1.அணி என்ற சொல் உணர்த்தும் பொருள்
விடை – அழகு
2.கோடிட்ட இடங்களை
நிரப்புக.
விடை –
அ.கணைகொடிது
யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன
வினைபடு பாலால்
கொளல்.
ஆ.தன்குற்றம் நீக்கிப்
பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு.
3.சரியா தவறா.
விடை –
அ.நேராக
இருந்தாலும் அம்பு கொடியதாக இருக்கிறது. சரி
ஆ.வளைவுடன்
இருப்பினும் யாழின் கொம்பு இனிமையைத் தருகிறது. சரி
4.குறளினைச் சீர்பிரித்து
எழுதுக.
விடை –
தக்கார் தகவிலர்
என்பது அவரவர்
எச்சத்தால் காணப்
படும்.
5.தொடரில் அமைத்து
எழுதுக.
விடை –
அ.தக்கார் –
நடுவுநிலைமை உடையவர்
நீதிபதி நடுவுநிலைமை
உடையவராக இருக்கவேண்டும்.
ஆ.எள்ளற்க –
இகழ்தல் கூடாது
நாம் எவரையும் இகழ்தல்
கூடாது.
6.திருக்குறள்
சீர்களை முறைப்படுத்தி எழுதுக.
விடை –
கடல்ஓடா கால்வல்
நெடுந்தேர் கடல்ஓடும்
நாவாயும் ஓடா
நிலத்து.
7.வலியில்
நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.
குறளில் மாறி
இடம்பெற்றுள்ள மரபுத்தொடர்
விடை –
புலித்தோல்
போர்த்திய பசு
8.உளர்என்னும்
மாத்திரையர் அல்லால் பயவாக்
களர்அனையர் கல்லா தவர்.
குறளில்
பயின்றுவரும் எதுகைச் சொற்கள்
விடை –
உளர்என்னும்
களர்அனையர்
9.சமன்செய்து
சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்
கோடாமை சான்றோருக்கு அணி.
குறளில்
பயின்றுவந்துள்ள அணியைப் பொருளுடன் பொருத்தி எழுதுக.
விடை –
இக்குறளில்
உவமைஅணி பயின்றுவந்துள்ளது.
உவமை – துலாக்கோல்
உவமேயம் –
சான்றோர்
உவமஉருபு - போல்
10.கதைக்குப்
பொருத்தமான திருக்குறள்
விடை –
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.