ்மொழி கணினிப் பயன்பாட்டிற்கு ஏற்ற மொழியாகவும்
ஆகியிருக்கிறது.