கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, October 10, 2021

எட்டாம் வகுப்பு தமிழ் வினாடிவினா 8 விடைக்குறிப்பு 8th TAMIL QUIZ ANSWER KEY

 1.கோடிட்ட இடங்களை நிரப்புக.

விடை –

நன்செய் புன்செய்க்கு உணவை ஊட்டி

          நாட்டு மக்கள் வறுமை ஓட்டிக்

கொஞ்சிக் குலவிக் கரையை வாட்டிக்

          குளிர்ந்த புல்லுக்கு இன்பம் கூட்டி

2.பாட இந்த ஓடை எந்தப்

                                      பள்ளி சென்று பயின்ற தோடி

   ஏடு போதா இதன்கவிக் கார்

                                      ஈடு செய்யப் போராரோடி.

பாடலிலுள்ள இயைபுச் சொற்கள்

விடை – பயின்றதோடி - போராரோடி

3.உரைப்பத்திக்குப் பொருத்தமான ஓடைப் பாடலடிகள்.

விடை –

நெஞ்சில் ஈரம் இல்லார் நாண

          நீளுழைப்பைக் கொடையைக் காட்டிச்

செஞ்சொல் மாதர் வள்ளைப் பாட்டின்

          சீருக்கு ஏற்ப முழவை மீட்டும்.

4.வினைச்சொற்களை, இறந்தகால வினைமுற்றுகளாக மாற்றி எழுதுக.

விடை –

அ.அம்மா நேற்று உணவு சமைத்தார்.

ஆ.ஆசிரியர் மாணவர்களை வாழ்த்தினார்.

இ.ஆடுகள் புல் மேய்ந்தன.

ஈ.மாணவர்கள் பள்ளிக்குச் சென்றனர்.

5.பொருத்தமான ஏவல் வினைமுற்றுகளைக் கொண்டு நிரப்புக.

விடை –

அ.காலையில் படி.

ஆ.மாலையில் விளையாடு.

இ.குளித்தபின் உண்.

ஈ.கசக்கிக் கட்டு.

உ.இனிமையாகப் பேசு.

6.விடுபட்ட அடிகளை நிரப்புக.

விடை –

அ.தக்கார் தகவிலர் என்பது அவரவர்

        எச்சத்தால் காணப் படும்.

ஆ.கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன

        வினைபடு பாலால் கொளல்.

இ.விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

        கற்றாரோடு ஏனை யவர்.

7.தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்

   என்குற்றம் ஆகும் இறைக்கு. - திருக்குறளுக்குப் பொருத்தமான கதை

விடை –

மாலா மணியின் துணைவி. அவர் அடிக்கடி கொட்டாவி விட்டுக்கொண்டே இருப்பார். அது பழக்கமாகி விட்டது. ஆனால் மணிக்கோ அது பிடிக்கவில்லை. 
மிகவும் வருத்தத்துடன் இருந்த மாலாவைப் பார்த்த ராமன் என்ன நடந்தது என்று விசாரித்தார். மாலாவோ
, நான் கொட்டாவி விடுவது பிடிக்காமல் கணவர் எனது இருப்பிடத்திற்கு வருவதையே நிறுத்திவிட்டார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை" என்று வருந்தினாள். ராமன் இப்பிரச்சனையைத் தீர்ப்பதாக மாலாவுக்கு வாக்குகொடுத்துச் சென்றான். ஒரு நாள் அரசு அதிகாரிகள் சிலர் மணியைக் காண வந்தனர். அந்த அதிகாரிகள் நாட்டில் பயிர்வளத்தை எப்படி மேம்படுத்துவது என்பது பற்றி மணியுடன் விவாதித்துக் கொண்டிருந்தனர். ராமனோ அவர்களது பேச்சினுள் புகுந்து "பயிர் நன்றாக வளர வேண்டுமானால் யாரும் கொட்டாவி விடக்கூடாது" என்றான். மணியும் மற்றவர்களும் ராமனை வினோதமாகப் பார்த்தனர். ராமனோ விடாமல் "விவசாயம் செய்பவர்கள் யாரும் வாழ்நாள் முழுவதும் கொட்டாவி விடவே கூடாது. அப்போது தான் பயிர் நன்றாக வளரும்" என்றான். மணிக்குக் கோபம் வந்துவிட்டது. "ராமா, இது என்ன வினோதம், விவசாயத்திற்காக வாழ்நாள் முழுவதும் கொட்டாவி விடாமல் இருக்கமுடியுமா?" என்றார். உங்கள் முன்னால் கொட்டாவி விடும்போது உங்களுக்கு கோபம் வருவதைப் போல, பயிர்கள் முன்னால் கொட்டாவி விட்டால் பயிர்கள் கோபித்துக் கொள்ளாதா? கேவலம் கொட்டாவியால் ஒருவர் வாழ்க்கை நாசம் ஆக வேண்டுமா?" என்று கூறிவிட்டு மணியை ஓரக்கண்ணால் பார்த்தார் ராமன். மணிக்கு ராமன் என்ன சொன்னார் என்று புரிந்து போனது. அப்போதே கேவலம் கொட்டாவிக்காக தன் மனைவியைக் கோபித்துக் கொண்டேனே என்று வருந்தினார். ராமன் புத்திசாலித்தனமாக தகுந்த நேரத்தில் அதைப் புரியவைத்தான்.

தமிழ்த்துகள்

Blog Archive