கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, October 10, 2021

எட்டாம் வகுப்பு தமிழ் வினாடிவினா 3 விடைக்குறிப்பு 8th TAMIL QUIZ ANSWER KEY

 1.உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது எவ்விடங்களில் பொருந்தி வருவதனால்

எழுத்துகள் பிறக்கின்றன?

விடை – மார்பு, தலை, கழுத்து, மூக்கு.

2.எழுத்துகள் வேறு வேறு ஒலிகளாகத் தோன்ற காரணமான உறுப்புகள் யாவை ?

விடை – இதழ், நாக்கு, பல், மேல்வாய்.

3.கோடிட்ட இடங்களை நிரப்புக.

விடை –

அ.மேல்வாய்ப் பல்லைக் கீழ் உதடு பொருந்துவதால் வ் என்னும் எழுத்துப் பிறக்கிறது.

ஆ.ய் என்னும் எழுத்தின் பிறப்பிடம் கழுத்து ஆகும்.

4.சரியா தவறா.

விடை –

அ.எழுத்துகளின் பிறப்பினை இடப்பிறப்பு, முயற்சிப்பிறப்பு என இரண்டு வகையாகப் பிரிப்பர். – சரி

ஆ.சார்பெழுத்துகள் முதலெழுத்துகளைச் சாராமல் தனியாகப் பிறப்பதற்குரிய முயற்சிகளைக் கொண்டு பிறக்கின்றன. - தவறு

5.பொருத்துக.

விடை –

வாயைத் திறத்தல்

இதழ்கள் குவிதல்

நாக்கின் முதற்பகுதி மேல் அண்ணத்தில் ஒட்டுதல்

இதழ்கள் ஒட்டுதல்

6.பேச்சுறுப்புகளின் பெயர்கள்

விடை –

இதழ், மேல்வாய்ப்பல், நுனி அண்ணம், இடை அண்ணம், அடி அண்ணம், நுனி நா, இடை நா, அடி நா, மேலுதடு, கீழுதடு.

7. விடை –

 

எழுத்துகள்

மி

ழ்

வகை

உயிர்மெய்

உயிர்மெய்

மெய்

பிறக்கும் இடம்

மார்பு

மூக்கு

கழுத்து

 

8. விடை –

படங்கள்

பிறக்கும் உயிரெழுத்துகள்

1

-

,

2

-

, , , ,

3

-

, , , ,

 

9. விடை –

  1. கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கும் 12 எழுத்துகளுக்குப் பெயர் என்ன?
  2. வல்லின மெய்யெழுத்துகள் பிறப்பு குறித்து எழுதுக.
  3. மெல்லின மெய்யெழுத்துகள் பிறப்பு குறித்து எழுதுக.
  4. கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கும் மெய்யெழுத்துகள் எவை?
  5. தலையை இடமாகக் கொண்டு பிறக்கும்  எழுத்து எது?

10.மெல்லின எழுத்துகளின் முயற்சிப்பிறப்பு

விடை –

ங்

முதல் நா அடி அண்ணத்தைப் பொருந்த

ஞ்

இடை நா இடை அண்ணத்தைப் பொருந்த

ண்

நுனி நா நுனி அண்ணத்தைப் பொருந்த

ந்

மேல்வாய்ப்பல்லின் அடியை நாவின் நுனி பொருந்த

ம்

மேல் கீழ் உதடுகள் பொருந்த

ன்

மேல்வாயை நாக்கின் நுனி மிகப்பொருந்த

 

தமிழ்த்துகள்

Blog Archive