காளமேகப்புலவர் KAALAMEGA PULAVAR
ஆலங்குடி யானை யாலால முண்டானை
ஆலங்குடியா னென்றார் சொன்னார் – ஆலங்
குடியானே யாயிற் குவலையத்தா ரெல்லாம்
மடியாரோ மண்மீ திலே விளக்கம்
ஆலங்குடியானை ஆலாலம் உண்டானை ஆலங்குடியான் என்று ஆர் சொன்னார் ஆலம் குடியானே ஆயின் குவலையத்தார் எல்லாம் மடியாரோ மண் மீதிலே . திருவாலங்குடியில் கோயில் கொண்டுள்ள சிவன் ஆலாலம் (ஆலகால விடம்) உண்டான். அவனை ஆலம் (விடம்) குடிக்காதவன் என்று ஆர் சொல்லிவைத்தார்கள்? அவன் நஞ்சினைக் குடிக்காவிட்டால் மண்ணுலகில் உள்ள மக்களெல்லாம் அந்த நச்சுக் காற்றை உட்கொண்டு மடிந்துபோவார்கள் அல்லவா?
பாடல்
ஆலங்குடியா னென்றார் சொன்னார் – ஆலங்
குடியானே யாயிற் குவலையத்தா ரெல்லாம்
மடியாரோ மண்மீ திலே