கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, June 16, 2020

நாக குமார காவியம் NAAGA KUMAARA KAAVIYAM

நாககுமார காவியம் அல்லது நாகபஞ்சமி கதை எனப்படும் இந்நூல், தமிழில் தோன்றிய சிறு காப்பியங்களில் ஒன்றாகும். இதை எழுதியவர் யார் என்ற தகவல்கள் கிடைக்கவில்லை. சிரோணிக நாட்டு மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்கிக் கௌதமர் என்பார் அவனுக்குக் கதை கூறும் பாங்கில் இந்நூல் அமைக்கப்பட்டு உள்ளது. 

170 விருத்தப்பாக்களால் ஆக்கப்பட்ட இந்நூல் ஐந்து சருக்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

சமண சமய நூலான நாககுமார காவியம் அச் சமயக் கொள்கைகளை நூலில் விளக்க முற்படுகிறது. 

இளமைக் காலத்தில் இன்பம் துய்ப்பதிலேயே தனது காலத்தைக் கழித்த நாககுமாரன் தனது இறுதிக் காலத்தில் வாழ்வின் நிலையாமையை உணர்ந்து துறவு மேற்கொள்வதே இக் கதையின் சாரம். 

பிறவிச் சுழலில் இருந்து விடுபட்டு முத்தி பெறுவதற்குத் துறவின் இன்றியமையாமை பற்றிப் பேசுவதே இக் கதையின் நோக்கமாகத் தெரிகிறது.

இந்நூல் ஐந்து (5) சருக்கங்களில் நூற்றி எழுபது (170) விருத்தப்பாக்களில் நாகபஞ்சமியின் கதையை உரைக்கின்ற நூலாகும். 

இக்கதையின் நாயகன் ஐந்நூற்றி பத்தொன்பது (519) பெண்களை மணம் செய்கிறார். 

இந்நூல் 16ம் நூற்றாண்டினைச் சார்ந்தது. 

தமிழ்த்துகள்

Blog Archive